மு வ கடிதம் -தேர்வு நோக்கில் - சுருக்கமாக
மு வ கடிதம்
தம்பிக்கு என்னும் தலைப்பில் மு வ அவர்கள் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார்
அதில் நமக்கு பாடத்திட்டமாக இருப்பது எழில் என்பவருக்கு எழுதிய கடிதம் முதல்
கடிதம். அதில் மு வ வளவன் எனும் பெயரில் எழுதிய கடிதங்கள் அனைத்தும் மிகவும்
மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றன.
எழில் எழுதியவை
தன் அன்னைக்கு எழில் எழுதிய கடிதங்களை அன்னையின் அனுமதியோடு படித்துவிட்டு விடை எழுதுகிறார். அந்தக் கடிதங்கள் மிகவும் சுவையாக இருந்தன என்றும் அவை அனைத்தும் என் அன்னைக்கு நீ எழுதிய கடிதங்கள் தானே நான் எப்படி படித்தேன் என்று உனக்கு தோன்றலாம் . உன் கடிதங்கள் அன்னை மட்டுமல்லாமல் நானும் படிப்பதற்கு தகுதியானவை தான், படிக்க வேண்டிய கடிதங்கள் தான் என்று காரணம் கூறுகிறார்.
அன்னையைக் கேட்டுப் படித்தேன்
ஒருவர் மற்றொருவருக்கு எழுதிய கடிதத்தைப் படிப்பது முறை இல்லை என்பதற்காக தான் அந்த செயலை செய்து விட்டோம் என்பதை நியாயப்படுத்தும் விதமாக அன்னையிடம் கேட்டுத் தான் படித்தேன். நீ எழுதிய எல்லாக் கடிதங்களையும் ஒரு கட்டாகக் கட்டி அன்னை பீரோவில் எழில் எழுதியவை என்று வைத்திருந்தார். இது என்ன என்று கேட்கும் போது உன் கடிதங்கள் என்று சொல்லி என்னையும் படிக்கச் சொன்னார் பிறகு தான் பார்த்தேன் படித்தேன் என்கிறார் .
என்னைவிட நல்லவன் :
எழிலின் கடிதங்களைப் படித்த மு வ அவர்கள் நீ உள்ளத்தில் உள்ளதை உணர்ந்ததை வெளிப்படையாக கடிதங்களில் கொட்டி விட்டாய். நான் உணர்ச்சி இல்லாதவன் போல் நடிக்கிறேன். உனக்கும் எனக்கும் இதுதான் வேறுபாடு வெளிப்படையாக சொல்லப்போனால் என்னை விட நீ நல்லவன் என்கிறார் மு வ.
வல்லவனாகவும் இருக்க வேண்டும்:
ஒருவரிடத்தில் நல்ல குணம் நல்ல தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவர்களிடம் வல்லமையும் இருக்க வேண்டும் (வலிமையும் இருக்க வேண்டும் வன்மையும் இருக்க வேண்டும் ) இருந்தால் தான் இந்த உலகில் வாழ முடியும் என்கிறார். நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கி கண்ணீர் வடித்து காணாமல் போய் இருக்கிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராத வகையில் நசுக்குண்டு அழிந்து போகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடு வரையில் இதற்குச் சான்றுகள்.
சான்றுகள்:
தமிழ்நாட்டில் பழங்காலத்தில் நல்லரசுகள் கலங்கி அழிந்தது. ஜெர்மனி ஜப்பான் முதலான வல்லரசுகள் அழிவுற்றதையும் கண்கூடாக கண்டிருக்கிறோம். நல்ல மருமகளாக வந்து வாழத் தொடங்கி குடும்பத்தாரின் இன்னலைப் பொறுக்க முடியாமல் தற்கொலையாலோ மன வேதனையாலோ மாண்டக் கதைகளை ஊர்களில் கேட்டிருக்கிறோம். மகனையும் மருமகளையும் விருப்பம்போல் ஆட்டி வைத்து வல்லமை பெற்ற மாமியார் சில ஆண்டுகளுக்குப் பின் வாயும் கையும் அடங்கி மூளை வீடும் வேலை கஞ்சியும் கிடைத்தால் போதும் என்று ஏங்கும் கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்த விதியை நாம் இனியும் மறந்து வாழக்கூடாது. தமிழவர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும் இனிமேல் வல்லவர்களாகவும் வாழ வேண்டும் என்று கூறுகிறார்.
உடலும் உயிரும்
வளவனுக்கு அவர் மேலும் அறிவுரைகளைக் கூறுகிறார் . அதாவது வாழ்க்கைப் பகுதியில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவது இல்லை. உடலை மட்டும் போற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிந்து போகிறான் . அவனுடைய உள்ளம் அவனுக்கு பகையாகி அவனைத் தீய வழியில் செலுத்தி விடுகிறது உள்ளத்தை மட்டும் தூய்மையாக போற்றி வைத்திருப்பவன் காப்பாற்றுகிறவனும் நடுநடுவே அல்லாடுகிறான். அவனுடைய உடல் பல நோய்க்கிருமிகளுக்கு இடம் கொடுத்து அவருடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லப்படுத்துகிறது. உடலும் வேண்டும் உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.
திருக்குறள்
மரம் வானளாவ உயர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் மண்ணை மறந்து வாழ முடியாது. வானைப் புறக்கணித்து கிளைகளை உயர்த்தாமலும் வாழ முடியாது. இந்த உண்மையை நன்றாக உணர்ந்தவர் திருவள்ளுவர் . அதனால்தான் அறநெறியும் பொருள் வளமும் வேண்டும் இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள். அறத்தை நினைத்து பொருளை மறக்கும் படியாக திருவள்ளுவர் கூறவில்லை. பொருளையோ இன்பத்தையோ போற்றி அறத்தை மறந்து விடும்படியாகவும் அந்த பெருந்தகை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுத்தி இருப்பதை காணலாம் . வாழ்க்கையின் பல பகுதிகளையும் போற்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்த வந்த திருவள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார் தமிழராகிய நாம் திருவள்ளுவரைப் பெற்று இருக்கிறோம் திருக்குறளையும் பெற்றிருக்கிறோம் . நம்மில் சிலர் அந்த நூலை கற்றும் இருக்கிறோம். ஆனால் திருவள்ளுவர் கூறியபடி வாழவில்லை. நல்ல தன்மை தேடுகிறோம் வல்லமை தேடவில்லை என்று கூறிவிட்டு இதனை நீ உடனே மறுக்கலாம் அதற்கு முன்பே நான் காரணம் சொல்லி விளக்கி விடுகிறேன் என்கிறார் .
தமிழ் மொழி
தமிழ் மொழி நல்ல மொழி தான் ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையை வல்லமையாக வைத்து பேசப்படவில்லையா?. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு தந்தோமா ?நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி என்கிறார் . அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான் நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால் தான் எத்தனையோ இழந்தனர்.
யாழிசை
தமிழ்க் கலை நல்ல கலை தான். அதிலும் யாழிசை நல்ல இசை ஆனால் அந்த யாழ் இசை நீண்ட காலம் வாழ்ந்துதான் இப்போது வழக்கில் இருக்கிறதா இல்லை. முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள். பிறகு பொதுமக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார் என்கிறார் .
அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி :
அன்று அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி அதனால் யாழுக்கு அந்த நிலைமை ஆனால் இப்போது மக்களாட்சி என்று நீ சொல்லலாம். நீ உன்னையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்கு சொல்கிறேன். பொதுமக்களின் விருப்பம் போல் ஆட்சி நடப்பதாக சொன்னால் பொதுமக்கள் போரை விரும்புகிறார்களா? அணுகுண்டையும் விரும்புகிறார்கள் ?வேலை இல்லாத் திண்டாட்டத்தை விரும்புகிறார்களா? குடியிருக்க வீடும் அறிவும் வளர்க்க கல்வியும் உடல் வளர்க்க கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புகிறார்களா? என்று மெல்ல எண்ணிப்பார் உனக்கே தெரியும் என்று விளக்குகிறார் .
களிமண்
பொதுமக்களுக்கு தங்கள் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் சேர்த்து எண்ணத் தெரியவில்லை. அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள் யார் யாரோ நீர் சேர்த்து பிசைந்து தமக்கு வேண்டிய வாரெல்லாம் உருவங்களை செய்து கொள்கிறார்கள். இன்று ஆட்சி எல்லாம் ஓட்டு போடும் மக்களின் கைகளைப் பொருத்தது என்று வைத்துக் கொள்வோம் அவர்கள் ஓட்டு போடும் போது தங்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா? அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும் என்று வினாவுகிறார். வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா களிமண் பிசைகிறவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவது உண்டா அவர்களை மாற்றுவதற்காக அல்லது அவருடைய மனதில் நல்லெண்ணம் ஏற்படுவதற்காக நீயும் நானும் ஏதாவது செய்தோமா ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடு தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது குற்றமல்லவா மறந்து போன அந்த யாழை பற்றி பழங்காலத்து பாணரும் விரலியரும் பொருளும் கூத்தரும் நம்மைப் போலத்தான் ஏமாந்த எண்ணம் எண்ணிக் கொண்டு நல்லவர்களாக வாழ்ந்திருக்க வேண்டும் அந்த யாழின் அருமை பெருமைகளை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தார்கள் அதை வாழ வைக்கும் வல்லமை பற்றி அவர்கள் என்ன தவறினார்கள் அதனால் தான் அந்த அருமையான கருவி அழிந்தது. அதை நினைத்து பார்க்க இன்று ஒரு விபுலானந்தர் தேவையாகி விட்டார் என்று எழிலுக்கு தமிழகத்தின் நிலையை விளக்குகிறார் மு வ .
கருத்துகள்
கருத்துரையிடுக