முரசொலி கடிதம்-செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-சுருக்கம்

 

  

       முரசொலி கடிதம்-செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

 

உடன்பிறப்புகளிடம் , ஓய்வுக்காக 

வந்திருக்கிறேன்  என்று நீங்கள் நினைக்க 

வேண்டாம்.  ஒப்பற்ற முறையில் நடக்கவிருக்கும் 

உலகத் தமிழர் செம்மொழி 

மாநாட்டிற்குக் ஒரு தோரணவாயில் 

அமைக்கின்ற ஆர்வத்தோடு. இந்த ஓய்வைப் 

பயன் படுத்திக்கொள்கிறதாகக்  கூறுகிறார்.

8 உலகத் தமிழ் மாநாடுகள் :

அறிஞர் அண்ணா  அவர்கள் தமிழகத்தில் 

முன்னின்று 1967ஆம் ஆண்டு முதலமைச்சராக 

நடத்திய இரண்டாம் மாநாட்டினையும் சேர்த்து, 

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற  பெயரில் 

எட்டு மாநாடுகள் நடந்தேறியுள்ளன.


அறிஞர் அண்ணாவும் உலகத் தமிழ் மாநாடும் :

அண்ணா உலகத் தமிழ் மாநாட்டில் கீழ்க் 

கண்டவாறு பேசியதாக கலைஞர் கூறுகிறார். 

துல்லியமாக எண்ணங்களை 

வெளிப்படுத்திடும்.  சொல்வளம் மிகவும் 

படைத்தது உணர்வுகளை நுட்பமாகவும் 

நுண்ணியமாகவும் நேர்மையாகவும் 

நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் மிக்கது. 

எண்ணங்களை, கொள்கை கோட்பாடுகளை 

வழுவாமல் பிறழாமல் குறித்துணர்த்திக் 

கூறிடும் சொல்லாட்சி உடையது. 

தமிழ்க் களஞ்சியம் : 

கூடு, கவை, சூட்சமம் மதிநுடபம் வாய்ந்த 

குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை 

அத்துணையும் தரக்கூடிய அளவிற்கு சொற்கள் 

தமிழ்க் களஞ்சியத்தில் ஏராளம் உண்டு . எடுக்க 

எடுக்கக் குறையாதது. கொடுக்கக் தமிழ் 

இனியது. 

தொன்மையானது. தூயது  மற்றும்  அழியாத 

வியத்தகு சீரிளமைத் திறம் உடையது 

என்பதெல்லாம் உண்மை  வெறும் 

புகழ்ச்சியல்ல  என்பதை ஊரும் உலகும் 

ஒப்பிடத் தொடங்கியுள்ள காலக்கட்டத்தில்

நாம் வாழ்கின்றோம் என்று பீடும் பெருமையும் 

கொண்டு பேசினார்கள் என்று  கூறுகிறார்.  

கோவை : உலகத் தமிழ்ச்  செம்மொழி மாநாடு : 21 குழுக்கள்

  2010 ஆம் ஆண்டு ஜூன்  திங்கள் 23ஆம் நாள் 

முதல் 27 ஆம் நாள் வரை 5 

நாட்களுக்குக் கொங்குப் பகுதியின் கோலமிகு 

திருநகரமான  கோவையில் 

நடைபெறுமென அறிவித்திருப்பது உலகத் 

தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆகும்.  

மாநாட்டுக்கான தொடக்கக் கட்டப் பணிகள்:

நடைபெறுவதற்கான ஏற்பாடுகள், மாநாடு 

நடைபெற உள்ள இடம், மாநாடு 

நடைபெற உள்ள நாட்கள் போன்றவை தெரிவு 

செய்யப்பட்டுள்ளன.

ஆய்வரங்கங்கள்:

மாநாட்டை அழகாக நடத்திட ஆய்வரங்கங்கள் 

பொருளாழம் கொண்டதாகவும் 

அடுத்து வரும் தலைமுறையினருக்கு அறிவை 

ஊட்டுவதாகவும்  அமைந்திருக்கும். 

பொது அரங்கங்கள்: 

அன்னை தமிழுக்கு மேலும் பொலிவை 

தரக்கூடிய  அணிகலன்கள் அணிவிப்பதாக  

பொது அரங்கங்கள்  அமையும்.

கண்காட்சிகள்:

 இதுவரை கண்டிராத ஊக்கத்தையும் 

உணர்ச்சியையும் நமக்கு கொடுக்கும் 

விதமாக உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே 

அதைக்  கொண்டு போய் 

சேர்ப்பதாக கண்காட்சிகள் கண்கொள்ளாக்  

காட்சிகளாக அமையும். 

ஊர்வலம்:

 தமிழர் நாகரீகம், பண்பாடு, பன்முகத்தோற்றம்

தொன்மை, தரணி போற்றிடும் 

தமிழ் இலக்கியத்தின் மேன்மை ,மென்மை 

ஆகியவற்றைப் பேசும் சித்திரப்பாவைகளாக 

உருக்கொண்டு ஊர்வலமாக இடம்பெறும். 

21 குழுக்கள்:

 இந்த விழாவை நடத்துவதற்கு 21 குழுக்கள் 

அமைக்கப்பட்டுள்ளன.

செம்மொழி 

செம்மொழி மாநாடு என்ற வகையில் 2010ல் 

நாம் நடத்தப் போவது முதல்  செம்மொழி   

மாநாடு ஆகும்.  நமது தமிழ் மொழி 

செம்மொழி என்பதற்கான  அனைத்து 

தகுதிகளையும் நிரம்பவே பெற்றிருக்கிறது. 

அதனை செம்மொழி என அனைவரும் 

ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று 

நேற்றல்ல ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு 

இருந்தே குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அன்று 

எழுப்பப்பட்ட அந்தக்  குரல் தமிழ்க்  குரல் மெல்ல 

மெல்ல ஆனால் உறுதியாக  காலப்போக்கில் 

தமிழறிஞர்களின் குரலாக தமிழ் ஆர்வலர்களின் 

குரலாக தமிழ்  சமுதாயத்தில் ஒழித்து வருகிறது.

 செம்மொழியே என  அறிவிக்கப்பட்ட நாள் :

அரசியல் அரங்கத்தில் மிகச்சிறந்த குரலாக 

உருப்பெற்று செவித்திறனும் சீர்த்த 

பண்பும் உடையோர் அதனை மதித்து போற்றி 

அந்த குறளின் நியாயத்தை 

உணர்ந்து தமிழ் செம்மொழியே என இந்திய 

திருநாட்டளவில் அங்கீகாரம் செய்து

  பிரகணப்படுத்தப்பட்ட நாள் 12/10/2004. 

மரகதத்  திருநாள் :

அந்த நாள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக 

நடைபெற்ற உரிமைப் போராட்ட 

வரலாற்றில் உயர்ந்த நாள் உன்னதமான ஒரு 

நாள்.  நம் தமிழர் என்றென்றும் 

மறந்திட இயலாத மரகதத்  திருநாளாகும்.   

முன்னைப்  பழமைக்கும் 

பழமையாய்  புதுமைக்கும் புதுமையாய் என்று 

பிறந்ததென்று அறிய முடியாத 

இளமையான திறன் கொண்டதாய் வளர்ந்து 

செழித்து இருக்கக்கூடிய செந்தமிழ்  செம்மொழி .

நினைவூட்டுதல்:

தமிழைச் செம்மொழி என  பிரகனப்படுத்தப்பட்ட 

வரலாற்றை உலக தமிழ் 

செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 

சரியான தருணத்தில் நான் 

நினைவு கூர்ந்து உங்களுக்குச் 

சொல்கிறேன்.  நீங்கள் அதை அறிந்து 

கொள்வதோடு நின்று விடாமல்  

கொண்டவற்றை நினைவிலே தேக்கி உற்றார் 

உறவினருக்கும் மற்ற உடன்பிறப்புகளுக்கும் 

எடுத்துரைப்பதன் மூலம் புதிய எழுச்சியையும்  

இன்பத்தையும் கொள்வது 

நாம் கொண்டிருக்கும்  பொருள் பொதிந்த இந்த 

உறவின்காரணமாக  சாத்தியப்படும் என்கிறார்.

வி.கே.சூரிய  நாராயண சாஸ்திரி:

 பண்டைத்தமிழர் வி.கே.சூரிய  நாராயண சாஸ்திரி என்று அழைக்கப்படுபவர் 

பரிதிமாற் கலைஞர். அவர் செம்மொழி உயர்தனிச் செம்மொழி எனும் தலைப்பில் 

செந்தமிழ் எனும் இதழில் கட்டுரை ஒன்றை  வெளியிட்டார். அவர் 

தென்னாட்டிலுள்ள சிறந்து விளங்குகின்ற நம் அமழ்தினும் இனிய தமிழ் மொழி 

எவ்வாறு ஆராய்ந்து பார்த்தாலும் உயர்தனிச் செம்மொழியே என்பது திண்ணம் 

என்கிறார்.  இதனை உணர்ந்தவர்கள் சிறப்பு வாய்ந்த நம் அருமைத்  தமிழ் 

மொழியை உள்நாட்டில் உள்ள பல மொழிகளோடு வைத்து எண்ணக்கூடாது. 

வடநாட்டு உயர்தனிச் செம்மொழி என கொண்டாடப்படுகின்ற சமஸ்கிருதத்தை 

போல் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழ் எனக் கொண்டு விதிகள் 

வகுத்தல் மிகவும் சரியான ஒன்றாகும் என்று விளக்கினார். இதே நிலையைத்  

தன் இறுதி வரை வலியுறுத்தி வந்தார்.

தமிழ் மொழியின் வரலாறு:

     1903-ல் ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்ற தமது நூலின் முடிவுரையில் 

வடமொழி, இலத்தீன், கிரீக்கு  போல தமிழ் மொழியினை  உயர் தனிச் 

செம்மொழியாகும் என்று காட்ட வேண்டும்.நாட்டில் உள்ள பல மொழிகளிலும்  

தலைமையும் அவற்றில் மிக மேன்மையும் உயர்வும் உடைய மொழியை 

உயர்தனிச்  மொழி என்பர். இவ் இலக்கணம் தமிழ் தெலுங்கு 

முதலியவற்றிற்கெல்லாம் தலைமை பண்பு மிகுந்த அவற்றை விட சிறப்பானதும் 

ஆகிய தமிழ் மொழியை உயர்ந்த மொழி எனக் கொள்ள வேண்டும். நாட்டில் 

வழங்கும்  மற்ற மொழிகள் உதவி இன்றி தனித்து இயங்க வல்ல ஆற்றல் 

சான்று  தமிழ் மொழி ஆகும்.

பரிதிமாற் கலைஞர்அரசின் சிறப்பு

தமிழ் மொழியை செம்மொழி என 100 


ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக  நிலைநாட்டி


குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். 


அதனால்தான் தமிழக அரசு அவருக்கு பல்வேறு 


சிறப்புகளை செய்துள்ளது . மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அருகில் 

விளாச்சேரி கிராமத்தில் அவர் பிறந்த 


இல்லத்தை அரசுடைமையாக்கியது. 


நினைவில்லமாக பராமரித்திட ஆணையிட்டது. 


தனியார் பொறுப்பில் இருந்த அந்த இல்லத்தை 


கையகப்படுத்தியது. 


அந்த பழைய இல்லம் கழக அரசால் 7 லட்சத்து 


90 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு 


புதிய பொலிவுடன் நினைவில்லம் ஆக்கப்பட்டது. 
நினைவில்லத்தின் 
முகப்பில்  பரிதிமாற் கலைஞர் 
அவர்களின் மார்பளவு சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .அன்று பழமை மாறாமல் குவிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தைத்  திறந்து வைத்து வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கல சிலையை திறந்து வைத்துப்  பின்னர் நினைவு இல்லத்தில் அவரது வரலாற்றுக்  
குறிப்புகள் அறிய புகைப்படங்கள் 
ஆகியவற்றை 
பார்வையிட்டு அங்கு 
வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் 
புத்தகத்தில் தமிழுக்கு செம்மொழி தகுதி  
கோரிய .முதல் தமிழின் பரிதிமாற் கலைஞர் 
புகழ் வாழ்க என்று கலைஞர் 
கையெழுத்து விட்டார்.

அரசுடைமையாக்குதல்:  
 பரிதிமாற் கலைஞர் படைத்துள்ள நூல்கள்
அனைத்தையும் அரசுடைமையாக்கி
அவரது மரபுரிமையவர்க்கு  ரூபாய் 15 லட்சம்
ரூபாய் பரிவுத்  தொகையாக
வழங்கப்பட்டது . பரிதிமாற் கலைஞர்
அவர்களுக்கு நினைவு சிறப்பு அஞ்சல் தலை
வெளியிடப்பட்டது. 
தமிழ் நாடக இலக்கணம்

தமிழ் நாடக இலக்கண நூல் இல்லாத குறையை
போக்க விரும்பி தமிழ் வடமொழி ஆங்கிலம்
ஆகிய மும்மொழிகளை ஆராய்ந்து
நாடகவியல் என எழுதி வெளியிட்டவர் பரிதிமாற்
கலைஞர் என்று கலைஞர் தான் கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார் .
 
 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்