மொழிப் பயிற்சி

 

மொழிப் பயிற்சி

 

1. வாக்கிய வகை(தொடர் வாக்கியம், தனி வாக்கியம், கூட்டு வாக்கியம்)

2. இரு வழக்குகள் (பேச்சு, எழுத்து)

3. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

4. ஒருமை, பன்மை மயக்கம்

5. திணை, பால், எண், இட வேறுபாடு

6. நால்வகைச் சொற்கள் (பெயர், வினை, இட, உரி)

7. அகரவரிசைப் படுத்துதல்

வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

1தனிவாக்கியம்
2)தொடர்வாக்கியம்
3) கலவை வாக்கியம் ( அ )கூட்டு வாக்கியம்

தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.

(எ.டு.)

பாரி  வந்தான்.
பாரியும் கபிலனும் வந்தனர்.

தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும்.

(எ.டு.) தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.

(எ.டு.)

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு

பேச்சு வழக்கு - நான் இன்னிக்கு காலேஜுக்கு போனேன்.

 எழுத்து வழக்கு - நான் இன்று கல்லூரிக்குச் சென்றேன்.

 சுவத்துல -சுவற்றில், வரோம் - வருகிறோம் .

டீ சாப்பிட்டியா, சோறு சாப்டியா தேனீர் அருந்தினாயா, உணவு உண்டாயா.

 

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

அபிராமி பாடம் படித்தாள்.

 கிளி பழத்தைத் தின்றது .

அபிராமி, கிளி- இரண்டும் எழுவாய்

பாடம், பழம் -என்பது செயப்படுபொருள்

படித்தாள், தின்றது- என்பது பயனிலை( எழுவாய் சப்ஜெக்ட் ,பயனிலை 

பிரிடிகேட், செயப்படுபொருள் ஆப்ஜெக்ட்)

ஒருமை பன்மை மயக்கம்

மாடுகள் மேய்ந்தது; மாடுகள் மேய்ந்தன;

திணை பால் எண் இடம்:

திணை= உயர்திணை ,அஃறிணை

உயர்திணை (மக்கள் பெயர்

(சிவன் இயேசு )கடவுளர்  பெயர்

அஃறிணை- உயர்திணை அல்லாத உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற 

பொருள்களையும் குறிக்கும் .

பசு, பாம்பு ,மழை ,ஆறு

பால்

பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு என பொருள்படும் . பால் ஐந்து 

வகைப்படும்.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன்பால்

பலவின்பால் .இவற்றுள் ஆண்பால் பெண்பால் பலர்பால் ஆகிய மூன்றும் 

உயர்திணைக்கு உரியவை. ஒன்றன்பால் பலவின்பால் ஆகிய இரண்டும் 

அஃறிணைக்கு உரியது.

ஆண்பால் உயர்திணையில் ஆண்  ஒருவனைக் குறிப்பதற்கு பயன்படும்.

 ராமன், முருகன், கந்தன், கடம்பன்.

பெண்பால் உயர்திணையில் பெண் ஒருவரை ,ஒருத்தியை மட்டும் குறிக்க 

பயன்படும். சீதை, கீதா,

பலர்பால் உயர்திணையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை குறிப்பது 

பலர்பால் ஆகும் .

அவர்கள் வந்தார்கள்.

ஒன்றன்பால் அஃறிணையில் ஒரு பொருளைத்  தனியாகக்  குறிப்பதற்கு 

ஒன்றன்பால் என்று பெயர். குயில் , மயில்

பலவின்பால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக்  குறிப்பிடப்படுவது 

மான்கள் புத்தகங்கள் விலங்குகள் பறவைகள்

பன்மை எண் நாம் அவர் இவை குயில்கள் கற்கள்

மூவிடம்

தன்மை, முன்னிலை, படர்க்கை

 நான் கமலாவுக்கு புத்தகம் கொடுத்தேன்.-தன்மை  நான் கொடுத்ததை நீ 

பார்த்தாய் .நீ என்பது முன்னிலை நான் கமலாவுக்கு புத்தகம் கொடுத்ததை 

நீ பார்த்தாய். கமலா என்பது படர்க்கை.

சொற்கள்

 பெயர்ச்சொல் பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் 

சொல் இது பொருள் இடம் சினை காலம் குணம் தொழில் என்னும் 

ஆறின் அடிப்படையில் தோன்றும்.

வினைச்சொல் காலம் இணைந்து வேற்றுமை உருபு சேராது ஒரு 

பொருளின் தொழில் நிகழ்ச்சியை காட்டவும் சொல்லுக்கு 

வினைச்சொல் என்று பெயர்  வரும் என்றும் கூறுவர்.

இடைச்சொல் தனித்து நின்று பொருள் தராமல் பெயர்ச் சொல்லுக்கும் 

வினைச் சொல்லுக்கும் முன்னும் பின்னும் இடையிலும் நின்று 

பொருளை விளக்கும் சொல் வினைச்சொல் எனப்படும் அவள் வந்தாள்.

உரிச்சொல்

உரிச்சொல்

 சால தவ நனி கூர் கழி ஒரு பொருள் குறித்தவை

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்