பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை- விளக்கம்
பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை
பாடல்
1. மாதா பிதாவை வணங்கு – நாளும்
ஆதாரமாகவே
யவர்சொல்லுக்கிணங்கு
2. தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர்
சிந்தை
நொந்தால் மக்கள் செல்வம் நில்லாது
3. மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும்
பாதகரைச்
சுற்றும் பாவம் அநேகம்
4. பெற்றவர் நேசத்தைத் தேடு அவர்
குற்றத்தை
நீக்கிக் குணத்தைக் கொண்டாடு
5. தாய்தந்தைக் குதவாத பிள்ளை – தனது
ஆயுசும்
வாழ்வு மடியோடே கொள்ளை
6. கட்டியுனை ஆளாக்க தாமே முன்பு
பட்டபாடுகள்
சொல்லப் பாரதமாமே
7. உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு செய்யும்
பிள்ளையைத்
தன்பிள்ளை யேபழிவாங்கும்
8. கடலைப் போல்மாதா சகாயம் – அதற்கு
உடல்செருப்பாத்
தைத்துப் போடுதல் ஞாயம்
மதியிது மதியிது பெண்ணே – புண்ணிய
வதியல்லவோ
நல்ல மகராசி கண்ணே.
விளக்கம்.
1. பெற்ற
தாயையும் தந்தையையும் எப்போதும் வணங்க வேண்டும். அவர்களின் சொற்களுக்கு நாள்தோறும்
அடிபணிந்து செயல்பட வேண்டும்.
2. பெற்றோர்களின்
விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டு, அவர்களின் சாபத்தைப் பெறக் கூடாது. அவர்களின் மனம்
நோகும்படிச் செயல்படும் பிள்ளைகளின் செல்வங்கள் நிலைபெறாமல் அழிந்து விடும்.
3. தாய்க்கும்
தந்தைக்கும் துரோகம் செய்யும் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாவங்கள் தொடர்ந்து
வரும் .
4. பெற்றவர்கள்
செய்யும் தவறுகளை நீக்கிவிட்டு அவர்களின் நற்குணத்தைக் குழந்தைகள் கொண்டாட
வேண்டும். அவர்களின் உள்ளத்தில் மறைந்திருக்கும் நேசத்தைத் தேட வேண்டும்.
5.தாய்க்கும்
தந்தைக்கும் உதவாத பிள்ளை வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவர்களாகவே கருதப்படுவர்
. அதனால் அவர்களது ஆயுட்காலமும்
குறைந்துபோகும்.
6. சமூகத்தில்
தன் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு உயர்த்த பெற்றோர் செய்யும் தியாகங்களையும், துன்பங்களையும்
கூற முற்பட்டால் ஒரு பாரதக் கதையே எழுதிவிடலாம்.
7.பெற்றோர்க்குத்
தீங்கு செய்யும் பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளே பழி வாங்குவர்.
8.தாயின்
அரவணைப்பும், அவர்களின் சேவையும் கடலைப்போல பரந்தது. அதனை உணர்ந்து நம் தாயின்
காலுக்குத் நம் உடம்பை செருப்பாகத் தைத்துப் போடுதலே நாம் அவர்களுக்குச் செய்யும்
கடமையாகும் என்று அறிவுரை கூறுகின்றார் ஆசிரியர்.
கருத்துகள்
கருத்துரையிடுக