அயோத்தி என்றொரு ராஜ்யமாம் - ஏற்றப்பாட்டு
ஏற்றப்பாட்டு
நாட்டுப் புறப் பாடல் வகைகளுள் ஏற்றப்பாட்டு தனிச் சிறப்பு
வாய்ந்தது. வேளாண் தொழிலில் விதை விதைத்து நீர் பாய்ச்சி
களையெடுத்து கதிர் அறுத்து போரடித்து வண்டியில் ஏற்றிச்
சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன.
பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத
இடங்களில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின்
மூலமாகவே அதிகாலையில் இறைத்து நீர்ப் பாய்ச்சினர்.
இவ்வாறுஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல்
ஏற்றப்பாட்டு என்றழைககப்படும். ஏற்றத்தின் கீழே சாலைப்
பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார்.
ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் செர்ந்து
அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி
முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட
வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல்
காணப்படும். இதனாலேயே ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை
என்பர்.
அயோத்தி என்றொரு ராஜ்யமாம்
அயோத்தி என்றொரு ராஜ்யமாம்
அதனைத் தசரதர் ஆண்டனராம்
அவருக்கு மூன்று மனைவியராம்
அருமைப் புத்திரர் நால்வர்களாம்
நால்வரில் கோசலை மகன் ராமன்
நலமுள்ள கைகேயி மகன் பரதன்
நற்குண சுமத்திரையின் புதல்வர்
நயன லட்சமணன் சத்துருக்கன்
இவர்களில் ராமன் மூத்தவனாம்
எல்லா வித்தையும் கற்றவனாம்
இசைபெறுகிற வித்தையில
இவர்களிலே இவன் வலியவனாம்
அரண்மனைப் பின்புறச் சோலையிலே
அம்பெய்தி விளையாடையிலே
அங்கொரு கிழவியும் வருவாளாம்
அவள்கூனி பெயர் மந்தரையாம்
விளையாட்டா யவள் மேல் ராமன்
வில்லுண்டை யினால் அடிப்பானாம்
விசனத்தனத்துடன் அவன் மீது
வெகுநாள் வஞ்சம் வைத்தனளாம்
பட்டாபிஷேகம் நடத்தவதற்குப்
பகன்றார் தசரதர் ராமருக்குப்
பரபரப்புடன் கூனி சென்றனளாம்
பாவை கைகேயி முன் நின்றனளாம்.
திட வரம் தசரதரிடம் பெறவே
திரும்பினாள் கைகேயி ராமனையே
காட்டில் திரிந்தும் ராமனுமே
கஷ்டப்பட்டானே பலதினமே
கேட்டிருப்பீர் பாலர்களே!
கேலி செய்யாதீர் சீலர்களே
கருத்துகள்
கருத்துரையிடுக