அம்பா பாடல்கள் - விடிவெள்ளி நம்விளக்கு
அம்பா பாடல்கள்
அம் என்றால் அழகு
என்றும் பா என்றால் பாடல் என்றும்
பொருள் பெறும்.
அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும்.
இந்த அம்பி
சம்பந்தமாக இப்பாடல்கள் எழுந்தமையினால்
அம்பிப்பாடல்
என்றொரு சொல் உருவாக்கப்பட்டு இச்சொல்லே
காலம் செல்லச்
செல்ல சிதைந்து அம்பாகவும் மாறியிருக்கலாம் என்று
இலங்கையைச்
சேர்ந்த புஷ்பராஜன் அவர்கள் தனது சொற்பிறப்பியல்
விளக்கம்
தந்துள்ளார்.
விடிவெள்ளி
நம்விளக்கு – ஐலசா
விரிகடலே
பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலையே
நம்தோழன் – ஐலசா
அருமை மேகம் நமது
குடை- ஐலசா
பாயும் புயல் நம்
ஊஞ்சல்- ஐலசா
பனிமூட்டம்
உடல்போர்வை- ஐலசா
காயும்
ரவிச்சுடர்கூரை- ஐலசா
கட்டு மரம்
வாழும் வீடு- ஐலசா
பின்னல் வலை
அரிச்சுவடி- ஐலசா
பிடிக்கும்
மீன்கள் நம் பொருட்கள்- ஐலசா
மின்னல் இடி
காணும் கூத்து – ஐலசா
வெண்மணலே
பஞ்சுமெத்தை- ஐலசா
முழுநிலாதான்
கண்ணாடி- ஐலசா
மூச்சடக்கி
நீந்தல் யோகம்- ஐலசா
தொழும் தலைவன்
பெருவானம்- ஐலசா
தொண்டு தொழிலாளர்
நாங்கள்- ஐலசா
ஒத்துமை
கொண்டாடனும்- ஐலசா
உரிமையை
உயர்த்திடனும்- ஐலசா
கருத்துகள்
கருத்துரையிடுக