கண்ணதாசன் - குடும்பம் ஒரு கதம்பம்

  

          கண்ணதாசன்

குடும்பம் ஒரு கதம்பம்

பெயர்: முத்தையா

பெற்றோர்: சாத்தப்பன், விசாலாட்சி

பிறப்பு: 24.6.1927

இறப்பு: 17.10.1981

மனைவி: பொன்னழகி, பார்வதி, புலவர் வள்ளியம்மை

கிரகலட்சுமி என்ற பத்திகையில் நிலவொளியிலே என்ற அவரது முதல்

கதைவெளிவந்தது. எழுத்தின் மீதிருந்த அவரது பற்றுதல் காரணமாக

தனது 17 ஆவதுவயதில் பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பிறகு

திரைஒலி, சண்டமாருதம்,தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட

பத்திரிகைகளில் பணியாற்றினார்.கண்ணதாசன் என்ற பத்திரிகையை

அவரே நடத்தினர். கள்வனின் காதலி படத்தில்தனது திரைப் பயணத்தைத்

தொடங்கினார்.ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், போன்ற

காப்யிங்களையும் கவிதைதொகுப்புகளையும், அம்பிகை அழகுதரிசனம்,

கிருஷ்ண அந்தாதி, உள்ளிட்டசிற்றிலக்கியங்களையும் கவிதாஞ்சலி என்ற

கவிதை நாடகத்தையும் அவள் ஒருஇந்துப் பெண். அதை விட ரகசியம்

உள்ளிட்ட 26 புதினங்களையும் ஈழத்துராணி,ஒரு நதியின் கதைபேனா

நாட்டியம் உள்ளிட்ட 10 சிறுகதைகளையும், எனது

வசந்த காலங்கள், வனவாசம், எனது சுயசரிதம், மனவாசம் என்ற தன்

வரலாற்று நூல்களையும் அந்தி சந்தி அர்த்தஜாமம், அலக்கிய யுத்தங்கள்,

ராகமாலிகாஉள்ளிட்ட 26 கட்டுரை நூல்களையும் அர்த்தமுள்ள இந்து மத

தொகுப்புகள்,அனார்கலி உள்ளிட்ட நாடகங்கள் என பல்வேறு உரைநடை

நூல்களையும் எழுதி இன்றும் எழுத்தரசராக வாழ்கின்றார்.

காரைக்குடியில் தமிழ்நாடு அரசு கண்ணதாசன் மணிமண்டபம்

அமைத்துள்ளது. கணக்கற்ற பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும்

பெற்றாலும் சிறந்த வசனகர்த்தாவாக 1968 ஆம் ஆண்டு குழந்தைக்காக

என்ற திரைப்படத்திற்குப் பெற்றதையும், 1980 ஆம் ஆண்டு சேரமான் காதலி

படைப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வாங்கியதையும் குறிப்பிடலாம்.

 

குடும்பம் ஒரு கதம்பம்

 

பலவண்ணம் பலவண்ணம்

தினமும் மதிமயங்கும்

பல எண்ணம் பல எண்ணம்

தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை

குழந்தை ஒருபாதை

காலம் செய்யும் பெருலீலை

மனையாள் பணி செய்தால்

மணவாளம் வாழலாம் – அதிலே

வருமானம் ஆனாலும் அவமானம்

வீடுகள் தோறும் இங்கே

இதுதானே கேள்வி இன்று

விடிந்தால் ஒரு எண்ணம்

எல்லோர்க்கும் தனியுள்ளம்ஙகணவன் பெரிதென்று

மணந்தார்கள் மங்கையர்கள்

உழைப்பாள் அவளென்று

மணந்தார்கள் நாயகர்கள்

பொருளாதாரத்திலே

பொருள்தானா தாரம்இன்று

இருவர் உழைத்தால் தான்

இந்நாளில் பசிதீரும்

இரண்டு குதிரையிலே ஒரு

மனிதன் போவதென்ன

இரண்டு நினைவுகளில் சில

மனிதர் வாழ்வதென்ன

காலங்கள் தோறும் சிலர்

சிந்தனையில் மாற்றமென்ன

மனிதன் நினைக்கின்றான்

இறைவன் அதை மாற்றுகின்றான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்