மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை

   

 

      மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை 

 

1.மாதா பிதாவை வணங்கு-நாளும்

ஆதாரமா யவர்  சொல்லுக் கிணங்கு-மதி

     

      2. தந்தைதாய் சாபம்பொல்   லாது-அவர்

சிந்தைநொந்தால் மக்கள்     செல்வம் நில்லாது-மதி

 

      3. மாதா பிதாவுக்கு     த்ரோகம்-செய்யும்

பாதகரைச் சுற்றும்     பாவ மநேகம்-மதி

     

      4. பெற்றவர் நேசத்தைத் தேடு-அவர்

குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு-மதி

 

      5. தாய்தந்தைக் குதவாத     பிள்ளை-தன

தாயுசும் வாழ்வு  மடியோடே கொள்ளை-மதி

     

      6. கட்டியுனைவளர்க்க  நாமே-முன்பு

பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே-மதி

      7. உள்ளதாய் தந்தைக்குத்    தீங்கு-செய்யும்

பிள்ளையைத் தன்பிள்ளை    யேபழி வாங்கும்-மதி

     

      8. கடலைப்போல் மாதா சகாயம்-அதற்

குடல்செருப்பாத் தைத்துப்    போடுதல் ந்யாயம்

     

      9. மதியிது மதியிது பெண்ணே-புண்ய

வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்