உடல்நலம் பேணல் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
உடல்நலம் பேணல் - கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை
பெயர்: விநாயகம்
பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
பிறப்பு : 27.7.1876
இறப்பு : 26.9.1954
மனைவி: உமையம்மை
பாரதியின் வழியில் எளிமையான கவிதைகளை
இயற்றியவர். தமிழ்,
மலையாளம், ஆங்கிலம்
ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.
தமிழ்க்கவிதை, கல்வெட்டாராய்ச்சி,
சமூகச் சீர்திருத்தம், நூற்பதிப்பு,
பெண்விடுதலை முதலியவற்றில் மிகுந்த
ஈடுபாடு கொண்டவர்.
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி
மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தைச்
செல்வம், கீர்த்தனைகள்,
மலரும் மாலையும்,கதர் பிறந்த கதை, அதவியின்
கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரைமணிகள்
முதலியவற்றைப்படைத்துள்ளார். எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதி
யைத் தழுவி தமழில்எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்
பாடல்களைத் தழுவியும் தமிழில் எழுதினார். 1922 இல் மனோன்மணீயம்
மறுபிறப்பு என்ற திறனாய்வுக்கட்டுரையை எழுதினார். சென்னைப்
பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதிஉருவாக்கத்தில் மதிப்பியல்
உதவியாளராக இருநதார். கம்பராமாயணம்,திவாகரம், நவநீதப் பாட்டியல்
முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத்தொகுத்திருக்கிறார்
காந்தளூர்ச் சாலை எற்றிய ஆய்வு நூலை எழுதினார்.சென்னை மாகாணத்
தமிழ்ச்சங்கம் 24.12.1940 இல் கவிமணி என்ற பட்டம்அளித்துச் சிறப்பித்தது.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள்உமாமகேசுவரம் பிள்ளை
அவர்களால் இவ்விருது வழங்கப்பெற்றது.அண்ணாமலை அரசர்
ஆத்தங்குடியில் பெரும்பொருளை வழங்க அவற்றை
மறுத்துபொன்னாடையினை மட்டும் ஏற்றுக் கொண்டார்.1952 இல்
கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.2005 இல்
இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
உடல்நலம் பேணல்
உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தமுள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே !
ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்
நாளும் நாளும் பண்டிதர்கை
நாடி பார்க்க வேண்டாமே!
கூழையே நீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி அப்பா
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்!
தூய காற்றும் நன்நீரும்
சுண்டப் பசித்தபின் உணவும்
நோயை ஓட்டிவிடும் அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே
வையம் புகழ வாழ்வாயே
கருத்துகள்
கருத்துரையிடுக