தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார்-பாடலும்-பொருளும்- தமிழ்த் தெய்வ வணக்கம்

        தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார்

பெ. சுந்தரனாரால் எழுதப்பட்ட மனோன்மணீயம் என்னும் நூலில் தமிழ் தெய்வ  வணக்கமாக வைக்கப்பட்டுள்ளது 

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்  

தெக்கணமும்  அதிற்சிறந்த  திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல்  அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே தமிழணங்கே

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ் த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும்  கவின்மலையாளமும் துளுவும் 

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல்  உலகவழக்கழிந் தொழிந்து சிதையா

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழத்துதுமே வாழத்துதுமே வாழத்துதுமே

 

ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலை ஆடையாக அணிந்த நிலம் எனும் பெண்ணே, இப்பரத கண்டம் உனக்கு அழகு மிளிரும் முகமாகத் திகழ்கிறது. பரத  கண்டத்தில் இருக்கும் தென்னாடும் , அதில் சிறந்த திராவிடர்களின் திருநாடும் பிறை போன்ற நெற்றியாகவும் , நெற்றியில் இட்ட மனம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.

 அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனையைப் போல உன் புகழானது அனைத்து திசைகளிலும் மணம் வீசுகின்றது. அத்தகைய   சிறப்பு வாய்ந்த தமிழ்ப்  பெண்ணே என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பான திறமையை வியந்து எங்கள் செயல்களை எல்லாம் மறந்து உன்னை வாழ்த்துகின்றோம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்