பட்டினத்தார் பாடல் காடே திரிந்தென்ன
பட்டினத்தார் பாடல்கள்
காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரை
உள்ளத்தில் அன்பு இல்லாமல் முற்றும் துறந்து விட்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை.
காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை.
ஆனால் மருந்தீசர் மேல் உள்ளம் வைத்து இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் அன்போடு இருப்பவனே இறைவனின் திருவடி அடைவான்.
பாடல்2
தாயும் பகைகொண்ட பெண்டிர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகையுற வோரும் பகைஇச் செகமும்பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கிலிங் காதலினால்
தோயுநெஞ் சேமரு தீசர்பொன் பாதஞ் சுதந்தரமே (2)
வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவாள்.
நம் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவாள். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார்கள்.
உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர்.
இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும்.
மனமே! அவனுடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு வீடுபேற்றினைத் தரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக