வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

 வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க


புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


பதப்பொருள் :


 மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக;  

பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; 

 தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; 

 கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளும்  இறைவன் திருவடிகள் மேம்படுக; 

கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரச் செய்யும் சிறப்புடையவனது 

திருவடி மேம்படுக.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்