சோழர்கள்
சோழர்கள்
சோழர்கள் பழந்தமிழ்நாட்டை
ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு பிரிவினர்.
மற்ற இருவர்
சேரர்களும், பாண்டியர்களும் ஆவர்.
'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி.
எனவே
சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின்
சோழ நாடாகியது
என்பர் ஆய்வாளர் .
தேவநேயப்
பாவாணர்
நெல்லின்
மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத்
திரிந்து
"சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.
பரிமேலழகர்
சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக்
காலந்தொட்டே
ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும்
என்பது
பரிமேலழகர் கருத்து.
சோழர்கள்
சான்றுகள்
இலங்கையின்
பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான
மகாவம்சத்தில்
தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய
காலங்களைத்
தீர்மானிக்க உதவுகின்றன.
அலெக்சாந்திரியாவைச்
சேர்ந்த வணிகன் எழுதிய எரித்ரேயன் கடலின்
வழிகாட்டி
நூல் (Periplus of the
Erythraean Sea), அதன் பின் அரை
நூற்றாண்டு
கழித்து
தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட
நூல்களும் உதவுகின்றன.
இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப்
பட்டயங்கள் என்பனவும் சோழர்
பற்றிய
தகவல்களைத் தருகின்றன.
முற்காலச்
சோழர்
இரண்டாம்
நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த
சோழர்
முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால்
குறிப்பிடப்படுகின்றனர்.
முற்காலச்
சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார்..
வேல் பல்
தடக்கைப் பெருவிறல்கிள்ளி இவனை பரணர், கழாத்தலையார்
ஆகிய
புலவர்கள் பாடியுள்ளனர்.
சோழன் உருவப்
பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன்.
இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப்
பாடலொன்றில்
புகழப்படுகின்றான்.
இடைக்காலச்
சோழர்கள்
இரண்டாம்
நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு
வடக்கிலிருந்த
கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல
பகுதிகளைப்
படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.
சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர்.
எனினும்
இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப்
பல்லவர்களுக்கும்
களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து
வந்துள்ளது.
பிற்காலச்
சோழர்
9-ஆம் நூற்றாண்டுக்குப்
பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர்
பிற்காலச்
சோழர் எனப்படுகின்றனர்.
இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவரது மகனான
முதலாம்
இராசேந்திர
சோழனும் வரலாற்றில்
குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
10-12 ஆம்
நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர்
நிலையில்
இருந்தனர்.
அக்காலத்தில்
சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம்
இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள்.
அவர்கள்
காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும்,
பண்பாட்டிலும்
வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும்
செல்வாக்குக்
செலுத்தியது.
இம்மன்னர்களின்
எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா,
சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே
மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து
இருந்தது.
இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே
இலங்கையின்
வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக்
கைப்பற்றியிருந்தமை
அறியலாம் .
பண்டைய கால
அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி
கொண்டவர்கள்
சோழர்களே ஆவர்.
பிற்காலச்
சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச்,
கிருட்டிணசாத்திரி
ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள்
வெளியிட்ட
செப்பேடுகளும் வழி செய்கின்றன.
அன்பில்
பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச்
செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன்
செப்பேடுகள்
ஆகியவை
அவற்றுள் சில.
இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம்,
பன்னிரு
திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம்
போன்ற
நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன.
பிற
சோழ மன்னர்கள்
இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி,
பாண்டிய
நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட
கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,
இலவந்திகைப்
பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி,
குராப்பள்ளித் துஞ்சிய
பெருந்
திருமாவளவன்
போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில்
இடம்பெறுகின்றன.
மேலும்
நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று
சிறைப்படுத்திய
கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க
இலக்கியங்களில்
காணப்படுகின்றன.
பழையாறை
சோழர்கள்
தம்
சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள்,
காவிரிக்கரைப்பகுதிகளில்
குறிப்பாக உறையூர், பழையாறை
நகரங்களிலிருந்து
சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ
இருநூறாண்டுகள்
புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர்.
சோழப்
பேரரசின் வீழ்ச்சி
முதலாம்
குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம
சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம்
இராசராசன், இரண்டாம்
இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ
நாட்டை
ஆண்டனர்.
இக்காலத்தில்
சோழர் தொடர்ந்து வலிமையிழந்து
வந்தனர்.
நாட்டின்
வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில
மன்னர்களும்
ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே
பாண்டியர்கள்
வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும்
விளைந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக