இசுலாமியரின் / முகாலயர்கள்
இசுலாமியரின் / முகாலயர்கள் /
வட இந்தியாவில் ஆட்சி செய்துவந்த
இசுலாமிய அரசர்கள் தென்
இந்தியாவில் நுழைந்து தங்களது இசுலாமிய மதத்தைப் பரப்ப
நினைத்தனர். அதன்பொருட்டு அலாவுதீன் கில்ஜி என்ற கில்ஜி
வம்சத்தைச் சேர்ந்த மன்னன்
தமிழ் நாட்டைக் கைப்பற்றி அங்கு
இசுலாமிய சமயத்தைப் பரப்ப
எண்ணினான். அதற்கான
படையெடுப்பு மாலிக்காபூர் தலைமையில் நடைபெற்றது.
மதப்பற்று :
வீரபாண்டியன் படையில் இருந்த சுமார் 20000
இசுலாமியப் போர் வீரர்கள் மாலிக்காபூர் பக்கம் சென்று சேர்ந்து
விட்டனர். இதற்கு மதமே காரணமாகும் என்பர்.
மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குச் சடையவர்மன்
சுந்தரபாண்டியன், சடையவர்மன்
வீரபாண்டியன் என்னும் இரு
புதல்வர்கள்.
அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன்.
வீரபாண்டியன் காமக்கிழத்தியின் மகன்.
குலசேகரபாண்டியன் முறைப்படி பட்டம் சூடுவதற்கு உரிய
சுந்தரபாண்டியனைப் புறக்கணித்துவிட்டு, வீரபாண்டியனுக்கு
இளவரசுப் பட்டம் சூட்டினான்.
இதனைக் கண்டு சுந்தரபாண்டியன் கோபமுற்றான்.
பின்பு கி.பி. சுந்தரபாண்டியன் தனது தந்தையைக் கொன்றுவிட்டு
மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.
இதனால் இரு சகோதரர்களுக்கு இடையே போர் மூண்டது. இதில் சுந்தரபாண்டியன்
தோல்வியுற்று ஓடிவிட்டான்
மாலிக்காபூர்
அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூரின்
உதவியுடன் வந்து சுந்தரபாண்டியன் போரிட்டதால் வீரபாண்டியன்
அஞ்சி ஓடிவிட்டான்.
மாலிக்காபூர் மதுரையைத் தாக்கிச் செல்வங்களைச் சூறையாடினான்.
இந்த வாரிசு உரிமைப் போரினால் டெல்லியிலிருந்து
வந்த
மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் எளிதாக ஆதிக்கம் செலுத்த
முடிந்தது.
அலாவுதீன் கில்ஜி தனது தளபதி மாலிக்காபூர் உதவியுடன்
தமிழகம் எங்கும் சூறையாடிப் பெருஞ்செல்வத்தினைத் திரட்டினான் .
மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக் கண்ணனூர்க் கொப்பம்
சென்றான்.
அங்கிருந்த பெருஞ்செல்வங்களைக் கைப்பற்றிக்
கொண்டான்.
அச்சமயத்தில் தில்லைக் கோயில் செல்வங்கள் பற்றிக்
கேள்விப்பட்டு அங்கிருந்த பொன்னையும் மணியையும் கைப்பற்றி
அக்கோயிலைத் தீக்கு இரையாக்கினான்.
இச்செய்தியை தரீக்-இ-அலைய் (Tarikh-i-Alai) என்னும்
நூலில் அமீர்குஸ்ரு என்பவர்
குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மாலிக்காபூர் தில்லையிலிருந்து மதுரை செல்லும்
வழியில் திருவரங்கம் கோயில் செல்வங்களைக்
கொள்ளையடித்தான்.
மதுரைக்குள் புகுந்து அங்குள்ள சொக்கநாதர்
கோயில் செல்வங்களைக் கைப்பற்றினான்.
பின்பு இராமேஸ்வரம் சென்று கோயிலிலுள்ள பொன்னாலான
ஆபரணங்களையும், சிலைகளையும், யானைகளையும்
கைப்பற்றினான்.
மாலிக்காபூர் 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மணங்கு
எடையுள்ள ஆபரணங்கள், விலை மதிப்பற்ற
வைரங்கள், முத்து,
மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை
எடுத்துக் கொண்டு டெல்லிக்குத்
திரும்பினான்.
அலாவுதீன் கில்ஜி கி.பி. 1316 இல் மரணமடைந்தான்.
இதனை அடுத்துத் தென் இந்தியாவில் படையெடுப்பை
முடித்துவிட்டு டெல்லி சென்ற மாலிக்காபூர் அங்கு அரசியல்
குழப்பத்தை ஏற்படுத்தினான்.
அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்திற்குப் பெரும் தொல்லைகள்
கொடுத்தான்.
ஆனால் மாலிக்காபூரும் வெகுவிரைவிலே கொல்லப்பட்டான்.
குஸ்ருகான்
அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் முபாரக்க்ஷா ஆட்சியில்
அமர்ந்தான்.
தனதுதளபதி குஸ்ருகான் என்பவனைத் தென் இந்தியாவில்
படையெடுப்பை நடத்துமாறு அனுப்பினான்.
குஸ்ருகான் காகதீய மன்னன் திறை செலுத்தவில்லை என்பதைக்
காட்டி, காகதீய நாட்டின் மீது
படையெடுத்துச் சென்று வெற்றி
கண்டான்.
காகதீயரை முறியடித்து, குஸ்ருகான் தமிழ் நாட்டில் படையுடன்
முன்னேறினான்.
குஸ்ருகான் மதுரையில் போரைத் தொடங்கியபோது அங்குப் பெரும்
மழை பெய்து கொண்டிருந்தது.
எனவே அவனால் வெற்றியைக் காணமுடியாமல் போயிற்று.
ஆதலால் குஸ்ருகான் திரும்ப அழைக்கப்பெற்றான்.
உலூக்கான்
குஸ்ருகான் படையெடுப்புக்குப் பின்னர் டெல்லியில் பெரும்
குழப்பம் ஏற்பட்டது.
அதோடு கில்ஜி சுல்தான்களின் ஆட்சியும்
முடிவடைந்தது.
பின்னர் டெல்லியில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.
இரண்டாம் பிரதாபருத்திரன்
டெல்லி அரசியலில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையும்,
மாற்றங்களையும் பயன்படுத்திக் கொண்டு வாராங்கலை ஆண்டு
கொண்டிருந்த இரண்டாம் பிரதாபருத்திரன் பெரும்படையுடன்
தமிழ்நாட்டிற்குள் புகுந்து முன்னேறினான்.
இரண்டாம் பிருதாபருத்திரன் வெற்றி பெற்றுக் காஞ்சிபுரத்தைக்
கைப்பற்றினான்.
கியாசுதீன் துக்ளக்
இரண்டாம் பிரதாபருத்திரனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள
முடியாமல் டெல்லியை ஆண்டு வந்த கியாசுதீன் துக்ளக் தனது
மகனும் வாரிசுமாகிய உலூக்கான் என்பவனைத் தென் இந்தியாவில்
படையெடுப்புகளை நடத்துமாறு அனுப்பினான்.
உலூக்கானே முகமது பின் துக்ளக் ஆவான். டெல்லியின்
உத்தரவுப்படி உலூக்கான் இரண்டாம் பிரதாபருத்திரனின்
தலைநகரமான வாராங்கலைத் தாக்கினான். முதலில் உலூக்கான்
தோல்வியைக் கண்டாலும், நம்பிக்கையை இழக்காமல்
மீண்டும்
வாராங்கலைத் தாக்கித் தகர்த்தான்.
இப்போரில் வெற்றியடைந்த காரணத்தால் உலூக்கான் படை தமிழ்
நாட்டில் புகுந்து முன்னேறியது.
பாண்டிய நாடு
பாண்டிய நாட்டு அரசன் பராக்கிரமபாண்டியனுக்கும்
உலூக்கானுக்கும் போர் மூண்டது.
இதில் வெற்றி கண்ட உலூக்கான் தமிழ்நாட்டை டெல்லி
சுல்தானியர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.
மதுரையில் சுல்தானியர் ஆட்சி (கி.பி. 1333-1378)
மாலிக்காபூர் படையெடுப்பை அடுத்து குஸ்ருகான்,
உலூக்கான் போன்றோர் படையெடுத்துத் தமிழகத்தினைச்
சிதைத்திருந்தனர்.
விளைவாக மதுரையில் சுல்தானியர் ஆட்சி நிலைபெற்றது.
ஜலாலுதீன் அசன்ஷா (கி.பி.1333-1340)
கியாசுதீன் துக்ளக் இறந்தவுடன் உலூக்கான் டெல்லியில் அரியணை
ஏறினான்.
இவனது ஆட்சியில் தமிழ்நாடு துக்ளக் பேரரசின் இருபத்து
மூன்றாவது மாநிலமாக ஏற்படுத்தப்பட்டது.
அதனை நிருவாகம் செய்ய ஜலாலுதீன் அசன்ஷா என்பவன் அரச
பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான்.
மதுரையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த ஜலாலுதீன் அசன்ஷா
டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி, கி.பி. 1333இல்
தன்னாட்சியைத் தொடங்கினான். அவன் ஆட்சி தொடங்கியது முதல்
மதுரையில் சுல்தானியர் ஆட்சி தொடங்கியது.
இந்து அரசர்கள் வீர உணர்வு - மூன்றாம் வீரவல்லாளன்
தென் இந்திய இந்து அரசர்கள் வீர உணர்வு கொண்டு எழுந்து
இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர்.
துவார சமுத்திரத்தில் ஆட்சியில்
இருந்த போசள
அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தென் இந்தியாவை
இசுலாமியர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் போரிட்டான்.
அதில் வெற்றியும் கண்டான். இதனையடுத்து இசுலாமியர்
படையெடுப்பைச் சந்திக்கும் பொருட்டு மூன்றாம் வீரவல்லாளன்
திருவண்ணாமலையில் ஒரு படையை நிறுத்தினான்.
மதுரையில் அந்நியர்கள் ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சிகளும்
போராட்டங்களும் தொடங்கின
மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன்
அசன்ஷா
கொல்லப்பட்டான்.
அலாவுதீன்
உதாஜி (கி.பி. 1341)
ஜலாலுதீன் அசன்ஷாவை அடுத்து அலாவுதீன் உதாஜி என்பவன்
மதுரையில் ஆட்சிப் பொறுப்பேற்றான்.
இந்துக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த
சமய உணர்வையும், வீர உணர்வையும் அடக்க
எண்ணினான்.
இசுலாமியரின் ஆட்சியை ஒழித்து, இந்து ஆட்சியை நிலைநாட்ட
முயன்று கொண்டிருந்த போசள அரசன் மூன்றாம்
வீரவல்லாளனை அடக்கவும் வீரவல்லாளனை எதிர்த்து, நேருக்கு
நேர் நின்று அவனோடு போர் செய்தான்.
போர் செய்து கொண்டிருக்கும்போது
எதிர்பாராத நேரத்தில்
பகைவரின் அம்பு ஒன்று தாக்கி அலாவுதீன் உதாஜி
போர்க்களத்திலேயே உயிர் துறந்தான். இவனது ஆட்சி
ஓராண்டிலேயே முடிந்துவிட்டது. இதன் மூலம் மதுரையில்
இசுலாமியரின் ஆதிக்க வெறி தோல்வி கண்டது.
குத்புதீன்
அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது
மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான்
பதவியேற்றான். இவனது
ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும்
இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான்.
முகமதியர் கால சமூகநிலை: இவர்கள் உருவச்சிலை வழிபாட்டின்
எதிரிகளாக விளங்கினர்.
எனவே மாலிக்காபூரின் படையெடுப்பால் சீரங்கம், மதுரை போன்ற
ஆலயங்கள் தாக்குதலுக்குள்ளாயின.
தமிழகத்துப் பழைய பேரரசுகள் சிற்றரசுகளாக மாறின.
முகமதியர்களின் சமயச்சார்பு அரசியலால் மக்கள் பல ஊர்களில் கூட்டமாக
இசுலாமைத் தழுவினர்.
கட்டடக்கலை
இசுலாமிய சமயமும் சாரசானிக் கட்டிடக் கலையும் ஆட்சியாளர்களின்
ஆதரவைப் பெற்றன.
இந்நிலை விசயநகரத்தின் எழுச்சிவரை தொடர்ந்தது.
சாரசானிக் கட்டடக்கலை: முகமதியர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பரவிய
இந்தோ-சாரசானிக் கட்டிடக்கலை வனப்பும் பொலிவும் வாய்ந்தது.
இந்த முகமதிய சாரசானிக் கட்டடக்கலை ஐரோப்பிய கட்டடக் கலையும்
இந்திய பாரம்பரிய கட்டடக்கலையும் சேர்ந்து உருவாக்கப்பட்டது ஆகும்.
குவி மாடங்களால் கட்டப்படும் இக் கட்டடக்கலை தமிழ் இலக்கியங்கள் கூறும்
எழுநிலை மாடங்களைப் போல் பருவச் சூழலுக்கு ஏற்றாற்போல்
அமைக்கப்பட்டவையாகும்.
உயர்ந்த கோபுர அமைப்பு, பூ வேலைப்பாடுகள் அமைந்த கட்டட முனைகள்,
விதானங்கள் எனப் பலவும் சாரசானிக் கட்டடக்கலையில் அமைந்துள்ளன.
இதற்குத் தற்காலத்திய எடுத்துக்காட்டு சென்னையில் அமைந்துள்ள
ஹிமாயூன் மாஹால் என்றழைக்கப்படும் சேப்பாக்கம் அரண்மனை ஆகும்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் சாரசானிக் கட்டடமும் இதுவே ஆகும்.
சென்னையில் இக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட கட்டடங்கள் பல உள்ளன.
உயர்நீதிமன்றம். எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னைப்
பல்கலைக்கழக செனட் இல்லக் கட்டடம், விக்டோரிய பப்ளிக் ஹால்
ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இன்றும் பராமரிக்கப்பட்டு
வருகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக