லீலை-ந.பிச்சமூர்த்தி
லீலை
ந.பிச்சமூர்த்தி
மண்ணில் பிறந்தால் வானேற ஆசை
காலோடிருந்தால் பறப்பதற்கு ஆசை வானாயிருந்தால் பூமிக்கு வேட்கை
கொண்டலாயிருந்தால் மழையாகும் ஆசை
மின்னலாயிருந்தால் எருக்குழிக்கு ஆசைஎருக்குழியாயிருந்தால் மலராகும் பித்து
இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆசை
துரும்பாயிருந்தால் நெருப்புக்கு ஆசை
தனியாயிருந்தால் வீட்டுக்கு ஆசைவீட்டோடிருந்தால் கைவல்யத்திற்கு ஆசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை
உனக்கோ ! உலகாளும் ஆசை.
கருத்துகள்
கருத்துரையிடுக