நீர் நில மேலாண்மை
நீர் நில
மேலாண்மை
‘மேலாண்மை’ என்பது
ஒரு குறிக்கோளை அடைய கூட்டாக மேற்கொள்ளப்படும் செயல்முறைகளைக் குறிக்கும்.
மனித நாகரிகம்
தோன்றிய காலத்திலிருந்தே மேலாண்மைக் கூறுகள் காணப்படுகின்றன.
வளமும்
வளர்ச்சியும் திட்டமிட்ட மேலாண்மையைச் சார்ந்தவை. அதில் நீர் மேலாண்மை
முக்கியமானது.
சரியான
நீர்மேலாண்மை இல்லையேல் சமூக வாழ்வில் பல சிக்கல்கள் ஏற்படும்.
மழைநீர்
சேமிப்பு
மழைநீர் மற்றும்
நிலவளம் உயிர்க்கு அடிப்படை என்பதைக் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர்.
புறநானூறு போன்ற
இலக்கியங்கள் “நீரும் நிலனும் புணர்ந்தால் உயிர் உருவாகும்” என வலியுறுத்துகின்றன.
வானியல் அறிவின்
மூலம் மழைப்பொழிவை முன்னறிந்தனர்.
வெள்ளி, செவ்வாய்
போன்ற விண்மீன்களின் நிலையை வைத்து மழை கணிக்கப்பட்டது.
காற்றின் திசை,
மேகச் சுழற்சி முதலியவற்றின் மூலம் மழை வருகை அறியப்பட்டது.
நீர் ஆவியாகி
மேகமாய் திரண்டு மழையாகப் பொழியும் நீர்சுழற்சிக் கோட்பாடும் இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ளது.
நீர்
மேலாண்மைச் செயல்பாடுகள்
மழைவளம் பெருக்க
மலை, வனம் போன்ற இயற்கை வளங்கள் காக்கப்பட்டன.
மரம் நடுதல் அறமாகக்
கருதப்பட்டது.
குளங்கள்
வெட்டுதல், பாதைகள் அமைத்தல், கிணறுகள் தோண்டுதல் போன்றவை அறச் செயல்களாகப்
போற்றப்பட்டன.
மழை வெள்ளம்
கடலில் வீணாக கலக்காமல் தடுப்பணைகள் (‘கற்சிறை’) கட்டப்பட்டன.
சுருங்கை எனப்படும்
பூமிக்கடியில் செல்லும் ஒரு குழாய். குளங்களில் தேக்கி வைக்கப்பட்ட நீர் வெளியேறும் ஒரு வழி ஆகும்.
மடுக்கள்,
குளங்கள், கேணிகள் தோண்டப்பட்டன. வரத்து மற்றும் போக்குக் கால்வாய்கள்
அமைக்கப்பட்டன.
இவை
பராமரிக்கப்பட்டன (இன்றைய குடிமராமத்து).
குமிழித்
தூம்பு
பெரும் ஏரிகளில்
தேக்கப்பட்ட நீரை கட்டுப்படுத்தி வெளியேற்ற ‘குமிழித் தூம்பு’ பயன்படுத்தப்பட்டது.
இது ஏரிநீரை அளவாக பாசனத்திற்குக் கொண்டு
செல்லும் எளிய ஆனால் வலிமையான தொழில்நுட்பமாகும்.
கல்லணை
கல்லணை கரிகால
சோழனால் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற அணை.
காவிரி
வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி, நீரைப் பிரித்து பாசனத்திற்குப் பயன்படுத்தும்
நோக்கில் கட்டப்பட்டது.
மணற்படுகையில்
பாறைகளை அடுக்கி, களிமண் பசையுடன் பல அடுக்குகளாக கட்டிய நுட்பம் வியத்தகு ஒன்று.
2,000 ஆண்டுகளாக
செயல்பாட்டில் உள்ள உலகின் பழமையான அணையாகும்.
நீர்நிலைப்
பாதுகாப்பு
நீர்நிலைகள்
உருவாக்கப்பட்டதோடு அவை பாதுகாக்கப்பட்டன.
காவலர்கள்
நியமிக்கப்பட்டனர் (‘காப்புடை கயம்’).
அகழி, ஏரி,
கண்மாய், கால்வாய் போன்ற பல பெயர்கள் நீர்நிலைகளுக்கு வழங்கப்பட்டன.
இது
நீர்மேலாண்மையில் தமிழரின் விரிந்த அறிவைக் காட்டுகிறது.
உற்பத்திப்
பெருக்கம்
உணவுத் தேவையை
நிறைவேற்ற காடுகள் சீரமைத்து விளைநிலங்களாக்கப்பட்டன.
மானாவாரி மற்றும் சேற்று உழவு முறைகள்
பயன்படுத்தப்பட்டன.
நிலத்தை மீண்டும்
மீண்டும் உழுதல் உரமிடுதலுக்குச் சமம் என அறிந்தனர்.
களைகளை நீக்குதல்,
வேலி அமைத்தல் போன்ற முறைகள் விளைச்சலைக் காத்தன.
நிலவள
மேம்பாடு
கால்நடை கழிவுகள்
(தொழு உரம்), தழையுரம் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தாது எரு’ போன்ற
சொற்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
உரங்களைச்
சேமிக்கும் ‘தாதெரு மன்றம்’ இருந்தது. இம்முறைகள் நிலவளத்தையும் விளைச்சலையும்
மேம்படுத்தின.
முடிவுரை
பழந்தமிழர் நீர்
மற்றும் நில வளங்களைத் திட்டமிட்டு காத்து பயன்படுத்தியுள்ளனர். அவர்களின்
நீர்மேலாண்மைச் செயல்பாடுகள் இன்று கூட பயனுள்ளவையாகும். நீர்நிலைகளைப்
பாதுகாப்பது நம் மரபையும் நம் வாழ்வையும் காப்பதற்குச் சமம்.
கருத்துகள்
கருத்துரையிடுக