பாரதியார் - பாரத சமுதாயம்

                              பாரதியார் - பாரத சமுதாயம்

பெயர்: சுப்பிரமணிய பாரதி

பெற்றோர்: சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள்

பிறப்பு: 11.12.1882

இறப்பு: 11.09.1921

மனைவி: செல்லம்மாள்

பாரதியார் என்றும் மகாகவி என்றும் போற்றப்படும் இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இதழியலாளர், சமூக சீர்த்திருத்தவாதி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். எட்டையபுரம் அரசசபையினரால் பாரதி என்ற பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.

எட்டையபுர அரசவைக் கவிஞராக சிலகாலம் பணியாற்றினார். பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு சுதேசிய மித்திரன் என்ற பஇதழில் துணையாசிரியராக பணியாற்றினார்.

கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது விவேகானந்தரின் சீடர் நிவேதிக்கா தேவியை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்று அவரைத் தன் ஞானகுருவாக கொண்டார். 1907 ஆம் ஆண்டில் இந்தியா என்ற வார இதழையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினர். 

பாரதி அறுபத்தாறு, தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, தோத்திரப்பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, சந்திரிகையின் கதை, விடுதலைப் பாடல்கள், ஞான ரதம் என்ற ஏராளமான படைப்புகளின் ஆசிரியர் இவர். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற மூன்றும் பாரதியாரின் முப்பெரும்பாடல்களாக தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றன.

பாரதியார் பிறந்த ஊரான உட்டயபுரத்தில் அவருக்கு மணிமண்டபமும் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுன. எட்டையபுரத்திலும் சென்னை திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த வீட்டினை பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி தமிழ்நாடு அரசு பராமரித்து வருகின்றது.



பாரத சமுதாயம்

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ;
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை - வாழ்க !

 மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு -
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு  

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ? ....
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம்  

எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் 
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் !  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்