உலோகவியல்

 

 

                               உலோகவியல் 

உலோகங்கள், உலோகக் கலவைகள் மற்றும் அவற்றின் செயல்முறைகளை ஆய்வு 

செய்யும் துறை உலோகவியல் (Metallurgy) எனப்படுகிறது.

மனித நாகரிக வளர்ச்சியில் கற்காலத்தை முடித்து உலோக காலத்தை உருவாக்கிய 

முக்கியமான அறிவியல் துறையாக இது விளங்குகிறது.

ஒரு சமுதாயத்தின் தொழில்நுட்ப மற்றும் நாகரிக வளர்ச்சியின் அளவுகோலாக உலோகப் 

பயன்பாடு கருதப்படுகிறது.

தனித்த உலோகம்

முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தங்கம் ஆகும்.

தங்கம் இயற்கையில் தனித்த நிலையில் கிடைத்ததால் முதலில் அறியப்பட்டது.

பின்னர் வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களும் தனித்த நிலையில் 

பயன்படுத்தப்பட்டன.

கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கைத் தங்கம் பயன்படுத்தப்பட்டதாக 

அறியப்படுகிறது.

தங்கத்தின் பயன்பாடு ஒரு நாட்டின் செல்வச் சின்னமாகக் கருதப்பட்டது.

கலப்பு உலோகம்

தனித்த உலோகங்களுக்குப் பின், மனிதன் உலோகங்களை கலந்து புதிய கலவைகளை 

உருவாக்கத் தொடங்கினான்.

செப்பு மற்றும் தகரம் கலந்து வெண்கலம் உருவாக்கப்பட்டது.

இதுவே ‘வெண்கலக் காலம்’ என அழைக்கப்பட்டது.

கலப்பு உலோகங்கள் அதிக வலிமை மற்றும் பயன்பாட்டுத் திறன் கொண்டதால் நாகரிக 

வளர்ச்சிக்கு உதவின.

இரும்புக் காலம்

இரும்பின் உற்பத்தி உலோகவியலில் மிகப்பெரிய மைல்கல். இரும்புத் தாதுவிலிருந்து 

இரும்பைப் பிரித்தெடுப்பது கடினமான செயல். இரும்பின் பயன்பாடு அதிகரித்தபின் 

வேளாண்மை, போர், கட்டுமானம் போன்ற துறைகள் வளர்ச்சி பெற்றன.

பண்டைய காலத்தில் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தங்கமாகும்.

தங்கம் இயற்கையில் தனித்த நிலையில் கிடைப்பதால் மனிதனால் முதலில் 

அறியப்பட்டது.

 பின்னர் வெள்ளி, தாமிரம் ஆகியன அறியப்பட்டன. செப்பு மற்றும் தகரத்தை கலந்து 

வெண்கலம் உருவாக்கப்பட்டது.

இரும்பின் கண்டுபிடிப்பும் உற்பத்தியும் உலோகவியலில் மைல்கல்லாகும்.

இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுப்பது கடினமான செயல். கிமு 500 முதல் 

கிபி 500 வரை உலோகவியல் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

உலோகத் தொழில்நுட்பம்

பழந்தமிழரின் உலோக அறிவு மிகச் சிறந்ததாக இருந்தது. சங்க இலக்கியங்களில் பொன், 

வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களின் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.

அகநானூறு மலையிலிருந்து பொன்னைத் தோண்டி எடுத்ததைக் கூறுகிறது.

மலையில் கானவன் யானைத் தந்தத்தைக் கொண்டு பொன்னை அகழ்வது பற்றிய பதிவு 

காணப்படுகிறது.

பொன்னின் தூய்மையை உறுதி செய்ய ‘புடமிடல்’ என்ற முறையைப் பயன்படுத்தினர்.

பரிபாடல் சுடுபொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைச் சுட்டிக்காட்டுகிறது.

உலோகங்களை உருக்கி கருவிகள், அணிகலன்கள், இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள், 

படைக்கலன்கள் ஆகியவற்றை தயாரித்தனர்.

கொல்லன், கம்மியன் போன்ற தொழிலாளர்கள் இருந்தனர்.

பொன்னின் தரத்தை அறிய ‘கட்டளைக் கல்’ பயன்படுத்தப்பட்டது.

உலோகப் பொருட்கள் விற்க தனியே தெருக்கள் இருந்தன.

தமிழக அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் உலோகக் கருவிகள் 

மற்றும் அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழரின் தொன்மையான உலோக 

அறிவை உறுதிப்படுத்துகிறது.

உலைக் கலன்கள்

பழந்தமிழர்கள் இரும்பை உருக்கி வேளாண் கருவிகள், படைக்கலன்கள், இல்லப் 

பயன்பாட்டுப் பொருள்கள், போக்குவரத்து உறுப்புகள் ஆகியவற்றை தயாரித்தனர்.

உலைகள் பெரும்பாலும் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்தன.

வெப்பம் வெளியேறாமல் அதிக வெப்பம் உருவாகும் வகையில் அமைக்கப்பட்டன.

துருத்தி, சுட்டுக்கோல், குறடு, சம்மட்டி, உலைக்கல், அரம், மிதிதோல், உலைமூக்கு 

போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

வெள்ளியை உருக்கப் பயன்பட்ட கொள்கலங்கள் பற்றிய குறிப்புகள் நற்றிணையில் 

காணப்படுகின்றன.

உலோகக் காசுகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன.

அவை துளையுடன் செய்யப்பட்டு அணிகலன்களாகவும் பயன்படுத்தப்பட்டன. 

பொற்காசுகள் பண்டமாற்றிலும் மதிப்பீடாக இருந்தன.

எந்திரங்கள்

பழந்தமிழரின் எந்திரத் தொழில்நுட்பம் வேளாண்மை, பாதுகாப்பு, கட்டுமானம், கைவினைத் 

துறைகளில் காணப்படுகிறது.

வேளாண் கருவிகள்,கரும்பு பிழி எந்திரம், விளைபொருட்களைப் பாதுகாக்கும் பொறிகள் 

ஆகியவை இருந்தன.

ஐங்குறுநூறு “கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்” எனக் குறிப்பிடுகிறது.

பாதுகாப்புத் துறையில் மதிலுறுப்புகள், எந்திரப் புழைகள், தானியங்கி பொறிகள் 

பயன்படுத்தப்பட்டன. கட்டுமானத் துறையில் எந்திர மேடைகள், நீரியக்க அமைப்புகள் 

இருந்தன.

பழங்காலத்தில் தங்கபட்டம், முதலான அணிகள்  கண்டெடுக்கப்பட்டன .

கரியகப் புடமிடல் நுட்பம் எனும் உலோகவியல் பயன்பட்டுள்ளது போன்றவை

இதனால், பழந்தமிழர் உலோக உற்பத்தி மட்டுமல்லாது, அதனை அடிப்படையாகக் 

கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்