இரண்டு மதிப்பெண் வினா
1.அறிவியல் என்றால் என்ன?
அறிவியல், Science என்பது அறிந்துக் கொள்வதல் எனப் பொருள்படும். இது scienta எனும் லத்தீன் மொழிச்சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.
2.அறிவியலின் வகைகள் யாவை?
இயற்கையறிவியல், சமூகஅறிவியல், முறைசாரஅறிவியல் என்று மூன்று வகைப்படும். இயற்கை - உலகம் பற்றியது, சமூகம் - மக்கள் பற்றியது, முறைசார்அறிவியல் - சான்றுகாட்டி நிறுவுவது.
3.இணையத்தில் தமிழ் எப்போது கொண்டு செல்லப்பட்டது?
1996 ஆம் ஆண்டு இணயத்தில் தமிழ் முதன்முதலில் கொண்டு செல்லப்பட்டது.
4.மின் நூலகங்கள் இரண்டின் பெயர்களை எழுது:
ஓப்பன் ரீடிங் ரூம், சென்னை நூலகம், மதுரை திட்டம், இணையத் தமிழ்க் கல்விக்கழகம்.
5.தமிழ் நாட்டின் அறிவியல் ஆளுமைகளின் பெயர்களை குறிப்பிடுக:
அப்துல்கலாம், ஜிடி நாயுடு, எம்எஸ் சுவாமிநாதன், சி வி ராமன்.
6.ஐம்பூதங்கள் என்பவை யாவை?
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
7.உலகம் என்னப்படுவது எது?
ஐம்பூதங்கள் கலந்த மயக்கம் உலகம் என்னப்படும்.
8.ஐந்திணைகள் எவை எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
9.சூழலியல் என்றால் என்ன?
உயிரினங்கள் மற்றும் அவை வாழும் இடங்களுக்கு இடையேயான தொடர்பு சூழலியல் எனப்படும்.
10.நானிலம் என்று கூறப்படுவது எது?
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் இவையே நான்கு நிலங்கள் என்னப்படும்.
11.முதல் பொருள் என்பது எது?
நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்.
12.கருப்பொருள்கள் எவை எவை?
கருப்பொருள்கள் பதினான்கு வகைபடும். பறவை, விலங்கு, பூ, நீர், செடி, உணவு, தொழில் போன்றவை வெற்றுல் அடங்கும்.
13.சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் எவை எவை?
மூன்று வகைப்படும். விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரீக நிலை.
14.பழந்தமிழர் வேளாண்மை தொழில்நுட்பங்கள் இரண்டினைக் கூறு.
கலப்பை, தளம்பு, ஏற்றம், பட்டை, பன்றிப்பொறி.
15.எந்திரப் பாவை என்றால் என்ன?
தானே இயங்கும் பொறியியல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட பாவை.
16.எந்திர வாவி என்றால் என்ன?
இயந்திரம் பொருத்தப்பட்ட நீர் நிறைத் தொட்டி ஆகும்.
17.குறுநீர்க் கன்னல் என்றால் என்ன?
காலத்தை அளந்து கணக்கிடும் கருவி குறுநீர்க் கன்னல் ஆகும்.
கணித்துக் கூறுபவர், நாளிகை கணக்கர், குறுநீர் கன்னல் எண்ணுனர் எனப்பட்டனர்.
18.குமிழித் தூம்பு என்றால் என்ன?
பெரிய ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்ட நீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் கருவி குமிழித் தூம்பு .
19.சுருங்கை குறிப்பு வரைகள் -
சுருங்கை என்பது பூமிக்கு அடியில் செல்லும் சிறிய குழாய். பெரிய குளங்களில் உள்ள நீர் இதன் வழியே வெளியேறிப் பயன்படும்.
20.கற்சிறை என்றால் என்ன?
எட்டாம் நாள் பிறை நிலவைப்போல கட்டப்பட்ட தடைபணையைக் கற்சிறை என்கின்றனர்.
21.மழைநீர் சேமிப்பு பற்றி விளக்கும் நூல்கள் எவை?
புறநானூறு, சிலப்பதிகாரம், சிறுபஞ்சமூலம், மலைபடுகடாம், நான்மணிக்கடிகை.
22.நிலவளத்தினை எவ்வாறு சங்கத் தமிழர் கடைப்பிடித்தனர்?
காலநடைகளின் கழிவாகிய தொழு உரத்தையும் தழையுரத்தையும் பயன்படுத்தி மேம்படுத்தினர்.
23.தாதெரு மன்றம் என்றால் என்ன?
எருக்களைச் சேமித்து வைக்கும் இடம் தாதெரு மன்றம் எனப்பட்டது.
24.பெருவெடிப்பு கொள்கை என்றால் என்ன?
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதுவும் அறிய முடியாத நுண்ணிய ஒன்றிலிருந்து பெரிய வெடிப்பு ஏற்பட்டது. பருப்பொருட்கள் அனைத்தும் சுருங்கி அணுவை விட சிறியதாகி அதிக வெப்பமும் அடர்த்தியையும் கொண்ட பந்தாக உருவானது. அப்பந்து மெல்லக் குளிர்ந்து விரிவடைந்து மீண்டும் சிதறியது. அப்போது ஆற்றலும் பருப்பொருட்களும் எல்லா திசையிலும் பரவின. இது பெரு வெடிப்பு கொள்கை அல்லது சூரிய பெருவெடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
25.ஊழிக் காலம் என்றால் என்ன?
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதற்கான காலம் பல லட்சம் ஆண்டுகள். இதனை ஊழிக் காலம் என்பர்.
26.தமிழகத்தின் எல்லைகள் எவை?
வடக்கு வேங்கடமலை, தெற்கு குமரி, கிழக்கு மேற்கு கடல்கள்.
27.தனித்த உலோகம் என்றால் என்ன?
சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டபடாத வேறு வேதிப் பொருட்களுடன் வினைப்புரியாத உலோகம் தனித்த உலோகம் எனப்படும். எடுத்துக்காட்டு தங்கம், வெள்ளி, தாமிரம்.
28.கலப்பு உலோகம் என்றால் என்ன?
செப்பு மற்றும் வெள்ளியத்தை கலந்து செய்யும் உலோகம் கலப்பு உலோகம் வெண்கலம் எனப்படும்.
29.பொன்னுடைய நியமம் என்றால் என்ன?
பொன் விற்கும் கடைத் தெரு பொன்னுடைய நியமம் எனப்படும்.
30.உலோகக் கால கருவிகள் எவை எவை?
துருத்தி, சுட்டுக் கோல், குறடு, சம்மட்டி, மிதித்தோல்.
31.நாள் மீன் என்றால் என்ன?
இயற்கையிலேயே ஒளியுடைய மீன்கள் நாள் மீன்கள் எனப்படும்.
32.கோள் மீன் என்றால் என்ன?
சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுபவை கோள் மீன்கள் எனப்படும்.
33.விண்மீன்கள் நான்கின் வகைகளைக் குறிப்பிடு.
வெள்ளி மீன், சனிமீன், செம்மீன், எரிமீன், வடமீன்.
34.வளிமண்டலத்தின் அடுக்குகள் எவை எவை?
வளிமண்டலத்தின் அடுக்குகள் ஐந்து வகைப்படும். கீழடுக்கு, படுக்கையடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு.
35.வளிமண்டலம் என்றால் என்ன?
பூமியைச் சுற்றி எங்கும் பரந்து உள்ள வாயுக்களால் ஆன காற்றுமண்டலம் வளிமண்டலம் எனப்படும்.
36.காற்று வழங்கா வானம் என்றால் என்ன?
பூமியிலிருந்து சுமார் எட்டு கி.மீ மேல் காற்று இல்லை. இதனை பழந்தமிழர் காற்று வழங்கா வானம் என்றனர்.
37.உயிரியல் என்றால் என்ன?
உயிர்களைப் பற்றிய இயற்கை அறிவியல் உயிரியல் எனப்படும்.
38.உளவியலின் தந்தை யார்?
உளவியலின் தந்தை சிக்மன் ஃப்ராய்டு.
39.உளவியல் என்றால் என்ன?
உள்ளத்தைப் பற்றிய அறிவியல் உளவியல் எனப்படும்.
40.தொல்காப்பியர் உயிர்களை எத்தனையாக வகைப்படுத்துகிறார்?
தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்துகிறார்.
41.தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள் எத்தனை?
எட்டு வகையான மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
42.எவையேனும் நான்கு மெய்ப்பாடுகளைக் கூறுக.
நகை, அழுகை, பெருமிதம், அச்சம், இளிவரல், மருட்கை, உவகை, வெகுளி.
43.அந்தக்கேணி என்றால் என்ன?
ஆழ்துளைக் கிணற்றையே அந்தக்கேணி என்றழைத்தனர் சங்கத் தமிழர்.
44.தீம்பிழி இயந்திரம் என்பது என்ன?
கரும்பிலிருந்து சாறு எடுக்கும் இயந்திரம் தீம்பிழி இயந்திரம் எனப்படும்.
45.கமழிப்படலம் என்றால் என்ன?
ஓசோன் அடுக்கையே சங்க இலக்கியம் கமழிப்படலம் என்கிறது.
46.கோளரங்கம் பற்றி குறிப்பிடும் நூல் எது?
கொங்குவேளிரின் பெருங்கதையில் கோளரங்கம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
47.உரையாசிரியர்கள் நால்வரின் பெயர்களை கூறுக.
நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர், இளம்பூரணர்.
48.கடிதத்தின் வகைகள் எவை?
முறைசார் கடிதம், முறைசாராகக் கடிதம்.
49.செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
மனித மூளையை உருவகப்படுத்தக்கூடிய அல்லது மனிதர்களைப் போலவே செயல்படக்கூடிய அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்குவது செயற்கை நுண்ணறிவு ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக