தொழில்நுட்ப மேலாண்மை
தொழில்நுட்ப மேலாண்மை
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
ஆனால்
வேறுபட்டவை. தியோடர் வோன் கர்மான் கூறுவதுபோல்,
அறிவியல் உலகம் எப்படி உள்ளது என்பதை
விளக்குகிறது.
பொறியியல் இதுவரை இல்லாததை
உருவாக்குகிறது.
தொழில்நுட்பம் கருவிகள், செயல்முறைகள் மூலம் அவற்றைப் பயன்படுத்தும்
முறையைக் குறிக்கிறது.
இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தே
வளர்கின்றன.
தொழில்நுட்பத்தின்
இன்றியமையாமை
மனிதனின் தேவைகள் காலத்தோறும் அதிகரிக்கின்றன. அவற்றை நிறைவேற்ற புதிய
கருவிகள், முறைகள் உருவாகின்றன. நாடுகளின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேலாண்மை
அடிப்படை. இயற்கை வளமில்லாத நாடுகளும் தொழில்நுட்ப திறனின் மூலம்
முன்னேறியுள்ளன. மனித மற்றும் இயந்திர ஆற்றலை ஒருங்கிணைத்து இலக்குகளை
அடைய தொழில்நுட்பமே காரணியாக உள்ளது.
உயிரினப் பரிணாமமும்
தொழில்நுட்பமும்
Charles Robert Darwin தனது On the Origin of Species (1859), The Descent of Man (1871) நூல்களில்
மனிதன் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவன் எனக் கூறினார். ‘இயற்கைத் தேர்வு’
கோட்பாட்டின்படி தகுதியானவை வாழ்ந்து, தகுதியற்றவை அழிகின்றன.
இந்தக் கோட்பாட்டை சமூக வளர்ச்சியுடன் இணைத்தவர் Lewis Henry Morgan. அவர்
சமூகங்களை விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்று
வகுத்தார். ஒவ்வொரு நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி
முக்கிய பங்காற்றியது.
தொழில்நுட்ப வரலாறு (History of Technology)
கற்கருவிகள் (2.5 மில்லியன் ஆண்டு), கை கோடாரி, தீ உருவாக்கம் ஆகியவை
முதன்மைத் தொழில்நுட்பங்கள். பின்னர் உடை, வேட்டை கருவிகள், வேளாண்மை,
சக்கரம், உலோகம் பிரித்து எடுத்தல் , எழுத்து, கண்ணாடி போன்றவை
கண்டுபிடிக்கப்பட்டன.
பழைய கற்காலம் – உயிர்பிழைப்பு, வேட்டை, தீ, கற்கருவிகள்,கடலில் செல்லும் கலங்கள்,
பாய்மரப் பயன்பாடு,விண்மீன்களைக்
கொண்டு வழிகாணுதல் போன்ற நுட்பங்கள் .
புதிய கற்காலம் – வேளாண்மை தொடக்கம், உறுதியான பாறைகளைக் கொண்டு
கற்கருவிகள் ,சுரங்கத் தொழில், கற்கோடாரி.
உலோகக் காலம்
இக்காலம் மிக முக்கியமான மைல்கல் .
தனித்த உலோகம் , கலப்பு உலோகம் , புழங்கு பொருட்கள் பயன்பாடு செப்பு,
வெண்கலம்,
இரும்பு, எஃகு தயாரிப்பு போன்றவை நிகழ்ந்த காலகட்டம்.
வெண்கலக் காலத்தில் உலோகங்களை உருக்கும் தொழில் நுட்பம் உண்டானது.
முதலில் செப்பு, பின்னர் செப்பும் ஈயமும் கலந்த கருவிகள், இரும்புக் கருவிகள்
போன்றவற்றால் நவீன தொழில்நுட்பம் தொழில்புரட்சிக்குக் காரணமாகி, மின்சாரம்,
மருத்துவம், கணினி, இணையம், செயற்கைக் கோள் போன்ற முன்னேற்றங்களை
உருவாக்கியது.
தமிழரும்
தொழில்நுட்பமும்
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தமிழரின் மரபு அறிவியல், பொறியியல்,
தொழில்நுட்பச் செய்திகளை வழங்குகின்றன. வேளாண்மை, நெசவு, கட்டுமானம்,
பாதுகாப்பு, கப்பல், ஊர்தி, எந்திரங்கள் போன்ற துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி
காணப்படுகிறது.
வேளாண்மைத்
தொழில்நுட்பம்
நீர்ப்பாசனம், நீர்நிலைகள், உழவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ‘கலப்பை’, ‘தளம்பு’
போன்ற கருவிகள் குறிப்பிடத்தக்கவை. நீர் ஏற்றக் கருவிகள் (ஏற்றம், துலா, பட்டை
முதலியவை) பயன்படுத்தப்பட்டன. கரும்பு பிழி எந்திரம் மூலம் வெல்லம்
தயாரிக்கப்பட்டது.
நெசவுத் தொழில்நுட்பம்
பருத்தி, பட்டு, மயிர் துணிகள் தயாரிக்கப்பட்டன. வண்ணம் ஏற்றுதல், அலங்காரம்,
வணிகத் தெருக்கள் ஆகியவை இருந்தன. சிலப்பதிகாரம் நெசவுத் தொழிலின்
மேம்பாட்டைச் சுட்டுகிறது.
கட்டுமானத்
தொழில்நுட்பம்
உறையுள், அரண்கள், மதில்கள், நீர்நிலைகள், மாளிகைகள் கட்டப்பட்டன. 2000
ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள கல்லணை தமிழரின் நீரியல் பொறியியலின் சான்று.
பாதுகாப்பு மதில்களில் எந்திரப் பொறிகள்
பொருத்தப்பட்டிருந்தன.
ஊர்திகள் மற்றும்
சக்கரம்
சக்கர தொழில்நுட்பம் தேர்கள், வண்டிகள், மண்பாண்டச் சக்கரம் ஆகியவற்றில்
பயன்படுத்தப்பட்டது. இது பிற்காலத்தில் தோன்றிய அனைத்திற்கும் அடிப்படைப்
பொறியியல் முன்னேற்றமாகும்.
கப்பல் கட்டுமானம்
தமிழர் கடல் வாணிகத்தில் சிறந்தனர். பலவகை மரக்கலங்கள் இருந்தன.
கப்பல் கட்டுமான நிபுணர்கள் ‘கம்மியர்’ என அழைக்கப்பட்டனர். கடல் பயண நுட்பம்,
பழுது நீக்கும் திறன் ஆகியவை இருந்தன.
பிற எந்திர நுட்பங்கள்
எந்திரப் பாவை – தானியங்கி பொம்மை.
எந்திர வாவி – நீர் நிரப்பு,
வெளியேற்ற இயந்திரம்.
குறுநீர்க் கன்னல் – நேரம் கணக்கிடும்
கருவி.நேரத்தை அளப்பவர் நாழிகைக் கணக்கர்,
குறுநீர்க் கன்னல் எண்ணுணர்,பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்.
வான ஊர்தி சிந்தனை – இலக்கியங்களில்
வானூர்தி குறிப்பு (சீவக சிந்தாமணி).
தமிழரும் உலக சமூகங்களும் பரிணாம
வளர்ச்சியின் மூலம் தொழில்நுட்ப
முன்னேற்றத்தை அடைந்தனர்.
தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அனைத்து
துறைகளையும் மாற்றியமைத்து, சமூக
முன்னேற்றத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக