நிலவியல் 1
நிலவியல்
புவியின் தோற்றம், அமைப்பு, மாற்றங்கள் ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில்
அறிதல் நிலவியல் எனப்படுகிறது.
பூமியின்
தோற்றமே நிலவியலில் முதன்முதலில் ஆராயப்பட்ட பொருளாகும்.
பண்டைக் கிரேக்க அறிஞர் Aristotle கிமு 4ஆம் நூற்றாண்டில் பூமியில் மெதுவாக
ஏற்படும் மாற்றங்களைப்
பற்றி கூறினார்.
இம்மாற்றங்கள் கண்களுக்கு எளிதில் புலப்படாதவை என்றும் சிறுகச் சிறுக
நிகழ்வவை என்றும் அவர் விளக்கினார்.
பின்னர் இக்கருத்துகள் அறிவியல் உலகில்
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழினமும் பூமி, அண்டவெளி போன்றவற்றைப் பற்றிய தனித்துவமான
கொள்கைகளைப் பெற்றிருந்தது. அவை இன்றைய அறிவியல் நோக்குடனும்
பொருந்துகின்றன.
உலகத் தோற்றம்
உலகத் தோற்றம் என்பது உயிர்கள் தோன்றிப் பெருகுவதற்கான பூமியின்
உருவாக்கத்தை விளக்குவது ஆகும். பூமியின் வயது சுமார் 400 கோடி ஆண்டுகள் என
பாறைகள் மற்றும் படிகக் கற்கள் ஆய்வின் அடிப்படையில்
கணிக்கப்படுகிறது.
பெருவெடிப்புக் கொள்கை படி, நுண்ணிய ஒன்றிலிருந்து மிகப்பெரிய வெடிப்பு
ஏற்பட்டது.
அதன் மூலம் ஆற்றலும் பொருள்களும் எல்லாத் திசைகளிலும் பரவின. பின்னர் அவை
குளிர்ந்து அண்டம், சூரியன்,
கோள்கள் ஆகியவை உருவாயின.
இக்கொள்கையை அறிஞர் Fred
Hoyle விளக்கியதாக குறிப்பிடப்படுகிறது.
உலகத் தோற்றம் – தமிழர் கொள்கை
பழந்தமிழர் சூரிய மண்டலத்திலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்பே உலகம் எனக்
கருதினர்.
பல “ஊழிக் காலங்கள்” கடந்தபின் அது குளிர்ந்து உயிர்கள் வாழ ஏற்ற நிலை
பெற்றது எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
அகநானூறு சூரிய மண்டலத்தை “வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்” எனக்
குறிப்பிடுகிறது.
பரிபாடல் உலகம் தீப்பிழம்பிலிருந்து தோன்றி பல கால மாற்றங்களின் மூலம்
உருவானது என விளக்குகிறது.
பூமி முதலில் நெருப்புக் கோளமாக இருந்து, மழைப்பொழிவின் காரணமாக
குளிர்ந்து, பின்னர் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் பெற்றது என்பது தமிழர்
கொள்கையாகும்.
ஐம்பெரும் பூதங்கள்
உலகம் நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனப்
பழந்தமிழர் கூறினர்.
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று
தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
மேலும் புறநானூறு நிலத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்று,
காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர் தோன்றியது என
விளக்குகிறது.
இக்கருத்து இன்றைய அறிவியலில் கூறப்படும் மூலப்பொருட்கள் பற்றிய
கோட்பாடுகளோடும் ஒப்பிடத்தக்கதாக உள்ளது.
புவியியல் அமைப்பு – உலகம்
பண்டைத்தமிழர் உலகம் பரந்த நிலப்பரப்பாகவும், கடல்கள் சூழ்ந்ததாகவும், உயர்ந்த
மலைகள் கொண்டதாகவும் இருப்பதை அறிந்திருந்தனர்.
மதுரைக்காஞ்சி உலகம் கடல்களால் சூழப்பட்டு, உயர்ந்த மலைகள் நிறைந்தது எனக்
குறிப்பிடுகிறது.
புறநானூறு உலகம் நீரால் சூழப்பட்ட பெரும்
நிலப்பரப்பு எனச் சுட்டுகிறது.
நில வரைவியல் – தொல் தமிழகம்
தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பு வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை, கிழக்கு–
மேற்கு கடல்களால் சூழப்பட்டதாக இருந்தது.
புறநானூறு மற்றும் பரிபாடல் தமிழக எல்லைகளைச்
சுட்டுகின்றன.
“வடவேங்கடம் தென்குமரி” எனத் தமிழ் வழங்கிய நில எல்லையை தொல்காப்பியம்
பாயிரம் குறிப்பிடுகிறது.
சங்ககாலத் தமிழகத்தின் நிலவியல்
கூறுகள்
சங்ககாலத் தமிழகம் குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்)
என நான்கு நிலங்களாகப் பிரிக்கப்பட்டது. கடும் வறட்சியால் பாலை நிலம்
உருவானது.
தொல்காப்பியம் அகத்திணையியல் இதனை வரையறுக்கிறது.
ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த இயற்கை வளம், தொழில், பொருளாதாரம்,
வாழ்வியல், பண்பாடு இருந்தது. இயற்கை வளமே சமூக வளர்ச்சியின்
அடிப்படையாக அமைந்தது.
பழந்தமிழர் உலகத் தோற்றம், ஐம்பூதக் கொள்கை, புவியியல் அமைப்பு, நிலப் பகுப்பு
ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவியல் சிந்தனையைக் கொண்டிருந்தனர். சங்க
இலக்கியங்கள் இவற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. இக்கருத்துகள்
பலவகையில் இன்றைய அறிவியல் கோட்பாடுகளோடும் ஒத்துப்போகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக