சமூக மறுமலர்ச்சி
சமூக மறுமலர்ச்சி
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு:
சாதி என்பது
தொழிலோடு தொடர்பு உடையது. இந்தச் சாதியினர் இந்தத் தொழிலைத் தான் செய்ய வேண்டும்
என்பது சாத்திர விதி.
அதை மீறக் கூடாது
என்ற நிலை இருந்தது.
தென்னிந்திய நல
உரிமைக் கட்சி (நீதிக்கட்சி) 1920 இல் ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு, பொதுக்
கல்விமுறை, அனைவருக்கும் அரசு வேலை போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது.
1953 இல் அன்றைய
மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் மாகாணத்தில்
அனைத்துத் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கான புதிய கல்வித் திட்டத்தை
அறிமுகப்படுத்தினார்.
இதன்படி ஒரு
குழந்தை பாதிநாள் பள்ளியில் கல்வி கற்க வேண்டும்.
பின் பாதிநாளில்
தந்தையின் பாரம்பரியத் தொழிலை கற்க வேண்டும்.இதனால் கோயிலில் பணி செய்வோரின்
குழந்தை கோயிலிலும், விவசாயக் கூலிகளின் குழந்தை வயலிலும் வெட்டியானின் மகன்
சுடுகாட்டிலும் தொழில் கற்கச்செல்ல வேண்டி வந்தது.
திராவிடர் கழகமும்
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியும் இதனைக் 'குலக்கல்வித் திட்டம் என்று கூறி
எதிர்த்தன.
இத் திட்டத்திற்குக் காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்புத் தொடங்கியது. 1954 இல் ராஜாஜி ராஜினமா செய்தார்.
மணக்கொடை
(வரதட்சிணை) எதிர்ப்பு:
வரன் - மணமகள் :
தட்சிணை - உயர்ந்தோருக்கு அளிக்கப்படும் பொருள். மணமகனுக்குக் கொடுக்கப்படும்
செல்வம் வரதட்சிணை ஆகும்.
பருவம் அடைவதற்கு
முன்பே தம் பெண்களுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்று கருதி மணமகனைத் தேடும்
போட்டியில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் செல்வந்தரான பெற்றோர்கள் பணம் கொடுத்து
மணமகனைத் தேடினர். இங்குதான் வரதட்சிணை தொடங்கியது. உயர் சாதியினரிடம் இருந்த
வழக்கம், மெல்ல மெல்ல மற்றவரிடமும் பரவியது. வரதட்சிணை கட்டாயமானது. அளவும்
அதிகமானது. இதனால் சமுதாயத்தில் பல பெண்களுக்குத் திருமணம் கேள்விக்குறியானது.
நல்ல மணமகன் கிடைப்பதும்
சீர்திருத்தவாதிகள்
மணக்கொடையை வன்மையாக எதிர்த்தனர். வரதட்சனை தடுப்புச் சட்டக் 1961’ல் கொண்டுவரப்பட்டது.
கலப்புத்
திருமணம் , சாதிமறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு: பெண்
கொடுத்தல், பெண்
எடுத்தல் என்ற திருமண முறையில் கோத்திர அடிப்படையில் புறமண முறையையும் சாதிய
அடிப்படையில் அகமண முறையையும் தமிழர்கள் பின்பற்றுக்கின்றனர்.
எனவே வேற்றுமை
சாதியில் திருமணம் செய்வதைப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்பதில்லை.
அதற்குச் சாத்திர
அங்கீகாரமும் கிடையாது,இதனால் சில காதலர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதானது.
இதனால்
சீர்திருத்தவாதிகள் கலப்புத் திருமணத்திற்கும் சாதி மறுப்புத் திருமணத்திற்கும்
ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இத திருமணம் சாதி
ஒழிப்புக்குத் துணை நிற்பதாகவும் அவர்கள் கருதினர்.
இதனால் அரசு சட்டம் இயற்றி, இவ்வகைத் திருமணங்களுக்கு சட்ட ஏற்பளித்தது.
அரசு விதிகளின்படி
கலப்புத் திருமணம் என்பது மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் (அ) அருந்ததியர் (அ)
பழங்குடியினரில் ஒருவராக இருக்க வேண்டும்.
பின் முன்னேறிய
வகுப்பினர் (ஓ.சி.) பிற வகுப்பு மணஉறவு கொள்வதும் கலப்புத் திருமணம் எனப்பட்டது.
அதே வேளையில், பிற்படுத்தப்பட்ட (அ) தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள வேறு வேறு
சாதியினர் மணம் புரிந்து கொள்வது கலப்புத் திருமணம் அன்று அது சாதி மாற்றுத்
திருமணம் ஆகும்.
சுயமரியாதைத்
திருமணம் ஏற்பு:
தமிழ்நாட்டில்
திராவிட சிந்தனைகள் மேலோங்கிய போது சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிர்ப்புகள்
கிளம்பியது.
சடங்குகள்
இல்லாமல், ஐயர் இல்லாமல் தம்குடும்பத்தார். நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக்
இல்லறத்தில் ஈடுபட்டனர். திருமணங்களுக்கு சட்ட ஏறுப்புக் கிடைக்கவில்லை.
1967 இல் தி.மு.க
கட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இத்திருமணத் திற்குச் சட்ட ஏற்பை அளித்தது.
இச்சட்டம்
தமிழ்நாட்டிற்கு மட்டுமே என்றானது. இத்திருமணத்திற்கு புரோகிதர் மறுப்புத் திருமணம், புரட்சி திருமணம்
என்ற வேறு பெயர்களும் உண்டு.
பெண்களுக்குச்
சொத்துரிமை:
நீண்ட நெடுங்காலமாகப் பெற்றோரின் சொத்தில்
அவரின் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது.
திருமணமாகிப்
புகுந்தவீடு செல்லும் போது; பெற்றோரே அல்லது உடன் பிறந்தவர் கொடுக்கும் பொருள்களே
அவளின் சொத்தாகும்.
அதாவது பெண்ணுக்கு
அசையா சொத்துகளில் (வீடு, நிலம்) உரிமை கிடையாது.
அசையும் சொத்துக்களில் (நகை, ஆடுமாடு, பொருள்) கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையே இருந்தது.
1929 இல்
செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள்
பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு வேண்டும் என்ற முயற்சியில் தீர்மானம்
கொண்டு வந்தார்.
123 பரம்பரைச்
சொத்திலும் பெண்களுக்குச் சம பங்கு உண்டு என்று சட்டம் 1989 மார்ச் மாதம் 25 ஆம்
நாள் அன்று தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது.
இது இந்து வாரிசு
உரிமைச் சட்டம் (தமிழ்நாடு சட்டத்திருத்தம்). 1989 எனப்பட்டது.
2005 இல் தான்
நடுவன் அரசு பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் (இந்து வாரிசுரிமைச்
சட்டம் திருத்தம் 2005) இயற்றியது.
இவ்வாறு பல
போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் சொத்துரிமை பெற்றனர்.
தேவதாசி
முறை ஒழிப்பு:
கோவிலின்
திருப்பணிகளுக்காகவும், சேவைக்காகவும் சிறுவயதில் பெண்கள் நேர்ந்து விடப்பட்டனர்.
இவர்கள் இறைவனுக்கு
அடிமை என்ற பொருளில் தேவதாசிகள் எனப்பட்டனர்.
இவ்வாறு நேர்ந்து
விடப்படும் முறைக்கு 'தேவதாசி முறை என்று பெயர்.
நாயக்கர் ஆட்சி
காலத்தில் பெரிய கோயில்களில் நூற்று கணக்கில் தேவதாசிகள் இருந்தனர் .
1930 இல்
முத்துலட்சுமி ரெட்டி என்பவர் பெரியாரின் துணையால் சட்டமன்றத்தில் இது குறித்த
சட்ட முன் வரைவைக் கொண்டு வந்தார ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
பின் தந்தை
பெரியாரின் தீன் பிரச்சாரத்தாலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின்
பிரச்சாரத்தாலும் அண்ணா, கலைஞரின் எழுத்துக்களாலும் தேவதாசி முறைக்குப்
பலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
இதனால் 9-10-1942
இல் மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டம்
தேவதாசிகளுக்கு திருமண உரிமையைத் தந்தது.
பெண்களைக் கோயில்களுக்கு நேர்து விடுவதைக் குற்றம் ஆக்கியது.
மேலும் தீண்டாமை
ஒழிப்பு, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீடு,
ஊராட்சி மன்றங்களின் பெண்களுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு
கருத்துகள்
கருத்துரையிடுக