கலைச்சொல் சிக்கல்கள்,சிக்கலை நீக்கும் வழிமுறைகள்
கலைச்சொல் சிக்கல்கள்
கலைச்சொல்லை உருவாக்கும்போது சில சிக்கல்கள் தோன்றக்கூடும்.
அவற்றை அறிந்து நீக்க வேண்டும்.
தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் சில:
ஒன்றுக்கு மேற்பட்ட கலைச் சொற்களைப் பயன்பாட்டில் ஓரே நேரத்தில் வைத்திருத்தல்.
Valve - வால்வ், தடுக்கிதழ், திறப்பி
Atomic Energy - அணுசக்தி, அணு ஆற்றல் . Acupuncture - அக்குபன்சர், சீன மருத்துவம், ஊசி மருத்துவம்
Diabetes சர்க்கரை நோய், நீரிழிவு நோய் இதனால், படிப்போர்க்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.
2. கலைச்சொல்லாக்கும்போது ஒரு பொருளை உணர்த்தும் சொல்லுக்கு
மட்டும் கலைச் சொல்லை உருவாக்கிவிட்டு அதன் உறுப்புகளுக்கு உரிய கலைச் சொற்களை உருவாக்காமல் விடுவது.
Bicycle மிதிவண்டி கலைச்சொல்லை ஆக்கிவிட்டோம். Tube. எனினும்
மிதிவண்டியின் உறுப்புகளாக உள்ள Seat, Break, Ball, spokes, Baring. Tyre, Handle போன்றவற்றுக்கான கலைச்சொற்களை உருவாக்கவில்லை.
இதனால் 'சைக்கிள்' என்ற ஒலி பெயர்ப்பே பெரு வழக்காகி விடுகிறது.
3. ஒலிபெயர்ப்புச் செய்யும்போது, தமிழ் எழுத்துக்கு மாற்றாக கிரந்த
எழுத்தையோ தமிழ் இலக்கணத்திற்குப் பொருந்தா வகையிலோ ஒலிப்பெயர்ப்புச் செய்தல்.
Hotel - உணவகம். இதனை ஒலிபெயர்க்கும் போது 'ஓட்டல்' என்பது தமிழ்மொழி இலக்கணத்திற்கு ஏற்றதாக உள்ளது. இது தமிழ் எழுத்தால் ஆகியது. பன்மை உருபை ஏற்கும்போது 'ஓட்டல்கள்' எனத் தமிழ்ச்சொல் போன்றே ஏற்கின்றது. இதையே, 'ஹோட்டேல்' எனச் சிலர் ஒலிபெயர்க்கின்றனர். இது கிரந்த எழுத்தைக் கொண்டிருப்பதுடன் ஹோட்டேல்கள் எனப் பன்மை உருபை ஏற்கும்போது, இயல்பற்று நிற்கிறது.
4 Bus என்பதற்குப் பேருந்து என்ற கலைச்சொல்லை உருவாக்கினார். இதன் ஒலி பெயர்ப்பான 'பஸ்' என்பதும் வழக்கில் உள்ளது. இதில் உள்ள கிரந்த எழுத்தை நீக்க வேண்டின் அது 'பசு' என்றாகிப் பொருள் குழப்பத்தை
ஏற்படுத்தும்.
எனவே, பஸ் என்றே கொள்ளவேண்டும். தமிழ் இலக்கணப்படி அந்த +பசு=அந்தப் பசு என்று வல்லொற்று மிகுந்து புணரும். அந்த+பஸ் என்பதை அந்தப் பஸ் என்று உணர்த்தாமல் 'அந்த பஸ்' என்று ஒற்றுமிகாமல் புணர்க்க வேண்டியுள்ளது. மேலும், பஸ்+ஐ=பஸ்ஸை, பஸ்சை, பஸ் -சூ=பஸ்ஸிற்கு,
காங்கிரஸ்+கு=காங்கிரசுக்கு பஸ்சிற்கு. போன்ற புதுப்புது இலக்கணங்கள் தோன்றுகின்றன.
5.
ஆங்கிலத்தில் சுருக்க வடிவங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்
படுகின்றன.
Chief minister
C.M. Government Order G.O .
இவ்வாறு பலவற்றுக்கும் சுருக்க வடிவம் இல்லாமல் அல்லது ஏற்படுத்த இயலாமல் சிக்கலாக உள்ளது.
நல்ல கலைச்சொல்லாக்கங்களும் ஒலிபெயர்ப்புகளும் இருக்கும்போது ,
அதனைக் கைவிட்டுவிட்டு, தமிழுக்கு ஒவ்வாத வகையில் உள்ளன வற்றை வேண்டும் என்றே பயன்படுத்துதல்.
Collector என்பதற்கு ஆட்சியர் என்ற கலைச்சொல்லாக்கம் இருந்தபோதும்,
அதனை விடுத்து 'கலெக்டர்' என்றே பேசுகின்றனர். சிலர் எழுத்திலும்
எழுதுகின்றனர். Department (துறை), Government (அரசு) போன்றவற்றைப்
பேசும்போது ஆங்கிலத்தையும், எழுதும் பொழுது தமிழ்க் கலைச்
சொல்லையும் பயன்படுத்துகின்றனர்.
7. தலைப்புச் செய்திகள் என்ற தமிழ்வடிவத்தை விடுத்து, முக்கியச்
செய்திகள் என்றும் தலைமை அமைச்சர் என்பதை விடுத்து, பிரதம மந்திரி
என்றும் சிலர் வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர்.
Investigation புலனாய்வு என்ற கலைச்சொல் இருக்க, அதனை விடுத்து,
''விசாரணை' என்ற பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
அதனையும்
'விசாரணை' என்று வலிப்பது மிகவும் தவறாகும்.
உடன்மொழி பெயர்ப்பு, உடன் கலைச் சொல்லாக்கம் இல்லாததால்
ஒலிபெயர்ப்புகள் உடனடியாகத் தோன்றி நிலைபேறு அடைந்து
விடுகின்றன.
அதனை
மாற்றுவது சிக்கலாகிறது.
சிக்கலை
நீக்கும் வழிமுறைகள்:
1. அறிஞர் குழுவை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற 'கலைச்சொல்'
இதுதான் என்று வரையறுக்க
வேண்டும்.
அதனையே அனைவரும்
பயன்படுத்த அரசு வலியுறுத்த வேண்டும்.
2. அறிஞர்கள்
உடனுக்குடன் கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்.
அப்படிச்
செய்தால்தான் ஒலிபெயர்ப்புக்களைக் குறைக்க முடியும்.
அரசு, கலைச்சொல் அகராதிகளைத் துறைதோறும் உருவாக்குவதுடன்
அதனை அத்துறை சார்ந்தவர்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும் அறிதல்
வேண்டும்..
3. உருவாக்கிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே பாட நூல்களை
உருவாக்க வேண்டும் எனச் சட்டம்
இயற்ற வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக