தொழில் நுட்ப வளர்ச்சி
வேளாண்மை
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை திட்டங்களுக்கு ரூ.9.37
கோடியும் இரண்டாவது திட்ட காலத்தில் ரூ 51.02 கோடியும் மூன்றாவது
திட்ட காலத்தில் ரூ 57.20 கோடியும் நான்காவது திட்ட காலத்தில் ரூ.9348
கோடியும் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் வேளாண்மையைப் பொறுத்த மட்டில் தமிழகத்தில்
ஒன்றேபோல் உள்ள சூழ்நிலை இல்லை.
மழையை நம்பியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. மரபு
வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மற்றும் கூட்டுப் பண்ணை வேளாண்மை போன்ற முறைகள்
பின்பற்றப்படவில்லை.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தஞ்சை, திருச்சி, நெல்லை முதலிய
பகுதிகள் வேளாண்மையில் சிறப்புடன் விளங்குகின்றன. ஆனால்
தமிழகத்தில் உள்ள வேறு சில பகுதிகள் தொடர்ந்து வறட்சியால்
பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
அணைகள்
இந்தியா விடுதலை
அடைந்த பிறகு, பவானி சாகர் அணை (1956), அமராவதி அணை (1957) மணிமுத்தாறு அணை
(1958), சாத்தனூர் அணை (1958) பெரும் சாணி அணை (1958) வைகை அணை (1959), ஆழியாறு
அணை (1962) சேர்வலாறு அணை (1985) போன்ற பெரிய அணைக்கட்டுகள் தமிழகத்தில்
கட்டப்பட்டன.
நில உச்சவரம்பு
முதலில் நில
உச்சவரம்பு கொண்டு வந்தபோது, ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர்
நிலம் மட்மே வைத்திருக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆயினும் இது போதிய
பலனளிக்கவில்லை. எனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அது 15 ஸ்டாண்டர்டு
ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
ஒட்டு ரகங்கள்- தன்னிறைவு
சுதந்திரத்திற்குப்
பின் தமிழகத்தில் கரும்பு, நெல், பருத்தி,சோளம், கம்பு போன்ற விலை பொருட்களில்
ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன.
இதன் காரணமாக
தமிழகத்தில் சுமார் 1971க்கு உள்ளாகவே உணவுத் துறையில் தன்னிறைவு ஏற்பட்டது.
உணவுப்பொருள்
விலையேற்றம் ஏற்பட்ட போதிலும் அவற்றை வாங்கும் சக்தி பெருகியது.
இதனால்,
இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் விளங்குகின்றது.
பசுமைப் புரட்சி
ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், கால்நடை நலன் காத்துப் பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த் துறையின் மூலம் புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல், கூட்டுறவு சங்கம் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள், பாசன நீர் வழித்தடங்களைத் தூர்வாருதல் போன்றவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
தொழில் துறை
வளர்ச்சி:
தமிழ்நாடு
இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும்.
இது பலதரப்பட்ட
உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது.
மற்றும்
ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், பொறியியல், மருந்துகள், ஆடைகள்,
ஜவுளிகள், தோல், இரசாயனங்கள், பிளாஸ்டிக், போன்ற பல தொழில்களில் முன்னணியில்
உள்ளது.
தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகப் பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருகிறது .
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி), தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (டான்சிட்கோ) ஆகியவை இணைந்து மாநிலத்தில் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.
தொழில்களைக்
சுனரகத் தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள் என்று பிரிக்கலாம்.
நெசவு ஆலைகளே
பெருந்தொழில் கூடமாக
விளங்கி வந்த நிலை
மாறி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள்
பெருக்கின.
மத்திய, மாநில அரசுகள் இவற்றைவிடப் பெரிய தொழில்களாகத் துப்பாக்கித் தொழிற்சாலை. டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை என்ற புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.
சிறு தொழிலும்
தொழிற்பேட்டையும்:
சிறு தொழில்கள்
ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன.
தொழில்
வளர்ச்சியில் தொழில் பேட்டைகள், அரசு நிதி உதவி நிறுவனங்கள், புதிய நகர அமைப்புகள்
குறிப்பிடத்தக்கன.
அம்பத்தூர்,
கிண்டி, இராணிப்பேட்டை, கப்பலூர், அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி,
காரைக்குடி, ஓசூர் முதலிய இடங்களில் உருவான தொழில்பேட்டைகள் குறிப்பிடத்தக்கன.
இவற்றுள் அம்பத்தூரும் கிண்டியும் மிகவும் பெரியவை.
தொழிற்சாலைகள்:
பஞ்சாலைத் தொழில்
கோவை மாவட்டத்தில்
சிறந்து
விளங்குகிறது.
மதுரை,
அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் பஞ்சாலைகள் உள்ளன.
கூட்டுறவு
நூற்பாலைகள் பல தோன்றியுள்ளன.
கரும்பு ஆலைத்
தொழில் கிராமப்புறம் முன்னேற்றத்திற்குச் சாலை வசதி, மின்சார வசதி, வேலைவாய்ப்பு
அளிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது.
சிமெண்ட்
நிறுவனம்
டால்மியாபுரம்,
தாழையூத்து, துலுக்கப்பட்டி, சங்ககிரி போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தி
தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 1976 இல் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஏற்பட்டது.
போக்குவரத்து
போக்குவரத்து
ஊர்திகள், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அசோக் லேலாண்டு, ஸ்டாண்டர்டு
மோட்டார்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கன.
1947 இல் சென்னை
நகரப் பேருந்துகள் தேசிய மயமாக்கும் திட்டம் தொடங்கி 1948 இல் முடிவுற்றது. 1972
இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவானது. அதன் பின் பல புதிய போக்குவரத்து
கழகங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
இரயில்
போக்குவரத்து:
இரயில்
போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
இந்தியா விடுதலை
அடைந்த பின்பு நெல்லை - நாகர்கோவில் இடையேயும், திண்டுக்கள் கருவூர் இடையேயும்,
சேலம்- தர்மபுரி - பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள
மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால் இரயிலில்
பயணம் செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமானது.
தோல்
தொழிற்சாலைகள்
தோல் தொழிலைப்
பொருத்தமட்டில் தமிழகத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்பட்டன.
முதன் முதலில் 1964
இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் தோல் தொழிலில் வளர்ச்சிக்கு தற்போது ஆம்பூர்,
வாணியம்பாடி, மேல்விஷாரம் போன்ற இடங்கள் தோல் முதல் தொழில் பேட்டை உருவானது.
மத்திய
அரசு நிறுவனங்கள்:
சுதந்திரத்திற்குப்
பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள்
தொடங்கப்பட்டன.
அவற்றுள் இணைப்புப்
பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி பழுத்த நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெல்லி
பிரிண்டர்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், பாரத கனரக தொழிற்சாலை,
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உரத் தொழிற்சாலை, எண்ணூர், சேலம் போன்ற இடங்களில்
எஃகு தொழிற்சாலை, பாய்லர் துணைத் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை,
துப்பாக்கித் தொழிற்சாலை ஆகிய குறிப்பிடத் தக்கனவாகும்.
மின்
உற்பத்தி:
தொழில்
வளர்ச்சிக்கு மின்வசதி இன்றியமையாதது. சுதந்திரத் திற்குப் பின் தமிழகத்தில் 1947
இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948 இல் மேட்டூர் நீர் மின் நிலையம்
முதலியன உருவாயின 1957 இல் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பட்டது. இவைகளைத்
தொடர்ந்து கல்பாக்கம் அனல் நிலையம், தூத்துக்குடியி அனல்மின் நிலையம் போன்றவை
துவங்கப்பட்டன.
தகவல்
தொழில்நுட்பம்:
தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சி என்பது கணிப்பொறித் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்
நுட்பங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அண்மைக் காலங்களில்
இவ்விரு தொழில் நுட்பங்களும் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
தொழில்நுட்பக்
கல்வி:
தமிழ்நாட்டில்
தொழில்நுட்ப கல்வி வளர்ச்சிக்கு
அண்ணா தொழில்நுட்ப
பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் 59
பாலிடெக்னிக் கல்லூரிகளும் இணைக்கப் பெற்றுள்ளன. இவற்றில், இன அடிப்படையில்
முற்பட்ட இனம் தாழ்த்தப்பட்ட இனம், பழங்குடிகள் எனப் பகுக்கப்பட்டுள்ள எளிய
சமூகத்தினர் தொழில்நுட்ப அறிவு பெற்றுவருகின்றனர்.
முதலமைச்சரின்
விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:
தமிழக அரசின் மூலம்
செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மூலம், தகுதி வாய்ந்த நபர்களுக்குத் தரமான
மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் வழங்கப்பட்டு
வருகிறது.
நோயாளர்களின்
அனைத்து மருத்துவச் செலவினையும் இத் திட்டம் வழங்குகிறது.
இதன் மூலம்
குடும்பத்தின் நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படுவதால், இது ஏழை எளிய மக்களுக்கு
மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
பள்ளிக்கல்வி
மற்றும் உயர் கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் இது
செயல்படுத்தப்படுகிறது.
இதனால், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதத்தில் கணிசமான அதிகரிப்பைக் காண முடிகிறது.
இந்தத் திட்டமானது
மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் மாணவர்களின் திறன்களை
அங்கீகரித்து, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்புகளை
வழங்குகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அர்த்தமுள்ள/வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்விப் படிப்புகளைத் தொடர ஊக்கமளிப்பதாகும்
தகவல்
தொழில்நுட்பத் துறை: ஹாவாய் தீவுகளில்
1990 ஆம்
ஆண்டு 2 கோடியாக
இருந்த தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி, 1999 இல் பன்மடங்கு அதிகரித்தது. அன்றைய
முதல்வர் மு. கருணாநிதி முதல்வராக நடத்திய தமிழ் இணைய மாநாடும் ஒரு முக்கியமான
சாதனை.
தகவல்
தொழில் நுட்பப் பூங்கா
2000 இல் முதல்
முதலாக சென்னை தரமணியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது.
கோவையிலும் அதேபோன்ற பிரம்மாண்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐடி பார்க்)
உருவாக்கப்பட்டது.
பன்னாட்டு
மூலதனத்தைத் தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட, இது மிகவும் உதவியாக உள்ளது. இதனால்
இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம் கொழிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றாக, குறுகிய
காலத்தில் தமிழகம் உயர்ந்துள்ளது.
சுற்றுலா
வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் முதலிடத்திலும், உள்நாட்டு சுற்றுலாப்
பயணிகளின் வருகையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக