கலைச் சொற்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள்

         கலைச் சொற்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள்

தாய்மொழிச் சொற்களால் மட்டுமே கலைச்சொற்களை உருவாக்க 

    வேண்டும்.

தமிழில் கலைச் சொல்லாக்கம் என்பது தமிழ்மொழிச் சொற்களாக 

இருக்க வேண்டுமேயொழிய, பிறமொழிச் சொற்களைக் கொண்டு 

தமிழில் கலைச்சொல்லை ஆக்கக்கூடாது.

Physics என்பதைக் கலைச்சொல்லாக்கும்போது 'பௌதிகம்' என வடமொழியில் ஆக்கக்கூடாது.

இயற்பியல் என்றே ஆக்க வேண்டும். அவ்வாறே Chemistry என்பதை 

'இரசாயனம்' என்று ஆக்காமல், 'வேதியல்' என ஆக்க வேண்டும்.

2.                      தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன் அது மக்களுக்கு எளிதில் 

       புரியும்படியான சொல்லாகவும் இருக்கவேண்டும்.

Bicycle என்பதற்குத் துவிச் சக்கர வண்டி என வடமொழியும் தமிழும் கலந்த கலைச்சொல்லைத் தொடக்கத்தில் உருவாக்கினர்.

பிறமொழிச் சொல்லை நீக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் ஈருருளி (இரண்டு - ஈர் - உருளி) என ஆக்கினர்.

இக்கலைச்சொல் தமிழாக இருந்தாலும் எளிதில் மக்களுக்குப் புரியும்படியாக இல்லை.

எனவே 'மிதிவண்டி' என்ற எளிய கலைச்சொல் இயல்பாக உருவாகி நிலைத்துவிட்டது.

    வடிவில் சிறியதாக இருக்கவேண்டும்.

வா, போ, பார், செய், கெடு எனத் தமிழ் மொழி இயல்பாகவே சிறு சொற்களை அதிகம் கொண்ட மொழியாகும்.

எனவே தமிழில் கலைச்சொல்லாக்கமும் வடிவில் சிறியதாக இருத்தல் வேண்டும்.

தொடக்கத்தில் சற்று நீண்ட வடிவத்தில் கலைச்சொல் உருவாக்கப் பட்டாலும் காலாட்டத்தில் தமிழின் இயல்புக்குத் தக கலைச்சொற்கள் சுருங்கி விடுகின்றன.

Post office என்பதற்கு முதலில் தபால் நிலையம் எனப் பிறமொழி கலந்த கலைச் சொல் உருவாக்கப்பட்டது.

பின்னர், 'அஞ்சல் நிலையம்' என்ற வடிவில் பெரிய கலைச்சொல் உருவானது. அது பின் மேலும் சுருங்கி 'அஞ்சலகம்' என்றானது.

Library -நூல் நிலையம் நூலகம் Computer - கணிப்பொறி, கணிப்பான், கணினி

4.      ஒரு கலைச் சொல்லாக்கமானது, கலைச்சொற்களால், பொருள் குழப்பம் 

   ஏற்படுவதாக இருக்கக் கூடாது.

ஏற்கனவே உள்ள கலைச் சொற்களால் பொருள் குழப்பம் ஏற்படுவதாக இருக்கக் கூடாது .  

Car என்பதை முதலில் கார் என்றே ஒலிபெயர்ப்பு செய்தனர்.

கார் என்பது கார்காலத்தைக் குறிக்கும் மிகத் சொல்லாக்கினர்.

கார் தொன்மையான தமிழ்ச் சொல்லாகும்.

இருவேறு கலைச் சொல்லுக்கு ஒரே ஒரு கலைச்சொல்லைக் கூறக்கூடாது.

Air. Wind என்ற இரண்டிற்கும் காற்று என்ற ஒரே சொல்லைக் கூறக்கூடாது.

Storm புயல், Wind  காற்று, Air வளி, Gale கடுங்காற்று, Harricane சூறை , Breez  

தென்றல், Whirl -சுழல் எனத் தனித்தனியாகத் தருதல் வேண்டும்.

பொதுவாகவே தமிழ் மொழியானது, சொல்லாக்க உறுப்புகளை மிகுதியாகப் 

பெற்ற மொழியாகும்.

ஓர் அடிச்சொல்லுடன் சொல்லாக்க உறுப்புகளைச் சேர்த்து, தமிழ் புதிய 

புதிய சொற்களை ஆக்கிக் கொள்கிறது. அது அதன் சிறப்பியல்பு.

உடு - உடை, உடுப்பு, உடுத்தல், உடுக்கை

நட - நடத்தல், நடை, நடப்பு, நடத்தை

செய் -செய்தல்,செயல்,செய்கை, செயற்பாடு, செய்முறை.

விடு விடுதல், விடல், விடுப்பு, விடுதலை, விடுகை, விடை.

 இவ்வாறு, ஒரு அடிச் சொல் அல்லது வேர்ச் சொல்லுடன் சேர்ந்து புது 

சொற்களை உருவாக்கும் உறுப்புகளை மொழியியலாளர்

ஒட்டுகள்' என்பர். இது முன்னொட்டு, பின்னொட்டு என இரு

வகைப்படும்.

Telephone என்பதில் Tele என்ற முன்னொட்டிற்கு கிரேக்க மொழியில், 

'தொலைவில்' என்பது பொருள்.

Phone என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பேச்சுக்கருவி என்பது பொருள்.

எனவே, Tele என்பதற்குத் தொலைவு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து 

'தொலை' என்பதை முன்னொட்டாக உருவாக்கித்

'தொலைபேசி என்ற கலைச் சொல்லை உருவாக்கினர்.

இம் முன்னொட்டு, பிற சொற்களுடன் எளிதாகச் சேர்வதாகவும்

அமைகிறது.

Television - தொலைக்காட்சி, Telepathy தொலை உணர்தல்,

Telescope -தொலை நோக்கி  என அமைதல் காண்க. இவ்வாறே 

பின்னொட்டுகளையும் உருவாக்க வேண்டும்.

6. கடன் பெயர்ப்பு, கடனாக்கம்.

 கடன் விரிவு, கடனாட்சி (ஒலிபெயர்ப்பு): ஆகிய முறைகளைப்

 பின்பற்றிக் கலைச்சொல்லை உருவாக்கலாம்.

கடன் மொழிபெயர்ப்பு:

தருமொழியில் உள்ள கலைச் சொல்லின்

பொருளுக்கு ஏற்ற வகையில், பெறுமொழியில் உள்ள சொற்களால்,

கலைச் சொல்லை உருவாக்கிக் கொள்ளல்

Television

 தொலைக்காட்சி, இதில் தொலை(வு) என்பதும், காட்சி என்பதும் ஏற்கனவே 

அதே பொருளை உணர்த்தும் தமிழ்ச் சொற்களாகும். அவற்றை ஒன்று 

சேர்த்த பின்பும், அதே பொருளை உணர்த்தும் தொலைக்காட்சி என்ற 

கலைச்சொல் உருவாக்கப்பட்டது. இது கடன் மொழிபெயர்ப்பு.

கடனாக்கம்:

பழைய சொற்களைக் கொண்டு புதிய கலைச்சொல்லை உண்டாக்கிக் 

கொள்வது கடன் ஆக்கம் எனப்படும்.

Leave விடுப்பு என்ற பழைய சொல்லிற்கு விடுவித்தல் என்பது பொருள்.

அது, ஒருவர் தன் வேலைக்குச் செல்லாமல் விடுபடுதலைக் குறிக்கும் Leave 

என்பதனைக் குறிக்கும் கலைச்சொல் ஆக்கப்பட்டுள்ளது.

Holiday - விடுமுறை, Loud speaker - ஒலிபெருக்கி

என வருவது கடனாக்கம் எனப்படும்.

கடன் விரிவு:

ஏற்கனவே ஒரு பொருளை உணர்த்துவதற்குப் பயன்படும் ஒரு சொல்லை, 

அது அப் பொருளை விடுத்துப் புதுப் பொருளை உணர்த்தும்படி 

ஆக்கிக்கொள்வது கடன் விரிவு ஆகும். 

'வளாகம்' என்ற சொல்லுக்கு நிலப்பரப்பு என்பது பொருள்.  (தெண்கடல் 

வளாகம் -புறநானூறு). அதனை Block என்ற சொல்லுக்கு இணையான 

சொல்லாகப் பயன்படுத்துவது கடன் விரிவு ஆகும்.

V.V.C. Block வி.வி.சி. வளாகம். இதைப்போன்றே , 'மின் என்பது மின்னலைக் 

குறிக்கும், ஒளியைக் குறிக்கும். 'மின்' என்ற சொல் Electricity என்பதைக் 

குறிக்கவும் பயன்படுகிறது.

Department of electricity- மின்துறை , Copy-படி

வாரியம் என்ற சொல்லும் "மக்கள் நல வாரியம்" என

வழங்கப்படுவதும் கடன் விரிவு ஆகும்.

கடனாட்சி (ஒலிபெயர்ப்பு):

இதனைக் கடன் சொல் என்றும் கூறுவர். கலைச்சொல்லுக்கான ஆக்கச் 

சொல் உடனடியாகக் கிடைக்காதபோது அதனை மொழிபெயர்ப்புச் செய்வர். 

இது கடனாட்சி எனப்படும்.

Helicopter -  ஹெலிகாப்டர் , Mixer -  மிக்சர் , Coffee -  காப்பி

இவற்றுக்கான சரியான கலைச்சொற்களை உருவாக்கும் வரை

இத்தகைய ஒலிபெயர்ப்புகளைப் பயன்படுத்தலாம்.

ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்ய வேண்டியவை

கலைச்சொல்லை உருவாக்காமல், கட்டாயம் ஒலிபெயர்ப்பை மட்டுமே 

ஏற்க வேண்டியவையும் உள்ளன. அவற்றை ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்ய 

வேண்டும்.

சில கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தவரின் பெயரால் வழங்கும். அதனை 

மொழிபெயர்க்கக் கூடாது. ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்யவேண்டும்.

Volt- ஓல்ட், Watt – வாட்

சொற்றொடரில் உள்ள முதல் எழுத்துக்களால் ஆன சொல்லை

மொழிபெயர்க்காமல் ஒலிபெயர்க்கவேண்டும். 

National Aeronautics and Space Administration NASA -இதனை நாசா என 

ஒலிபெயர்ப்புச்செய்யலாம். C.I.D. A.I.R. போன்று வருவனவும் இவ்வாறு 

ஆகும்.

மக்கள் வழக்கில் பெருவாரியாக வந்துவிட்ட சொற்களை ஒலிபெயர்க்க 

வேண்டும்.

நஷ்டம் - நட்டம்,கஷி -கட்சி

உலகம் முழுக்கப் பயன்படும் குறியீடுகளையும் வாய்ப்பாடுகளையும்   

ஒலிபெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தவேண்டும்.

Telephone என்பதில் Tele என்ற முன்னொட்டிற்கு கிரேக்க மொழியில், 

'தொலைவில்' என்பது பொருள்.

Phone என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பேச்சுக்கருவி என்பது பொருள்.

எனவே, Tele என்பதற்குத் தொலைவு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து 

'தொலை' என்பதை முன்னொட்டாக உருவாக்கித்

'தொலைபேசி என்ற கலைச் சொல்லை உருவாக்கினர்.

இம் முன்னொட்டு, பிற சொற்களுடன் எளிதாகச் சேர்வதாகவும்

அமைகிறது. 

Television - தொலைக்காட்சி, Telepathy தொலை உணர்தல்,

Telescope -தொலை நோக்கி  என அமைதல் காண்க. இவ்வாறே 

பின்னொட்டுகளையும் உருவாக்க வேண்டும்.

6. கடன் பெயர்ப்பு, கடனாக்கம்.

 கடன் விரிவு, கடனாட்சி (ஒலிபெயர்ப்பு): ஆகிய முறைகளைப்

 பின்பற்றிக் கலைச்சொல்லை உருவாக்கலாம்.

கடன் மொழிபெயர்ப்பு:

தருமொழியில் உள்ள கலைச் சொல்லின்

பொருளுக்கு ஏற்ற வகையில், பெறுமொழியில் உள்ள சொற்களால்,

கலைச் சொல்லை உருவாக்கிக் கொள்ளல்

Television

தொலைக்காட்சி, இதில் தொலை(வு) என்பதும், காட்சி என்பதும் ஏற்கனவே 

அதே பொருளை உணர்த்தும் தமிழ்ச் சொற்களாகும். அவற்றை ஒன்று 

சேர்த்த பின்பும், அதே பொருளை உணர்த்தும் தொலைக்காட்சி என்ற 

கலைச்சொல் உருவாக்கப்பட்டது.

 இது கடன் மொழிபெயர்ப்பு.

கடனாக்கம்:

பழைய சொற்களைக் கொண்டு புதிய கலைச்சொல்லை உண்டாக்கிக் 

கொள்வது கடன் ஆக்கம் எனப்படும்.

Leave விடுப்பு என்ற பழைய சொல்லிற்கு விடுவித்தல் என்பது பொருள்.

அது, ஒருவர் தன் வேலைக்குச் செல்லாமல் விடுபடுதலைக் குறிக்கும் Leave 

என்பதனைக் குறிக்கும் கலைச்சொல் ஆக்கப்பட்டுள்ளது.

Holiday - விடுமுறை, Loud speaker - ஒலிபெருக்கி

என வருவது கடனாக்கம் எனப்படும்.

கடன் விரிவு:

ஏற்கனவே ஒரு பொருளை உணர்த்துவதற்குப் பயன்படும் ஒரு சொல்லை, 

அது அப் பொருளை விடுத்துப் புதுப் பொருளை உணர்த்தும்படி 

ஆக்கிக்கொள்வது கடன் விரிவு ஆகும்.

'வளாகம்' என்ற சொல்லுக்கு நிலப்பரப்பு என்பது பொருள்.  (தெண்கடல் 

வளாகம் -புறநானூறு). அதனை Block என்ற சொல்லுக்கு இணையான 

சொல்லாகப் பயன்படுத்துவது கடன் விரிவு ஆகும்.

V.V.C. Block வி.வி.சி. வளாகம். இதைப்போன்றே , 'மின் என்பது மின்னலைக் 

குறிக்கும், ஒளியைக் குறிக்கும். 'மின்' என்ற சொல் Electricity என்பதைக் 

குறிக்கவும் பயன்படுகிறது.

Department of electricity- மின்துறை , Copy-படி

வாரியம் என்ற சொல்லும் "மக்கள் நல வாரியம்" என

வழங்கப்படுவதும் கடன் விரிவு ஆகும்.

கடனாட்சி (ஒலிபெயர்ப்பு):

இதனைக் கடன் சொல் என்றும் கூறுவர். கலைச்சொல்லுக்கான ஆக்கச் 

சொல் உடனடியாகக் கிடைக்காதபோது அதனை மொழிபெயர்ப்புச் செய்வர். 

இது கடனாட்சி எனப்படும்.

Helicopter -  ஹெலிகாப்டர் , Mixer -  மிக்சர் , Coffee -  காப்பி

இவற்றுக்கான சரியான கலைச்சொற்களை உருவாக்கும் வரை

இத்தகைய ஒலிபெயர்ப்புகளைப் பயன்படுத்தலாம்.

ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்ய வேண்டியவை

கலைச்சொல்லை உருவாக்காமல், கட்டாயம் ஒலிபெயர்ப்பை மட்டுமே

ஏற்க வேண்டியவையும் உள்ளன. அவற்றை ஒலிபெயர்ப்பு மட்டுமே

செய்ய வேண்டும்.

சில கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தவரின் பெயரால் வழங்கும். அதனை 

மொழிபெயர்க்கக் கூடாது. ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்யவேண்டும்.

Volt- ஓல்ட், Watt – வாட்

சொற்றொடரில் உள்ள முதல் எழுத்துக்களால் ஆன சொல்லை

மொழிபெயர்க்காமல் ஒலிபெயர்க்கவேண்டும்.

National Aeronautics and Space Administration NASA -இதனை நாசா என 

ஒலிபெயர்ப்புச்செய்யலாம். C.I.D. A.I.R. போன்று வருவனவும் இவ்வாறு 

ஆகும்.

மக்கள் வழக்கில் பெருவாரியாக வந்துவிட்ட சொற்களை ஒலிபெயர்க்க 

வேண்டும்.

நஷ்டம் - நட்டம்,கஷி -கட்சி

உலகம் முழுக்கப் பயன்படும் குறியீடுகளையும் வாய்ப்பாடுகளையும்   

ஒலிபெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்