கலைச்சொல் ஆக்கம் , மொழிபெயர்ப்பு,கலைச்சொல்லாக்கம் தேவைகள்

 

              கலைச்சொல் ஆக்கம்

 

கலைச்சொல்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதியபுதிய கண்டுபிடிப்புகள் 

தோன்றுகின்றன .

இக் கண்டுபிடிப்புகளுக்காக ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் 

உருவாக்கும்  புதிய சொற்களைக் 'கலைச்சொற்கள்' என்பர்.

வை புதியவை ஆதலால் பிறமொழிகளில் இதனை ஆக்கிக்கொள்ள 

வேண்டும்.

இவ்வாறு ஒரு மொழியிலிருந்து தம் தாய்மொழியில் கலைச்சொற்களை 

உருவாக்கிக் கொள்வதையே கலைச் சொல்லாக்கம் என்கிறோம்.

 

மொழிபெயர்ப்பு - கலைச்சொல்லாக்கம் = வேறு வேறு

மொழிபெயர்ப்பு என்பது வேறு, கலைச்சொல்லாக்கம் என்பது வேறு !

தருமொழி, பெறுமொழி என்பன குறித்து நினைவில் கொள்ள வேண்டும்.

சான்றாக ஆங்கிலத்திலிருந்து ஒரு சொல் தமிழில் மொழிபெயர்க்கப்

படும்போது, ஆங்கிலம் தரு மொழி, தமிழ் பெறுமொழி ஆகும்.

தமிழிலிருந்து தெலுங்கிற்குச் சென்றால் தமிழ் தருமொழி, தெலுங்கு

பெறுமொழி ஆகும்.

 

தருமொழியின் எழுத்தில் அமைந்த சொல் (அ) சொற்றொடர் (அ)

கருத்து ஆகியன பெறுமொழியின் எழுத்தில் பெயர்த்துச் சொல்வது

மொழிபெயர்ப்பாகும்.

Hand - கை, I go - நான் செல்கிறேன்.

He went to temple yesterday  - அவன் நேற்று கோவிலுக்குச் சென்றான்.

இவை மொழி பெயர்ப்புகள். இதில் இரண்டு மொழியிலும்  இணையான 

சொற்கள் இருக்கும்.

 

கலைச்சொல் என்பதில், தருமொழியில் ஒரு சொல் புதிதாக உருவாக்கப் 

பட்டிருக்கும் .

ஆனால் பெறுமொழியில் அதற்கு இணையான சொல் இருக்காது.

எனவே பெறுமொழியானது புதிதாக கலைச்சொற்களை ஆக்கிக் 

கொள்ளவேண்டிய தேவை ஏற்படும்.

Cell phone- கைபேசி அலைபேசி, Smart phone-திறன்பேசி, Website-இணையம்.

இவை மொழிபெயர்ப்புகள் அல்ல.

தமிழில் ஆக்கிக்கொள்ளப்பட்ட கலைச்சொற்கள் ஆகும்.

எனவே மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் இரண்டும் வேறு 

வேறானவை.


இக் கலைச்சொற்கள் குறித்து அகராதியில் அறிந்து கொள்ள முடியாது.

ஏனெனில், பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது  

அகராதியின் நோக்கமாகும்.

கலைச்சொல்லாக்கம் என்ற இச் சொற்றொடர் (கலைச்சொல்!)

கலையியல், அறிவியல் என்ற இருவகைத் துறைச் சொற்களையும்

குறிப்பதாகும்.

 

கலைச்சொல்லாக்கம் தேவைகள்:

 

1. ஒரு மொழி நிலையான  மொழியாகத் திகழ வேண்டும் என்றால், அது 

காலத்திற்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதற்குக் 

கலைச்சொல்லாக்கம் தேவையாகிறது.

 

2 . சட்டம், மருத்துவம், பொறியியல், அரசியல் போன்ற பாடங்களை மக்கள் 

தம் தாய் மொழியில் கற்க வேண்டும் என்றால் கலைச் சொல்லாக்கம் 

இன்றியமையாதது.

 

3 . அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துகொண்டே 

இருக்கின்றன.

அவற்றை மக்கள் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்திக்கொள்ள 

கலைச்சொல்லாக்கம் தேவையாகின்றது.

 

4 . ஒரு மொழியானது ஆட்சி மொழியாக விளங்க வேண்டுமானால். 

அதற்குத் துறைதோறும் கலைச் சொல்லாக்கம் கட்டாயம் 

தேவையாகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்