நிறுத்தக் குறிகள்,1.புள்ளிகள் 2.குறிகள் 3.கோடுகள் 4.அடைப்புகள்
நிறுத்தக் குறிகள்
நிறுத்தக் குறிகள்
நாம் பேசும்போது, சொல்லவரும் கருத்துத் தெளிவிற்காக, நீட்டியும்
இழுத்தும் திடீரென நிறுத்தியும் அழுத்தியும் பல்வேறு உணர்வுகளைக்
கூட்டியும் பேசுகிறோம்.
ஆனால், எழுத்தில் எழுதும்போது, இத்தகைய உத்திகளைக் கையாள
இயலாது.
அப்போது, பொருள் குழப்பம் ஏற்படாமல் இருக்க, சில குறியீடுகளை இட்டு,
அக்
குறைபாட்டைச் சரி செய்கிறோம்.
அவ்வாறு, தேர்ந்த தகவல் தொடர்புக்கு/கருத்துத் தெளிவிற்கு உதவும்
குறியீடுகளே
நிறுத்தக் குறிகள் ஆகும்.
இவை 1.புள்ளிகள் 2.குறிகள் 3.கோடுகள் 4.அடைப்புகள் என நான்கு
வகைப்படும்.
1. புள்ளிகள்
காற்புள்ளி (,)
1. ஓர் எழுவாய், பல முற்று வினைகளை ஏற்கும்போது, வினைகளுக்கு
இடையில் இது
வரும்.
2. எண்ணப்படும் சொற்களுக்கு இடையில் வரும்.
3. எண்களுக்கு இடையில் வரும்.
4. இணைப்புச் சொற்களாக அடுத்ததாக, அதன்படி, அதனால்,
அது போலவே, ஆகவே, ஆகையால், ஆயினும், இத்துடன், இருந்தாலும்,
எனவே, எனினும், பிறகு, பின்பு ,முடிவில் போன்ற சொற்களுக்குப் பின்னர்
வரும்.
5 . ஒரு வாக்கியத்தில் வினாக்கள் தொடர்ந்து வரும்போது, இடையில்
வரும்.
எ.கா.) அவன் வருவானா, மாட்டானா?
6 . கடிதத்தில் விளிக்கும் சொல் ,முடிக்கும் சொற்களில் வரும்
(எ.கா.) அன்புள்ள ஐயா,
தங்கள் உண்மையுள்ள,
7. முகவரியைத் தொடர்ந்து ஒரே வரியில் (பெயர், பதவி, வீட்டு எண்,
தெரு போன்ற விவரங்கள்) எழுதும்போது ஒவ்வொன்றை அடுத்தும் வரும்.
(ஒன்றின் கீழ் ஒன்றாக
எழுதும்போது வராது).
8. தலைப்பு எழுத்தைப் (Initial) பெயருக்குப்
பின்னால் எழுதும்போது, வரும்.
(எ.கா.) முருகன், இரா
9 . பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீட்டின் பின்னர் வரும்.
அரைப் புள்ளி (;)
1. ஒரே கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத் தொடர்களை அடுத்து
வரும்.
(எ.கா.) கல்லூரி முதல்வர் நம்பவில்லை; பேராசிரியர்கள் ஏற்கவில்லை;
மாணவர்கள் வரவேற்கவில்லை.
2. வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் முற்றுத் தொடர்களுக்கு
இடையில்வரும்.
(எ.கா.) அறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; முட்டாள்கள் ஆரவாரம்
செய்வார்கள்.
முக்காற் புள்ளி ( : )
1. கட்டுரையில் பக்கத் தலைப்புகளை அடுத்து வரும்.
2. வரையறை விளக்கத்தைக் கூறும்போது இடையில் வரும்.
3. தன்விவரப் பட்டியலில் வரும்.
முற்றுப்புள்ளி ( . )
1. வாக்கியத்தின் முடிவில் வரும்.
2. முகவரியின் கடைசியில் வரும்.
3. சுருக்கக் குறியீட்டு எழுத்துகளை அடுத்து வரும்.
(எ.கா.) கி.மு. உ.பி.,பி.இ.,பக்.,திரு.வி.க.
4. பெயருக்கு முன்னோ, பின்னோ வரும் தலைப்பு எழுத்துக்களை அடுத்து
வரும்.
(எ.கா.) கி.ஆ.பெ.விசுவநாதன், எ.குழந்தைசாமி, குமரன் ச.,
குழந்தைசாமி.ஏ
5. வரிசைக்குப் பயன்படுத்தும் எண், அல்லது எழுத்தை அடுத்து வரும்.
எ.கா.) 1. தமிழ், 2.தெலுங்கு,அ,தமிழ், ஆ. தெலுங்கு.
முப்புள்ளி(...)
1.வாக்கியத்தில் விடுபட்ட பகுதியைக் குறிக்க
வரும்.
2. சொற்களின் ஒலிப்புத் தொடர்ச்சியைக் குறிக்க வரும்.
2. குறிகள்
ஏழு குறிகள்
1.
கேள்விக் குறி
2.
உணர்ச்சிக் குறி
3.
இரட்டை மேற்கோள் குறி
4.
ஒற்றை மேற்கோள் குறி
5.
தனி மேற்கோள் குறி
6.
மேற்படிக் குறி
7.
உடுக் குறி ஆகிய ஏழும் குறிகள் எனப்படும்.
கேள்விக்குறி (?)
1. வினா வாக்கியத்தின் முடிவில் வரும். (எ.கா.) நான் சொன்னதைப்
படித்தாயா?
2. வினாவை உணர்த்தும் முற்றுப்பெறாத வாக்கியத்தை அடுத்து வரும்.
எ.கா.) சீதையின் கதி..? நாங்கள் சாப்பிட்டோம். நீங்கள்..?
உணர்ச்சிக்குறி (!)
1. உணர்ச்சி வாக்கியத்தின் முடிவில் வரும்.
2. உணர்ச்சிச் சொற்களை அடுத்து வரும்.
(எ.கா.) ஆ.! வந்து விட்டான்., ஐயோ! வேண்டாம்.
3. விளிச் சொற்களை அடுத்து வரும்.
(எ.கா.) மாணவர்களே!, உடன்பிறப்புகளே!, இரத்தத்தின் இரத்தங்களே!
4. வியங்கோள் வினையை அடுத்து வரும்.
(எ.கா.) மன்னர் வாழ்க!, தீயவர் நாசமாகப் போக!
இரட்டை மேற்கோள்குறி (" ")
1. நேர்க் கூற்றைத் தனித்துக் காட்ட வரும்.
என்ற குரல் கேட்டது.
2. பாடல், நூற்பா, உரைநடைப் பகுதி போன்றவற்றை எடுத்தாளும் போது
வரும்.
ஒற்றை மேற்கோள் குறி (' ')
1. இரட்டை மேற்கோளுக்குள் வரும் வேறு ஒருவரின் கூற்றைத் தனித்துக்
காட்ட வரும்.
ஏற்கும் வையாபுரிபிள்ளை அவற்றின் காலம் 'கி.பி.4ஆம் நூற்றாண்டு' என்று
கூறுகிறார்."
2. ஒருவரின் எண்ணத்தைக் காட்ட வரும்.
(எ.கா.) பார்த்தவுடன் 'இந்தப் புத்தகத்தை வாங்கிவிட வேண்டும்' என்று
முடிவு
செய்தேன்.
3. பழமொழிகளை மேற்கோளாகக் காட்டும்போது வரும்.
தனி மேற்கோள் குறி (')
விடுபட்டதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா.) 21-5-'85 (1985 க்கு பதில் '85 என வந்தது )
சரிதான் 'பா' (சரிதான் அப்பா)
மேற்படிக் குறி (")
மேலே உள்ள விபரத்தை, அடுத்து வரும் வரியிலும் அப்படியே சுட்டப்
பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா.) கம்பர் எழுதிய நூல் ராமாயணம். புகழேந்தி நளவெண்பா.
உடுக்குறி (*)
உடுக்குறி என்றால் நட்சத்திரக் குறி. இது, ஒரு செய்தி குறித்த சிறப்புத்
தகவல் ஒன்றைக் கூடுதலாகத் தெரிவிக்க அடிக் குறிப்பாகப் (Foot Note)
பயன்படுத்தப்படுகிறது..
3.கோடுகள்
1.
இணைப்புக் கோடு,
2.
இணைப்புச் சிறுகோடு,
3.
சாய்கோடு,
4.
அடிக்கோடு ஆகிய நான்கும் கோடுகள் எனப்படும்.
இணைப்புக் கோடு
1. இடையில்' என்ற பொருளில் இரு சொற்களை இணைக்கும்போது
இடையில் வரும்.
(எ.கா.) சென்னை - மதுரை விரைவுப் பேருந்து, இந்தியா பாகிஸ்தான்
மோதல்.
2. கால இடைவெளியைக் குறிக்கும்போது வரும்.
1985 -2025
3. பெயரையும் அதன் விவரத்தையும் தொடர்புபடுத்தும்போது வரும்.
(எ.கா.) புளி -10 கிலோ, அரிசி 25 கிலோ.
4. ஒரு வாக்கியத்தின் இடையில் செருகப்படும் மற்றொரு வாக்கியத்தின்
முன்னும்
பின்னும் வரும்.
(எ.கா.) அந்தப் புத்தகத்தை - கிழிந்திருந்தாலும் பரவாயில்லை வாங்கி
விடுங்கள்.
5. இருவேறு சொற்களை ஒன்றாக்கிக் காட்டும்போது வரும்.
(எ.கா.) பகல் - இரவுக் காட்சி, வினாடி வினா நிகழ்ச்சி, இந்தியா -ஜெர்மனி
கூட்டுத் தொழில்
6. சொல்லின் முதல், கடைசி எழுத்தை மட்டும் எழுதிச் சுருக்கும்போது.
இடையில்
வரும்.
(எ.கா.) உ-ம் (உதாரணம்), எ-டு (எடுத்துக்காட்டு) இ-ன் (இதன் பொருள்)
7. எண்களைத் தனிக் கூறாகக் காட்ட வேண்டிவரும்.
(எ.கா.) தொலைபேசி 044-26630895, தொலை அச்சு 041-9595 தொலை நகல் 91-
044-23217015
சாய்கோடு (/)
1. ஒன்றுக்குப் பொருந்தும்படி சிலவற்றைக் குறிக்கும்போது வரும்.
(எ.கா.) தாய்மொழியாகத் தமிழ்/தெலுங்கு/மலையாளம் இருக்க வேண்டும்.
அதிகபட்ச
வெப்பம் 104F/40c.
2. சில சுருக்கக் குறியீட்டு எழுத்துக்களுக்கு இடையில் வரும். (எ.கா.) த/பெ
(தந்தையின் பெயர்) மே/பா (மேற்பார்வை)
3. அலுவலகக் கடித விவரத்திற்கு இடையில் வரும்.
(எ.கா.) அரசாணை எண்: 22/பணி நியமனம்/நாள் 21.1.2005
அடிக்கோடு (-)
கட்டுரை , நூல் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய சொல்
எனக் குறிப்பிட்டுக் காட்ட, வாக்கியத்தின் கீழ் அடிக்கோடு இடப்படுகிறது.
(இன்று இந்த உத்தி, கணிப்பொறியின் வரவால் தடித்த எழுத்தாகவும்
சாய்வு எழுத்தாகவும்
வண்ண எழுத்தாகவும் காட்டப்படுகிறது).
4. அடைப்புகள்
இது பிறை அடைப்பு,
சதுர அடைப்பு என அடைப்பு இரண்டு
வகைப்படும்.
பிறை அடைப்பு ()
1. ஒரு வாக்கியத்துள் விளக்குதல், கூடுதல் தகவல் போன்றவற்றைக்
குறிக்கப் பயன்படுகிறது.
(எ.கா.) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) இது நடந்தது.
இறைவன் முன் எல்லோரும் (செல்வர், வறியவர், கற்றார்.
கல்லாதவர்) சமம் ஆவர்.
2. தமிழ் ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றுக்கு இணையான ஆங்கிலத்
தேதியைக் குறிக்க
வரும்.
பார்த்திப ஆண்டு சித்திரை 31 ஆம் நாள் (14-5-2006)
3. தமிழ்ச் சொல்லுக்கு இணையான பிறமொழிச் சொல்லைக் காட்டும்
போது வரும்.
(எ.கா.) உயிர்ச் சத்துகள் (Vitamins)
(எ.கா.) "தீதும் நன்றும் பிறர் தர வாரா" (புறநானூறு)
5. வரிசை எண் அல்லது எழுத்திற்கு வரும். ஒரு பக்கம் மட்டும் வருவதும்
உண்டு.
(1) 1); (2) 2); (4) 3); (शु) 4)
சதுர அடைப்பு
ஒருவர், பிறர் கருத்துக்கு இடையே தம் கருத்தைத்
தெரிவிக்கப் பயன்படுகிறது.
(எ.கா.) “எனக்கு இராமன் கொடுத்த செல்வத்தை [இலங்கை] உனக்குத்
தருகிறேன்”
2.
பிறை அடைப்புக்குள் இன்னொரு
அடைப்புத் தேவைப்படும்போது வரும்.
(எ.கா.) இதனை மூவர் தேவாரத்தில் (சம்பந்தர் தேவாரம் (பாடல் 4121]
அப்பர் தேவாரம் [பாடல் 126] சுந்தரர் தேவாரம் (பாடல் 432) மிகத்
தெளிவாகக் காணலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக