அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும் (கீழடி வரை)
பாடம் - ஐந்து அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும் (கீழடி வரை)
தொல்லியல்
துறையின் செயல்பாடுகள்
அகழாய்வுகளை மேற்கொள்வதற்குக் கண்டறிதல் தொடங்கி , பொருள்
விளக்கம் அறிதல் வரை பல்வேறு தொழில் நுட்பத்திறன்கள்
தேவைப்படுகின்றன.
இந்த முயற்சியில் மும்பையில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம்,
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை
உணர்வு நிறுவனம் பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வுத் துறை போன்ற புகழ்பெற்ற
நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
தரை ஊடுருவல், தொலையுணர்வு மதிப்பாய்வு, காந்த அளவு மதிப்பாய்வு,
ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, போன்ற
பலவகையான
தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின்மூலம் தொல்லியல் இடங்களை
அடையாளம் காண்பது, அகழாய்வுப்பணிகள்
மேற்கொள்வது ஆகியன
தொல்லியல் துறையின் செயல்பாடுகள் ஆகும்.
தொல்லியல்
துறையும் பிற துறைகளும்
தனிச்சிறப்பான துறைகளின் ஒத்துழைப்போடு அறிவியல் முறைப்படி
பகுத்தாய்ந்து தொல்லியல் கண்டுபிடிப்புகளை ஏற்கவேண்டும்.
தொல் -தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்
தொல்லியல், மொழியியல் தொல்லியல் போன்ற
பல்துறை
வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தொல்லியலும்
அகழாய்வும்:
தொல்லியல் துறையானது, 1. வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் , 2.
வரலாற்றுத் தொல்லியல் என இரு பிரிவுகளாகத் திகழ்கிறது.
தொல்லியல் என்பது அகழாய்வு மட்டுமன்றி இலக்கியங்கள்,கல்வெட்டுகள்,
காசுகள், கட்டடங்கள், உள்ளிட்ட மூலப்பொருட்களையும்
ஆய்வு செய்வதாகும்.
இருப்பினும் அகழாய்வுப்பணியே தொல்லியல் ஆய்வின் முதன்மையான
பணியாகும்.
உலகப்புகழ் பெற்றுநிற்கும் மெசபடோமியா, எகிப்து, மயன் நாகரிகங்கள்
மற்றும் கிழக்கில் சீனம் போன்ற நாகரிகங்கள்
அகழாய்வுகள் மூலமே
வெளிக்கொணரப்பட்டன.
இத்தகைய அகழாய்வுகளால் தான் பழங்கற்காலம், புதிய கற்காலம்,
செம்புக்காலம், இரும்புக்கால வாழ்விடங்கள் வெளிவந்துள்ளன.
தொல்லியலாளர்கள்
தமிழகத்தில் இத்துறைக்கு ஒரு வடிவம் அளிக்கும் அயல்நாடு மற்றும்
இந்தியத் தொல்லியலாளர்களின் பங்கு அளவிட
முடியாதது.
இந்தியத் தொல்லியலின் தந்தை திரு. அலெக்ஸாண்டர் கன்னிங்காம்,
இராபர்ட் புரூஸ்புட், கர்சன் பிரபு, சர் ஜான் மார்ஷல், சர் மார்டிமர் வீலர்,
ரேமண்ட் ஆல்சின், வி.டி. கிருஷ்ணசாமி, எ. கோஷ், எம்.என்.தேஷ்பாண்டே,
பி.கெ.ராவ், பி.பி.லால், எச்.டி.
சாங்கலியா, வி.என்.மிஸ்ர, ஆர்.எஸ்.பிஷ்ட்
எனப்பல ஆய்வாளர்கள் அகழாய்வுகளில் இத்துறையை
மேன்மைப்படுத்தியுள்ளனர்.
சிந்துவெளி - திராவிடம் - தமிழ்
'யுவான்
சுவாங்'
சிந்துவெளி அகழாய்வானது, சீனநாட்டு புத்தத் துறவியும் வரலாற்றுப்
பதிவுப் பயணியுமான 'யுவான் சுவாங்'
என்பவரின் குறிப்புகளை முக்கிய
ஆதாரமாகக் கொண்டதாகும்.
இவர் காஞ்சிபுரம் வரை வந்திருந்து, சுமார் இரண்டு ஆண்டுகள் புத்தமதக்
கல்வி கற்றார் .
தன் நூலில் திராவிட தேசம் குறித்தும் பதிவு
செய்துள்ளார்.
பேராசிரியர்
பர்ரோ
அவ்வகையில், தமிழர் யார்? என்ற கேள்வியோடுதான் சிந்துவெளி
அகழ்வாராய்ச்சி தொடங்குகிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் வடமேற்கு இந்தியாவிலும்
வட இந்தியாவிலும் வந்து பரவுவதற்கு முன்னர் திராவிட இன மக்களே
வாழ்ந்தனர் என்று கூறியவர்களில் பேராசிரியர் பர்ரோவும் ஒருவர்.
ஆரிய மொழியை நன்கு ஆராய்ந்து இருக்கு வேதத்தில் இருபது சதம்
திராவிட மொழிச்சொற்கள் பயன்படுத்தப்
பட்டுள்ளன என்று கூறினார் .
சிந்து, கங்கைச் வெளியிகளில் செழித்து வாழ்ந்திருந்த
திராவிடர்களிடமிருந்து பிற்காலத்தில் வந்து குடியேறிய ஆரியர், பல
திராவிடமொழிச் சொற்களைத் தம் மொழியில் ஏற்றுக் கொண்டனர்
என்பதும் இவரின் கருத்து.
ஹீராஸ்
பாதிரியார்
லெமூரியாவிலிருந்து தென்னிந்தியா, ஆப்பிரிக்கா முதலிய இடங்களுக்குச்
சென்று சிலர் மத்திய தரைக்கடல் நாடுகளில் சில காலம் வாழ்ந்து, வட
இந்தியா
வழியாகத் தெற்குநோக்கி வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மேற்கண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஹீராஸ் பாதிரியார்
தலைமையில் சிந்துவெளியில் வரலாற்றுப் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சிகள்
நடைபெற்றன.
சிந்துவெளியில் மிகப் பழங்காலத்தில் பெரியதொரு நாகரிகம் செழித்து
வளர்ந்திருந்தது என்றும் எக்காரணத்தாலோ
அது அறவே அழிந்துபோயிற்று
என்றும் அவர் சில
கருத்துகளை வெளியிட்டார்.
சிந்துவெளி
இப்போது பாகிஸ்தானில் உள்ள சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா
என்ற இரு நகரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டன.
இவையன்றி இன்றைய இந்தியாவுக்குள் உள்ள சானுடாரோ, கோட்டீஜி,
லோதால், காளிபங்கன் என்ற இடங்களிலும் அகழாய்வு செய்து பண்டைய
நாகரிகச் சின்னங்களைக்
கண்டுபிடித்துள்ளனர்..
அகழாய்வு முடிவுகளை முதன்முதலில் உலகுக்குத் தெரிவித்தவர்
சர். ஜான் மார்ஷல் ஆவார்.
மொகஞ்சதாரோ
பழங்காலத்தில் மொகஞ்சதாரோ செழிப்பான நகரமாக விளங்கியதாகவும் பிறகு அது வெள்ளத்தில் மூழ்கி மணல் மேடானதாகவும் அதற்குமேல் வேறு ஒரு நகரம் எழுந்தது என்றும் அதுவும் பிறகு வெள்ளத்தில் மூழ்கிப்போனது எனவும் கூறுவர்.
இவ்வாறாக, ஏழு நகரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து
அவையனைத்தும் மண்ணில் புதையுண்டு போனது .
மொகஞ்சதாரோ ஹரப்பா – நகர அமைப்பு
மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் ஊருக்கு வெளியே பெரிய
கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருந்தன.
அக்கோட்டைக்குள் மன்னரின் மாளிகையும் பெரியபெரிய நீராடும்
குளங்களும் இருந்தன.
நேருக்கு நேரான சாலைகளும் பெரிய வீடுகளும் நெற்களங்சியங்களும்
இருந்தன .
கோயில் பூசாரிகளுக்கெனத்
தனித்தனி வீடுகள் இருந்தன.
மொகஞ்சதாரோவில் உள்நாட்டு,வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக
நடைபெற்றிருந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களும் உலோகங்களும் நவமணிகளும்
சேமித்து வைக்கப்பட்டன.
மொகஞ்சதாரோ முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டதொரு அகரமாகக்
காட்சியளிக்கிறது.
அதன் அழகிய தெருக்கள்
யாவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
நகரத்தின் சுற்றளவு 3.4 கி.மீ.
இலிங்க வழிபாடு
:
சிந்துவெளிச் சிதைவுகளில் இலிங்க உருவங்கள் பல கண்டெடுக்கப்
பட்டுள்ளன.
எனவே சிந்துவெளி மக்கள் இலிங்க வழிபாடு கொண்டவர்கள் என்பது
உறுதிப்படுகிறது.
ஆனால் இருக்கு வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைப்
புறக்கணித்தவர்கள் ஆவர்.
மொகஞ்சதாரோ களிமண் முத்திரைகளில் பசுபதி என்ற சிவ வடிவமும்
அம்மன் வடிவமும் சிறப்பான முறையில்
இடம்பெறுகின்றன.
ஆனால் ஆரியர்கள் உருத்திரனை
ஏற்கின்றனர்.
சிந்துவெளி மக்கள் பின்பற்றி வந்த சமயமானது கோள்கள், விண்மீன்கள்
ஆகிய வான மண்டலங்களுடன்
தொடர்பு கொண்டிருந்தது.
சிந்துவெளி மக்களில் ஒருசாரார் கங்கைச் சமவெளியிலும் ,
தக்காணத்திலும் , தமிழகத்திலும் தங்கி இருக்கலாம்.
கீழடியிலும் சிந்துவெளியில் பயன்படுத்தப்பட்டது போன்ற பானைகளின்
ஓடுகள் கிடைத்துள்ளன.
ஆரிய நாகரிகம்
கி.மு.1,200 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் ஆரிய நாகரிகம்
தோன்றி இருக்க முடியாது என்பது வரலாற்று ஆய்வாளர்கள்
முடிபாகும்.
இருக்கு, அதர்வண வேதத்தில் காணப்படும் இலக்கிய அமைப்பைக்
கொண்டும் புதைபொருள் சான்றுகளைக் கொண்டும் ஆரிய
நாகரிகம்
கி.மு.1,100-1,000
ஆண்டுகளில் தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.
சிந்துவெளி
வேறு ஆரியம் வேறு
சிந்துவெளி நாகரிகம் மறைவுக்கும் இந்திய நாட்டுக்குள் ஆரியர்
நுழைவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகள்
கழிந்து போயின.
ஆகவே சிந்துவெளி நாகரிகத்தை
ஆரிய நாகரிகமாகக்கொள்ளக்கூடாது.
ஆரிய நாகரிகம் நாட்டுப்புறத்தோடும் சிந்துவெளி நாகரிகம் நகர்புற
நாகரிகம் ஆகும்.
சிந்துவெளி
மக்களின் மொழி: சித்திர முறையும் ஒலிமுறையும்
சிந்து சமவெளியில் களிமண் முத்திரைகளும் செப்பேடுகளும்
கிடைத்துள்ளன.
செப்பேடுகளில் ஒருவரி, இடமிருந்து வலமாகவும் அடுத்தவரி, வலமிருந்து
இடமாகவும் வருகின்றது.
இவை சித்திர முறையும் ஒலிமுறையும் கலந்து பிறந்தவை என்று
ஆய்வாளர் கருதுகின்றனர்.
இச்சிந்து வெளியில் 300
மொழிக் குறிகள் காணப்படுகின்றன.
இவற்றில் 250 குறிகள்
அடிப்படையானவை. ஏனையவை சார்புக் குறிகள்.
சிந்துவெளி
மொழி - திராவிட மொழியின் தொடக்க உருவம்
சிந்துவெளி மொழி என்பது பண்டைய தமிழ் வடிவமே என்பதற்குப்
பல்வேறு சான்றுகளை ஹீராஸ் பாதிரியார் தருகிறார்.
ரஷ்யா, பின்லாந்து ஆகிய நாட்டு ஆய்வாளர்களில் சிலர் மொகஞ்சதாரோ
மொழியை அறிவியல் முறையில் ஆராய்ந்து
அம்மொழி
திராவிட மொழியின் தொடக்க
உருவமே என்று முடிவு கட்டியுள்ளனர்.
ஐராவதம்
மகாதேவன்- சிந்துவெளி எழுத்துகள்
சிந்துவெளி எழுத்துகளை ஆராயும் பணியில் முனைந்து விளக்கம்
கூறியவர் ஐராவதம் மகாதேவன் ஆவார்.
அவ்வெழுத்துகள் சித்திரமும் ஒலிக்குறிப்பும் இணைந்து வடிவமைப்பு
பெற்றுள்ளதால் இன்றைய தமிழில் அவற்றைப்
பெயர்த்து
எழுத முடியவில்லை என்கிறார்.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம்
ஆதிச்சநல்லூர்:
முதல் அகழாய்வு
சிந்து போன்றே தமிழ்நாட்டில் தாமிரபரணி, வைகை பாலாறு,
பழமையான காவிரி போன்ற சமவெளியைப் நகரங்களிலும்ஆற்றங்கரைப்
பகுதிகளிலும் அகழாய்வுகள் நடைபெற்று
வருகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர் பரப்பில்
நடைபெற்ற அகழாய்வு முதல் ஆய்வாகும்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட
தொல்பொருட்கள் மிகத் தொன்மை வாய்ந்தவை.
பண்டைத்
தமிழரின் ஈமக்காடு : ஆதிச்சநல்லூர்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில்
பாளையங்கோட்டையில் இருந்து 12 கிலோமீட்டர்
தண்பொருநை( தாமிரபரணி ) ஆற்றின் தென்கரையில் உள்ளது.
இங்கு 114 ஏக்கர் தெற்கு-வடக்காகப் பரந்து கிடக்கும் பொட்டல் நிலம்,
பண்டைத் தமிழரின் ஈமக்காடாக இருந்ததை அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூர் பறம்பின் மேற்பகுதி 3 அடிவரை சரளைக்கற்கள் உள்ளன.
அதன் அடிப்பகுதியில் தனிக்
கூறாகச் சிதைந்த படிக்கற்பாறை இருக்கிறது.
ஈமத் தாழிகளைப் புதைப்பதற்காகவே பாறைகளில் தனித்தனியாள
உட்குடைவு செய்யப்பட்டுள்ளது.
ஈமத்தாழிகள் பெரியதாக ஏறத்தாழ 6 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
சில 3 முதல் 12 அடிவரையிலான ஆழத்திலும், சில ஒன்றின் மீது
ஒன்றான அடுக்காகவும் புதைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய
ஈமக்காடு பகுதியில் இது மிகப் பரந்துபட்டது.
அப்படியானால் இதற்கு எதிர்திசையில் பெருமளவு மக்கள் வாழ்ந்திருந்த
வாழ்விடப் பகுதிகள் இருந்திருக்கக் கூடும்.
ஆனால் தொடர் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை.
ஆதிச்சநல்லூரும்
அருங்காட்சியகமும்
பெர்லின்
அருங்காட்சியகம்
ஜெர்மன் நாட்டில் உள்ள
பெர்லின் நகரைச் சேர்ந்த முனைவர் ஜாகோர்.
1876 ஆம்ஆண்டு
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தார்.
அங்கு கிடைத்த பொருள்களை பெர்லின் அருங்காட்சியகத்தில் இடம்பெறச்
செய்தார்.
சென்னை அரசு
அருங்காட்சியகம்
தொடர்ந்து அலெக்சாண்டர் ரீ, 1903-1904 காலகட்டத்தில் ஏராளமான
பொருட்களைக் கண்டெடுத்தார். இவர் கண்டெடுத்தவை சென்னை
அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.
ஆதிச்சநல்லூரில் 50-க்கும் மேற்பட்ட வகைகளில் களிமண்பாண்டங்கள்
கிடைத்துள்ளன.
இரும்பு ஆயுதங்களும் குட்டையான வெட்டுவாய்பகுதி உடைய வாள்களும்
கைக் கோடரிகளும் அதிக அளவில்
எலும்புகளும்
மண்டையோடுகளும்
கிடைத்துள்ளன.
பெரிய மண் பாண்டத்தினுள் சிறிய மண்கலயங்கள் இருந்தன. அவற்றில்
ஒன்றில் நெல் உமி வைக்கப்பட்டிருந்தது.
ஆதிச்சநல்லூர்
பற்றிய நூல்
இது குறித்த விபரம் அடங்கிய நூல் ஒன்றை 1913 ஆம் ஆண்டு
அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் சே.ஆர். எஸ்பர்சன்
முன்னுரையுடன் "ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஊர்களில் உள்ள
வரலாற்றுக்
காலத்திற்கு முற்பட்ட
தொல்பொருட்களின் பட்டியல்" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்
சிவகளை:
கீழடி: ஆதன்
சிவகளை மாவட்டம் ஏரல் வட்டம், தூத்துக்குடியில் இருந்து தூத்துக்குடி
கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர்
தொலைவில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
சிவகளையின் முதற்கட்ட ஆய்வில் கிடைக்கப் பெற்ற 'ஆதன்' என்ற
தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு
கீழடியை நினைவூட்டுகிறது.
ஆதிச்சநல்லூர் போலச் செம்பு, தங்கம் போன்ற உலோகத்தாலான
பொருட்கள் இதுவரை கிடைக்கவில்லை.
கருப்பு சிவப்பு வண்ணப் பண்டங்கள் குடுவைகள் பானை மூடிகள்
ஆகியவற்றில் அழகிய வடிவமைப்பில் வெள்ளை வண்ண
வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன.
காலம்
இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல்லினைக் கரிமப் பகுப்பாய்வு
செய்ததில் இதன் காலம் கி.மு 1155 என வரையறுக்கப்பட்டுள்ளது.
வட்டச்சில்லுகள், நுண்கற்கருவிகள் முதலியன கிடைத்துள்ளன.
வைகை நதிக்கரை நாகரிகம் : தமிழ்நாட்டில் வீராம்பட்டிணம்
துறைமுகங்கள்
(அரிக்கமேடு), பூம்புகார், அழகன்குளம், கொற்கை (பட்டணம்),முசிறி
போன்ற எண்ணற்ற துறைமுகங்கள் அந்நியப் பயணிகள் இயங்கிய
குறுவணிகத் தளங்களாக அடையாளம் காட்டப்பட்டன.
அதோடு, அன்றைய 'குடித்தலைமை' ஆட்சி முறை மற்றும் சமுதாய
அமைப்பு
ஆகியவற்றின் காரணமாகக் கடல்கடந்து
வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஏற்றதாக இந்தியா இல்லை என்ற
ஊகத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால், சங்கஇலக்கியம் குறிப்பிடும் நகர்மயமாக்கலையும் பெருநிலச்
சமூக உருவாக்கமும் தமிழரின்
சங்ககாலநாகரிகமும்
பண்பாட்டுப் பழமையும் வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களைக் கீழடி
அகழாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
வைகை
நதிக்கரை நாகரிகம் -கீழடி:
இந்திய விடுதலைக்கு முன்பே அலெக்சாண்டர் ரீ என்பவரால்
பெருங்கற்காலத்
தமிழ்ப் பகுதிகள் கொண்ட இடங்களான
சிற்றூர்களான மதுரையின் பரவை, அனுப்பானடி அகழாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன.
இப்பகுதியின் தொன்மையை உணர்ந்து மத்திய தொல்லியல் துறை 1976
ஆம் ஆண்டில் டிகல்லுப்பட்டியில் முறையான அகழாய்வினை
மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறை கோவலன்பொட்டல்
(1979-80), अ (1986-87,90-91, 92-93,
94-95, 96-97, 97-98,
2014-15, 2016-17) மற்றும் மாங்குளம் (2006-07) போன்ற பகுதிகளில் அகழாய்வு
மேற்கொண்டது.
அகழாய்வுகளில் வைகை நதி கடலில் கலக்கும் பகுதியில் உள்ள
அழகன்குளம் அகழாய்வு முக்கியத்துவம் கொண்டது.
அழகன்குளம் அக்காலப்
பாண்டியர் துறைமுகமாக விளங்கியது.
"கீழடி
தமிழரின் தாய்மடி"
தமிழரின் பண்பாட்டுப் புகழைப் பரப்பும் வகையில் "கீழடி தமிழரின்
தாய்மடி" என்ற வகையில்
கீழடிப் பகுதியில் 110 ஏக்கர்
நிலப்பரப்பிற்கும் மேல் அதிக சிதைவில்லாமல் தென்னந் தோப்புகளால்
பாதுகாக்கப்பட்டு இருந்தது .
அதில் 9°51'40 "வடக்கு அச்சரேகைக்கும் 78°11' 70" கிழக்கு தீர்க்கரேகைக்கும்
இடையே அமைந்துள்ள ஒரு தொன்மை நகர்க் குடியிருப்பும் தொழில்கூடப்
பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து கிழக்கு தென்கிழக்காக 13 கிலோமீட்டர் தொலைவில்
கீழடி அமைந்துள்ளது. கீழடி
அகழாய்வுபகுதியில்
இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைகை ஆறு
உள்ளது.
இதுபோல அகரம் என்ற ஊர் கீழடியின் தொல்லியல் மேட்டில்
தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கே கொந்தகை என்னும் ஊர்
ஓர் எல்லையாக விளங்குகிறது.
சுற்றியுள்ள ஊர்களில் ஊரணிகள், கண்மாய்கள் போன்ற இயற்கை அரண்
கொண்ட தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடமாக
அமைந்துள்ளது.
கீழடிப் பகுதியில் மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பிரிவின்
பெங்களூரு பிரிவு அகழாய்வு மேற்கொண்டது.
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வினைத் தமிழகத் தொல்லியல்துறை
2017-18 ஆம் ஆண்டு மேற்கொண்டது.
2018-19 ஆறைவு ஆண்டில் ஐந்தாம் கட்ட முறையான தொல்லியல்
அகழாய்வானது நிறைவு பெற்றது.
நான்காம்
கட்டம்
நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்கள் வெளிக்
கொணரப்பட்டுள்ளன.
இவை பண்டைய பண்பாட்டை வெளிக் கொணரும் வகையில் செங்கல்
கட்டுமானங்கள், சுடுமண் உறை கிணறுகள், மழை
நீர் வடியும் இரு துளைகளுடன் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட
அமைப்பைக் கொண்ட ஓடுகள் போன்றவை
காணப்படுகின்றன.
செம்புப் பொருட்கள், இரும்புப் பாகங்கள், சுடுமண்
சொக்கட்டான் காய்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி,
மணிகற்கள் (அகேட் - சூதுபவளம்,
ஸ்படிகம்
போன்றவை) கண்டெடுக்கப்பட்டன. அக்கால மண்பாண்ட ஓடுகள் (கருப்பு -
சிவப்பு, கருப்பு, சிவப்பு,
பூச்சு மண்கலப் பகுதிகள்)
'ரெலைட்டட்' மட்பாண்டங்கள் மற்றும் சில அரட்டைன் ஓடுகள் ஆகியன
வெளிக்கொண்டு
வரப்பட்டன.
மட்பாண்டங்களைச்
சுடுதல்
மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னர் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ள
கீறல்களும் குறியீடுகளும் விவரணைகளும்
காணப்பட்டன.
தமிழி (தமிழ்
பிராமி)
இந்த அகழாய்வில் 50க்கும்மேற்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள்
மட்கலங்களில்
பொறிக்கப்பட்டுள்ளன.
இப் பொருள்களின் வாயிலாகப் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிக
வளர்ச்சி இருந்ததை அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் இரண்டாவது நகரமயமாதல் ஏற்படவில்லை என்று
கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செங்கல் கட்டுமானங்கள் ,உயர்
மதிப்புடைய தொல் பொருட்களின் மூலம் வைகை
நதிகரையில் உள்ள கீழடி இரண்டாம் நகரமயமாதல் கி.மு ஆறாம்
நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது.
இதே காலத்தில்தான் கங்கைச் சமவெளிப் பகுதியில் நகரமயமாதல்
தொடங்கியது.
தமிழ்
எழுத்து வடிவத்தின் காலம்
தமிழ் எழுத்து வடிவத்தின் காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என
அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வு
காலகணிப்புகளின்படி
கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடி ஆய்வின் மூலம் கிடைத்த அறிவியல் காலக் கணிப்புகள்
தமிழ்- பிராமியின் காலம் மேலும்
நூற்றாண்டுகள் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது என்ற
முடிவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது.
திருவள்ளூர்
மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழாய்வு
காசுமோசெனிக் நியூக்லைட்' என்ற இயலுலகபுவிப் பரப்பியல் ஒளி ஆய்வு
செய்ததில் இங்கு கண்டறியப்பட்ட முதற்கட்ட பழைய கற்காலக் கருவிகள்
15 லட்சம் ஆண்டுகள் என்றும்,
இரண்டாம் கட்ட பழையகற்காலக் கருவிகள் 3,85,000 ஆண்டுகள்
பழமையானது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுண்கற்காலம்
- கருவிகள்
நுண்கற்காலத்தைச் சேர்ந்த கற்காலக் கருவிகள் திருநெல்வேலி
பகுதியிலும் வைகை மற்றும் குண்டாறு ஆற்றுப்
படுகைகளிலும் காணக் கிடைக்கின்றன.
புதிய கற்காலம்
- கருவிகள்
புதிய கற்காலப் பண்பாடுகளின் கருவிகள் தமிழகத்தின் வடக்கு,
வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் கிடைத்துள்ளன.
இரும்புக்
காலம்- கருவிகள்
இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருவிகள் சேலம் வட்டாரத்தில் உள்ள
மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஆகிய ஊர்களில்
உள்ள பெருங்கற்படை ஈமச் சின்னங்களில் கண்டறியப்பட்ட மாதிரிகளில்
இருந்து இரும்புக் காலம் கி.மு. 2,000 எனக் காலக்கணக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர்
முதுமக்கள் தாழி
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி அகழாய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட
கரிமம்காலக் கணக்கீடு செய்யப்பட்டதில்
இதனின்
காலம் கி.மு ஒன்பதாம்
நூற்றாண்டு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக