பெருங்கற்காலம்,உலோக்காலம்,உருவத் தோற்றம்,பெருங்கற்காலத் தடயங்கள்,தங்கப் பயன்பாடு,செம்புப் பயன்பாடு,வெண்கலப் பயன்பாடு,இரும்புப் பயன்பாடு ('கரும்பொன்')

                                                                   பெருங்கற்காலம்

பெருங்கற்காலம்

பெருங்கற்காலத் தமிழர்கள் இறந்தவர்களின் புதைக்குழிகளின் மேல் பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களைக் கட்டினர்.

இவை பெருங்கற்படைச் சின்னங்கள் எனப்படுகின்றன.

இவ்வாறு பெருங்கற்களைப் பயன்படுத்தியதால் பெருங்கற்காலம் 

எனப்பட்டது.

உலோக்காலம்

இது புதிய கற்காலத் தமிழர்களின் பட்டறிவால் படிநிலையாகப் பெற்ற 

வளர்ச்சியாகும்.

இக்காலத்து மக்கள் கற்கருவிகளை விடப் பொன், செம்பு, வெண்கலம், 

இரும்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்த   அறிந்திருந்தனர்.

எனவே இக்காலம் உலோக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

உருவத் தோற்றம்

பெருங்கற்காலத் தமிழர் ஏறக்குறைய இன்றைய மனிதனைப்போல 

முகத்தோற்றத்தை அடைந்தனர்.

தலைமுடியைச் சீரமைத்து தங்களை அழகுப்படுத்திக் கொண்டனர்.

பஞ்சைக் கொண்டு தறிநெசவு செய்து, துணியாக ஆக்கி உடுத்திக் 

கொண்டனர்.

பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்து கொண்டனர்.

பெருங்கற்காலத் தடயங்கள்

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அமிர்தமங்கலம், கொற்கை,

 திருக்காம் புலியூர், உறையூர், அரிக்கமேடு, கொடுமணல், வல்லம்,

தேவாரம் என நூற்றுக்கணக்கான பெருங்கற்காலத் தடயங்கள் 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தங்கப் பயன்பாடு:

உலகின் பிற மனிதர்கள் செம்பை அறியும் முன்னரே நம் தொல் தமிழர் 

தங்கத்தை அறிந்திருந்தனர்.

அவர்கள் முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் தங்கம்தான் என்பது

 ஒரு வியப்பான தகவல்.

இதற்குச் சான்றாகப் பிற்காலத்தில் உலோகங்களான வெண்கலம், செம்பு, 

இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆகியவற்றை  வேறுபடுத்துவதற்கு 

முறையே செம்பொன், வெம்பொன், இரும்பொன் என்று அவை பெயரிட்டு 

அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

சிறிய தகடுபோல மெல்லிய அளவிலான தங்கத்தைக் களி மண்ணின் மீது 

இணைத்து அணிகலன்கள் ஆக்கிப் பயன்படுத்தியதாகத் தொல்லியலார் 

குறிப்பிடுவர். 

ஆதிச்சநல்லூரில் தங்கத்தாலான கண்டெடுக்கப்பட்டுள்ளன. 19 மகுடங்கள்

கண்டு எடுக்கப்பட்டு  உள்ளன .

செம்புப் பயன்பாடு:

தங்கத்தை தொடர்ச்சியாகச் செம்பையும் கண்டுபிடித்து, அதில் பல 

கருவிகளை உருவாக்கினர்.

முதன்முதலில் எளிய மக்கள் பலராலும் பயன்படுத்தப்பட்ட 

உலோகப்பொருட்கள் செம்பால் செய்யப்பட்டவையே.

உளி, சுத்தியல் ஆணி, அரம், அம்பு, கரண்டி வாள், போன்றவை செம்பால் 

செய்யப்பட்டிருந்ததாக அறிகிறோம்.

வெண்கலப் பயன்பாடு:

எட்டுப்பங்கு செம்பும் ஒரு பங்கு தங்கமும் கலந்த கலப்பு உலோகம் 

வெண்கலம் எனப்பட்டது. 

இவ்வாறு ஒரு உலோகத்தோடு இன்னொரு உலோகத்தைக் கலக்கும் 

அறிவியல் தொழில்நுட்பம் அறிந்து உருவாக்கப்பட்ட உலோகமே

வெண்கலம்.

ஆகவே இது தமிழரின் முற்போக்குத் தொழில்நுட்பத்தை 

வெளிப்படுத்துகின்றது.

பெருங்கற்காலத்தில் செம்பு,   கும்பா, கிண்ணம், குடம், வட்டில்  

குத்துவிளக்கு, மாட விளக்கு, பாவை விளக்கு , போன்றவையும் வாள், 

கரண்டி முதலிய கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் வெண்கலப் 

பொருளான சாடிகள், வட்ட வடிவக் கிண்ணங்கள், பறவைகள்

போன்ற வேலைப்பாடுகள் உள்ள அவற்றுக்கான மூடிகளின் மேல்பிடிகள் 

போன்றவை கிடைத்துள்ளன.

இரும்புப் பயன்பாடு ('கரும்பொன்')

வெண்கலக் கலப்பு உலோக உருவாக்கத்திற்குப் பிறகு தனி உலோகமான 

இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இது உலகெங்கும் மற்ற உலோகங்களை விடக் கூடுதலாகக் 

கிடைப்பதாலும்  எல்லா வகைக் கருவிகளுக்கும் ஏற்றதாக

இருப்பதாலும் மனிதனின் அறிவுத் திறனுக்கு ஏற்ற செய்பொருள்கள் 

செய்வதற்கு ஏற்றதாக இருப்பதாலும் இதன் பயன்பாடு பெருகியது.

எனவே இது 'கரும்பொன் ' என்று அழைக்கப்படுகிறது. 

இரும்பால் செய்யப்பட்ட போர்க் கருவிகளான வாள், கத்தி, அம்புமுனை, 

கோடரி முதலியன உருவாக்கப்பட்டன.

இரும்புத் தாதுக்களைத் திரட்டித் தோல் துருத்தி மூலம் சூடாக்கக்கூடிய 

சிறிய களிமண் உலையில் இட்டு இரும்பை உருக்கினர்.

இதற்கு மிகுதியான வெப்பம் தரக்கூடிய கருங்காலி மரத்தின் கரியைப் 

பயன்படுத்தினர்.

வேளாண்மைக்குரிய கருவிகளான கொழு, மண்வெட்டி, களைக் கொட்டு, 

கடப்பாறை போன்ற பொருட்களையும் செய்து பயன்படுத்தினர்.

களிமண் பயன்பாடு:

களிமண்ணைக் கைகளால் பிசைந்து தாழிகள் செய்து பழகி இருந்தவர்கள் 

பொதுப் பயன்பாட்டுக்கான களிமன் பாத்திரங்கள், ஓடுகள் முதலியவற்றை 

உருவாக்கப் புதிய கண்டுபிடிப்பாகச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை 

பற்றி அறிந்து கொண்டனர்.

வட்ட வடிவம் செங்குத்துக் கோணத்தில் சுற்றும் தன்மையையும் 

கிடைமட்டக் கோணத்தில் சுற்றும் தன்மையையும் பெற்றிருப்பதைக் 

கண்டறிந்தான்.

'குயவர்களின் சக்கரம்'

பெருங்கற்காலத்தில் தட்டை வடிவத்தைச் சக்கரமாகப் பயன்படுத்தி அதன் 

மேல் மண் வைத்துச் சுற்றிப் பாத்திரங்களை உருவாக்கி இருப்பார்கள்.

இதனைக் 'குயவர்களின் சக்கரம்' என்று கூறுவர்.

'குயவர் குறியீடு'

பல குயவர்கள் ஒன்றிணைந்து தங்களது பானைகளை ஒரே சூளையில் 

இட்டு பதப்படுத்தியுள்ளனர்.

அப்போது தாங்கள் உருவாக்கிய மட்கலங்களுக்குத் தனித்த அடையாளம் 

காணக் குறியீடுகள் இட்டுக்கொண்டனர்.  இதனைக் 'குயவர் குறியீடு' என்பர்.

'உடைமைக் குறி'

இதனைப் பயன்படுத்துவோரும் தங்கள் குறிகளைப் பாத்திரத்தில் இட்டனர்.

இதற்கு 'உடைமைக் குறி' என்று பெயரிட்டனர்.

இதுதான் பிற்காலத்தில் எழுத்து வடிவங்களுக்கு (தமிழ் எழுத்துரு)

முன்னோடி எனலாம்.

சான்றுகள்:

1. குன்றுகளின் அடிவாரங்களில் அதிக அளவில் பெருங்கற்காலச் 

சின்னங்கள் காணப்படுகின்றன.

குகைகளுக்குள் பெருங்கற்காலக் கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் 

கிடைக்கின்றன.

மகராசன் கடை , மல்லசமுத்திரம் ஆகிய இடங்களில் உள்ள 

பெருங்கற்காலச் சின்னங்களிலும்  கல்லறைகளிலும் இத்தகைய 

ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

 

2. பையம்பள்ளி, அப்புக்கல்லு, மல்லப்பாடி, குட்டூர் மலை,மோதூர் முதலிய 

இடங்களில்  நடைபெற்ற அகழாய்வுகளில் முதன் முதலாக் கைகளால் 

செய்த பானைகள் பற்றி அறிய முடிகிறது.

சக்கரம்

3. சக்கரம் பயன்படுத்திச் செய்யப்பட்ட பானைகள் பையம்பள்ளி என்ற 

இடத்தில் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூரில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மண் தாழிகள் 

பயன்பாட்டில் இருந்ததாகக்  கூறப்படுகிறது.

புவி ஈர்ப்புத் தன்மை

4. சீர்காழிக்கு அருகில் உள்ள எடமணல் மேலப்பாளையம் என்ற ஊரில் 

முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

அவற்றிலிருந்து கிடைத்த மட்கலங்கள் பெருங்கற்காலத்தைச் 

சேர்ந்ததாகவும் புவி ஈர்ப்புத் தன்மையை எதிர்கொள்ளும் வகையிலும் 

அமைந்திருந்தன. அவை தஞ்சாவூர் தலையாட்டி

பொம்மைகளைப் போன்று ஆடி இறுதியில் நேராக நின்றுவிடும் 

தொழில்நுட்பம்கொண்டதாக அமைந்திருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்