புதியகற்காலம்,புதிய கற்கால கருவிகள்,வேளாண்மை,போர்க் கருவிகள்,கொத்துக் காட்டு வேளாண்மை & காட்டெரிப்பு வேளாண்மை & கொல்லை

 

 

                                                     பாடம் மூன்று புதிய கற்காலம்

 

புதியகற்காலம்

பழைய கற்காலத் தமிழர்களின் வாழ்க்கைநிலை படிப்படியாக வளர்ச்சி 

பெற்று வந்தது.

இதற்கு முந்தைய பழைய கற்கால மனிதர்கள் கண்டு உருவாக்கிய 

கற்கருவிகளை நன்கு தேய்த்து வழவழப்பாகவும் கூர்மையாகவும் 

மெருகேற்றிப் பயன்படுத்தத் தொடங்கிய காலமே  புதியகற்காலம் 

என்று அழைக்கப்படுகிறது.

உருவத்தோற்றம்  

பழைய கற்காலத் தமிழர்களைப் போன்று இவர்களுக்கு உடலில் அதிக 

மயிர்க்கற்றை கிடையாது.

கடுமையான முகத்தோற்றம் மென்மையானதாகப் பொலிவு பெற்றது.

நீண்ட தலைமுடியும் தாடியும் புதிய கற்கால மனிதர்களின் 

உருவத்தோற்றமாக அமைந்திருந்தது.

புதிய கற்கால கருவிகள் கிடைத்த  இடங்கள்

தருமபுரி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாகரம் ஆகிய 

வட்டங்களில் இம்மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

பிக்கனஹள்ளி என்ற ஊரில் கற்கருவிகளும் வட்டுகளும், தேய்ப்பான்களும் 

வத்தல்மலை அடிவாரத்தில் புதிய கற்காலக் கைக் கோடரிகளும்

பிறகருவிகளும் மக்களால் வழிபடப்படுகின்றன.

வடஆற்காடு, தென்னார்க்காடு பகுதிகளிலும் பலஇடங்களில்

புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன.

அரிக்கமேடு மற்றும் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி 

மாவட்டங்களிலும் புதிய கற்காலத் தமிழர்களின் வாழ்விடங்களுக்கான

சான்றுகள் உள்ளன.  

பழைய கற்காலக் கருவிகள்

நன்கு மெருகூட்டப்பட்ட புதிய கருவிகளும் பலவகைக் கல்தூண்களும் 

செய்து கொண்டனர்.

எலும்புக் கருவிகளும் கல்கோடரிகளும் சிறு கல்கருவிகளும் இருபக்கக் 

கற்கோடரிகளும் அதிக அளவில் பயன்பட்டன.

கல்மணிகள், ஆற்றுக் கூழாங்கற்கள் கொண்டு, கோலிகள் தாயத்துக்கள் 

முதலியன செய்யப்பட்டன.

கால்நடைகளைப் பழக்குதல் & வேளாண்மை

புதிய கற்காலத் தமிழர்கள் தங்களது தேவைகளுக்காக கால்நடைகளைப் 

பழக்கிக்  கொண்டனர்.

தாங்கள் கைப்படுத்திய விலங்குகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகக் 

காடுகளையே பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகள் அவர்கள் நிலையாகத் 

தங்குமிடங்களாக மாறின.

புதிய கற்காலத்தின் இறுதியில் பயிரிடப்பட்ட தானியங்களை அரைக்கவும் 

உடைக்கவும் அம்மி, குழவி, திரிகை, கற்சட்டி கல்பாத்திரங்கள் 

முதலியவற்றைப் பயன்படுத்தினர்.

நிலத்தைப் பண்படுத்தக் கைக் கோடரி, உழு கலப்பை 

ஆகியவற்றையும் பயன்படுத்தினர்.

போர்க் கருவிகள் 

வேட்டைக்குரிய கவண், வில், மான்கொம்பு, மாட்டுக்கொம்பு, வளைதடி 

ஆகியவற்றைப் போர்க் கருவிகளாகவும் பயன்படுத்தினர்.

தொழில்கள்:

புதிய கற்காலத் தமிழர்கள் மரத்தாலும் கற்களாலும் ஆன பொருட்களைச் 

செய்வதைத் தொழிலாகக் கொண்டனர்.

விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தித் தங்களுக்குரிய தோல் ஆடை 

செய்யும் தொழிலும் செய்தனர்.

நாய்களின் நுண்ணறிவு கண்டு வியந்து அவற்றைத் தமது வேட்டைத் 

தொழிலுக்கு உதவுமாறு பழக்கிக்கொண்டனர்.

வேட்டை உணவுத் தேவையை நிறைவு செய்யாததால்  கால்நடைகளை 

வளர்த்தல், பயிர் வகைகளைப் பயிர்செய்தல் போன்ற தொழில்களிலும் 

ஈடுபட்டனர்.

கொத்துக் காட்டு வேளாண்மை &  காட்டெரிப்பு வேளாண்மை & கொல்லை

குறிஞ்சி நிலப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வேட்டையாடி வந்த பழைய 

கற்காலத் தமிழர்களின் வழித் தோன்றிகள், புதிய கற்காலத்தில் முல்லை 

நிலப்பகுதிகளில் கால்நடைகளை மேய்த்து வாழப் பழகினர்.

கால்நடைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யப் பழகாத நிலையில் 

கற்கோடரி கொண்டு, நிலத்தைக் கொத்திக்கொத்தியே வேளாண்மை 

செய்தனர்.

இதற்குக் 'கொத்துக் காட்டு வேளாண்மை' என்று பெயர்.

குறுங்காடு, பெருங்காடுகளைத் தீயிட்டு அழித்து வேளாண்மைக்காக 

நிலத்தைப் பண்படுத்தினர்.

அதனால் இதற்குக் 'கொல்லை' என்று பெயர். இதற்கு 'காட்டெரிப்பு 

வேளாண்மை' என்று பெயர்.

'பயிர் மாற்று வேளாண்மை'

பருவ மாற்றத்துக்குத் தக்கபடி, ஒருமுறை கிழங்குகளையும் மறுமுறை 

வேறு வகைப் பயிர்களையும் விளைவித்தனர். இதற்குப் 'பயிர் மாற்று 

வேளாண்மை' என்று பெயர்.

பிற்காலத்தில் நீரைப் பயன்படுத்திப் பயிரிடும் வகையில் மருதநிலம் 

உருவானது.

வீடுகள்:

பழைய கற்காலத் தமிழர்கள் மலைக் குகைகளிலும், மலை 

அடிவாரத்திலும் வாழ்ந்தனர்.

ஓர் இடத்தில் நிலையான தங்கும் திட்டமின்றி அலைந்தனர்.

புதிய கற்காலத் தமிழர்கள் பயிர்த்தொழில் செய்ய அறிந்து கொண்டதால், 

கால்நடைகளை வளர்க்கவும் தானியங்களை விளைவிக்கவும் அவற்றைப் 

பாதுகாக்கவும்  நிலையாக ஓர் இடத்தில் தங்க வேண்டிய நிலை உருவானது.

சிறிய சமதளமான மணல்கள் அல்லது மலையின் அடிவாரத்தில் சிறிய 

நிலையான வீடுகளை அமைத்து வாழ்ந்தனர்.

மக்கள்தொகை பெருகப் பெருக, வேளாண் உற்பத்தியும் பெருக, பலர் 

சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் ஊர்கள் உருவாயின.

மரத்தின் போக்கிற்கு ஏற்ப வீட்டின் அமைப்பும் வட்டம், நீள்வட்ட வடிவில் 

புல்வேய்ந்த கூரைவீடுகளைக் கட்டிக்கொண்டனர்.

மரக்கம்புகளை நட்டு அதன் மேல் புல்லால் கூரை வேய்ந்தனர். 

மூங்கிலைப் பின்னி, அதன் மேல் சாம்பல் கலந்த மண்ணைப் பூசியும் பின் 

மண்ணும் கல்லும் கலந்தும் சுவராகப் பயன்படுத்தினர்.

வீட்டின் சுற்றுச் சுவரை மணலாலும் காலப் போக்கில் மண்சேறு பூசியும் 

மெழுகிக் கொண்டனர்.

தரையில் தட்டைக் கற்கள் பதித்துக் கொண்டனர். வீட்டுக் கூரையின் 

உச்சியில் மழைநீர் விழுவதைத் தடுக்க மண்குடத்தைக் கவிழ்த்துக் 

கொண்டனர்.

இந்தக் குடம் அல்லது சட்டிதான் பிற்காலத்தில் கோயில்களில் 

கலசங்களாக மாறின.

மொழி

தொடர்பு மொழி மனிதனின் மொழி இயற்கை மொழி, செயற்கை மொழி 

என இரு வகைப்படும்.

கட்டுச்சொற்களுக்கு முந்தியது இயற்கை மொழி.

பிந்தியது செயற்கை மொழி ஆகும்.

பழைய கற்காலத் தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளச் சுட்டு 

ஒலிகளைப் பயன்படுத்தினர்.

புதிய கற்காலத்தில் அவை தனித் தனிச் சொற்களாக வளர்ந்தன.

குமரிக்கண்டத்தில் குறிஞ்சி நிலத்திலிருந்து தோன்றிய தமிழ், பின்னர் 

முல்லை நிலத்திற்குப் பரவியது.

அதனால் அந்நிலத்துக் கருப்பொருட்கள் பற்றிய சொற்கள் பிறந்தன.

செயற்கைமொழியானது,

1. அசைநிலை, 2. புணர்நிலை, 3. கொளுவு நிலை, 4. பகுசொல் நிலை 

என்ற நிலைகளைப் புதிய கற்காலம் முடியும் முன்னரே கண்டடைந்திருக்க 

வேண்டும். 

அசைநிலை: ஒற்றையாய் வேறு எந்தச் சொல்லுடனும் சேராமல் தனியாய் 

இருக்கும் சொல் ( ஏ, உள், பல், யா, உண்) (சீனரின் முன்னோர் குமரியில் 

இருந்து பிரிந்து சென்றனர் )

புணர்நிலை: இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருத்தல். 

(பெரு + மகன்- பெருமகன், செய் + கை - செய்கை).

கொளுவு நிலை : முழுச்சொல்லும் துணை உறுப்புச் சொற்களும் ஒன்றாய் 

இணைந்து ஒரு சொல்லாய் இருத்தல் (வரு -உத்து +இ- வருத்துவி)

சிந்தியரின் முன்னோர் குமரியில் இருந்து பிரிந்து சென்றனர் )

பகுசொல் நிலை:  இரண்டு சொற்கள் மருவி உட்பிணைந்து உருமாறி 

இருத்தல் - பெம்மான் (பெருமகன்) - பிரான். சுமேரியரின் முன்னோர் 

குமரியில் இருந்து பிரிந்து சென்றனர் )


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்