பாடம் -இரண்டு பழைய கற்காலம்,உணவு சேகரிப்பவர்கள் &' காட்டாண்டிகள்','இராபர்ட் புரூஸ் பூட்',பாலாறு & செயற்கைக்கோள் நிழற்படங்கள்,பொம்மையார்பாளையம்,அள்ளிக்குழி மலைத்தொடர் ,வேட்டையாடும் ஓவியங்கள்

பாடம்-இரண்டு பழைய கற்காலம் (கி.மு.5 இலட்சம் - 1 இலட்சம் ஆண்டுகள்)

 

பழைய கற்காலம்

பழைய கற்காலம் என்பது மனித வாழ்க்கையின் தொடக்க நிலையைக் 

குறிப்பதாகும்.

இயற்கையாகக் கிடைக்கும் கரடுமுரடான கற்களைப் கற்கருவிகளாக்கி, 

வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மனித  இனத்தின்

காலத்தைக் குறிப்பதாகும் .

உணவு சேகரிப்பவர்கள் &' காட்டாண்டிகள்'

கற்களைக் கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்தே அவன் 

விலங்கிலிருந்து வேறுபட்ட மனிதனாக ஆனான்.

அப்போது அவர்கள் குரங்குகள் போன்று இருந்தனர்.

அவர்களை உணவு சேகரிப்பவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் 

குறிப்பிடுகின்றனர்.

மானிடவியலார் 'காட்டாண்டிகள்' என்பர்.

பழைய கற்கால மனிதர்களின் உடலமைப்பு

கூர்மையான முகம், உடல் முழுவதும் மயிர்க் கற்றை, நீண்ட நகங்கள், 

நீளமான தலைமுடியுடன் இருந்தனர்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இடங்கள்

தென்னிந்தியாவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இடங்கள் 

 459. அதில்  42 இடங்கள் பழங்கற்காலத்தையும், 252 இடங்கள்

புதிய கற்காலத்தையும் சேர்ந்தவை.

'இராபர்ட் புரூஸ் பூட்'

இன்றைய இந்திய வரலாற்றை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது 

என முதன் முதலில் உலகுக்கு உணர்த்திய பெருமை 'இராபர்ட்

புரூஸ் பூட்' என்பவரையே சாரும்.

 

வாழ்ந்த இடங்கள்:

முதலில் மனிதன் தோன்றியது

முதன் முதலில் மனிதன் தோன்றியது மலைகளும், மலை சார்ந்த 

இடங்களும், காடுகளுமே ஆகும்.

பிற்காலத்தில் ஐந்து நிலப் பாகுபாடுகளை வகுத்தபோது, முதலில் தமிழர் 

தோன்றிய மலை சார்ந்த நிலப்பகுதி 'குறிஞ்சி' எனப்பட்டது. இம்மலைத் 

தொடர்களில் வேட்டையாடி வாழ்ந்து வந்த வேட்டுவத் தமிழர்களே முதல் 

மனிதர்களாவர்.

அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இப்போதைய தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர், கிழக்குத் தொடர்ச்சி வேலூர் இப்போதைய 

வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள கொற்றலை ஆற்றுச் (பழைய பாலாறு) சமவெளி, ஆரணியாற்றுச் சமவெளிப் பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டி, குடியம், அத்திரம் பாக்கம், நெய்வேலி. வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை, போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன.

இவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல், நாடோடிகளாக இடம்பெயர்ந்து கொண்டே இருந்தவர்களாவர்.

பாலாறு & செயற்கைக்கோள் நிழற்படங்கள்

பாலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சிறிய கால்வாயே கொற்றலை 

ஆறாக உருமாறி அரக்கோணம், திருத்தணி,திருவள்ளூர், பொன்னேரி வட்டங்கள் வழியாகப் பாய்ந்தோடி எண்ணூருக்கு அருகில் 

கடலில் கலக்கிறது.

செயற்கைக்கோள் நிழற்படங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் 

அடிப்படையில் கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான்

ஏறக்குறைய 5 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாலாறு  ஓடியிருக்கிறது.

 

பழைய கற்கால மக்களும் பாலாற்றங்கரையும்

இந்தக் கொற்றலை ஆற்றின் கரையோரத்தில் பழைய கற்கால மக்கள் பெருமளவில் வாழ்ந்துள்ளனர்.

மாட்டின் நீள்வட்ட வடிவமான 17 காலடித் தடையங்கள், மூன்று மீட்டர் 

ஆழத்தில் தடம் பதிந்த தடையங்கள் போன்றவை

இந்தியாவிலேயே முதன்முறையாக இப்பகுதி அகழாய்வின் மூலம் 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

புதுச்சேரிப் பகுதி பொம்மையார்பாளையம்

கடலில் மூழ்கியிருந்ததாகக் கருதப்படும் புதுச்சேரிப் பகுதியில் ஒன்றரை 

லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்ததாகக்

கருதப்படுகிறது.

புதுவைக்கருகே உள்ள பொம்மையார்பாளையத்தில் கிடைத்த தொல் 

மனிதக் கூட்டை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தபோது, அதன்

காலம் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் எனக் 

கண்டறியப்பட்டது.

அள்ளிக்குழி மலைத்தொடர்  

திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் 

உள்ளது குடியம், இவ்வூருக்கு அருகில் உள்ள அள்ளிக்குழி

மலைத்தொடரில் 2 1/2 லட்சம் ஆண்டுகளுக்கு முன், பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'மனத்தச்சம்மன் குகை'யில் அகழாய்வு

'மனத்தச்சம்மன் குகை'யில் அகழாய்வு (1962 63, 1963 64ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், கைக் கோடரிகள், இதய வடிவிலான கைக் கோடரிகள், வெட்டுக் கத்திகள், சுரண்டிகள், சிறிய வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள், வட்டுகள், மரமிழைக்கும் உளி முதலிய கருவிகள் போன்றவை 

கண்டெடுக்கப்பட்டன.

 

கருவிகளின் பயன்கள்

கரடான, சொரசொரப்பான கற்களைக் கொண்டு கருவிகள் கரடு முரடான, 

செய்து தரையைத் தோண்டுவதற்கும் மரத்தை வெட்டுவதற்கும்

நிலம், மரம் ஆகியவற்றைத் துளைக்கப் பயன்படுத்தினர். விலங்குகளின் தோலை உரிக்கவும் இறைச்சியைக் கிழிக்கவும் பயன்படுத்தினர்.

மரப்பட்டை சீவவும் ஈட்டியைப் போன்று வீசி எறிந்து விலங்குகளைக் கொல்லவும் 

பயன்படுத்தியுள்ளனர்.

 

பழைய கற்காலக் கற்கருவிகள் , நுண்கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்கள்  

பல்லாவரம், அத்திரம்பாக்கம், பூண்டி, வடமதுரை, பரிக்குளம், புதுக்கோட்டை

 மாவட்டம் திருமயம் வட்டத்தில் உள்ள குருவிக்கொண்டான்பட்டி ஆகிய பகுதிகளில் பழைய கற்காலக் கற்கருவிகள் 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோழகம்பட்டி, இரகுநாதபுரம், ஒட்டப்பாலம் , புனல் குளம், மணப்பாறை 

வட்டத்தில் ஊனையூர், கரூர் மாவட்டத்தில் செகதாபியிலும்

நுண்கற்கருவிகள் பெங்களூரிலும் கண்டுடெக்கப்பட்டுள்ளன.

ஏராளமாகக் தஞ்சை வட்டத்தில் வல்லம் ,புதூர், சாணூரப்பட்டி, செங்கிப்பட்டி, கூனம்பட்டி ஆகிய இடங்களிலும் 

கற்கால மனிதர்கள் பயன்படுத்திய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.

அரியலூர் நல்லாம்பாளையம், மாவட்டம் செந்துறை வட்டத்தில் பாசாலம், 

தாமரைப்பூண்டி, செந்துறை, சிறுகளத்தூர், கஞ்சமலைப்பட்டி

ஆகிய இடங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் மருங்கூர்,

 இடையக் குறிச்சி, கூழாட்டுக் குப்பம், மைக்கேல் பட்டி, பிலிச்சிக்குழி,

மேல சிந்தாமணி, காக்காபாளையம், வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர்,

விளாங்குடி காத்தான் கோரியம்பட்டி, நடுப்பட்டி குடிக்காடு,

அணிக்குறிச்சி, கா.அம்பாப்பூர், புதுக்குடி, செங்குருந்தபுரம் ஆகிய 

இடங்களிலும் நுண் கற்கருவிகளும் பழைய கற்காலக் கருவிகளும்

கிடைத்திருக்கின்றன.

ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு

தகடூர் மாவட்டம் தான் அதிக அளவில் கற்காலக் கருவிகள் 

கிடைக்கக்கூடிய பகுதி என்று தொல்லியல் ஆய்வாளர் குடவாயில்

சுந்தரவேலு ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

நெருப்பை அறிதலும் பயன்பாடும்

பழைய கற்காலத் தமிழர்கள் நெருப்பின் பயன்பாட்டைத் தொடக்கத்தில் 

அறிந்திருக்கவில்லை.

பின்னர்இடைக்காலத்தில் கோடைக் காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து பற்றிக்

கொண்ட நெருப்பைப் பார்த்து அஞ்சினர்.

பிறகு மரக் குச்சிகளைக் கடைந்து தீயை உருவாக்குவதன் (தீக்கடை கோல்) 

மூலமும், சிக்கிமுக்கிக் கற்களை உரசுவதன் மூலமும் நெருப்பை 

உருவாக்கக் சுற்றுக் கொண்டனர்.

இதனைப் பயன்படுத்தித் தாக்கவரும் விலங்குகளை விரட்டினர். 

இறைச்சியை வதக்கி உண்பதற்கும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் 

கொள்ளவும் தேனீயை விரட்டித் தேன் எடுக்கவும் ,  

அறிந்து கொண்டனர்.

காய்கனிகளைப் பறித்தல், கிழங்கெடுத்தல், தேனெடுத்தல், வேட்டையாடுதல்

ஆகிய தொழில்களும் கற்களைத் தோண்டுதல், கற்களை நாட்டுதல், 

பாறையில் ஓவியம் தீட்டுதல் போன்ற வேலைகளையும் செய்தனர்.

உணவும் மாற்றமும்

தொடக்க காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்த காய்கள், கனிகள்,  கிழங்குகளை உண்டனர்.

காலப்போக்கில் பருவகால மாற்றங்களால் காய், கனிகள் கிடைப்பது அருகிய நிலையில் இறைச்சி உணவை உண்ணத் தொடங்கினர்.

சில இடங்களில் இறந்த, தீயில் வெந்த இறைச்சியை உண்டனர்.

விலங்குகளைத் தாங்களே வேட்டையாடி உண்டனர்.

வேட்டையாடும் ஓவியங்கள்

தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, 

புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி (கருமலை), கோயம்புத்தூர், ஈரோடு, 

நீலகிரி (நீலமலை) ஆகிய மாவட்டங்களில் 65 ஊர்களில்

உள்ள மலைகளில் காணப்படும் இயற்கையாக அமைந்த குகைத் 

தளங்களின் பாறைகளில் செங்காவிக் கட்டி மற்றும் சுண்ணாம்புக் கட்டி  ஆகியவை கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன.

அவ் ஓவியங்களில்,மக்கள் விலங்குகளை வேட்டையாடும் காட்சிகளைக் கொண்டு, விலங்குகளின் இறைச்சியை மக்கள் உண்டதை அறிய இயலும்.

 

ஆடை

ஆடையின்றி வாழ்ந்த மக்கள், பின்பு குளிர், வெப்பம், போன்றவற்றிலிருந்து  தங்களைக் காத்துக்கொள்ள முற்பட்டனர்.

அதற்காக, கோரைத் தழைத் தொடை, தையிலை மரப்பட்டை, விலங்கின் 

தோல், மரப் பட்டைகளை ஊறவைத்துத் தட்டி உருவாக்கிய நார்கள் ஆகியவற்றை ஆடையாகக் கொண்டனர்.

அவை மரப்பட்டை  ஆகியன தழை எனப்பட்டது.

காலப்போக்கில் சீரை என்ற சொல் சீலை மாறியது.

அணிகலன்கள்

மருக்கொழுந்து, அழகிய மலர்கள், பறவைகளின் இறகு, வண்ணக் கற்கள் முதலியவற்றை அணிகலன்களாக அணிந்துப் பழகினர். 

புலிப்பல் வடிவம் கொண்ட தாலி செய்து கொண்டனர்.

 

தண்ணீர் சேகரிப்பு

தண்ணீரைச் சேமிக்க (மண்கலன்கள் பற்றி) அறிந்திராதவர்களாக தொடக்க 

காலத்தில் இருந்தனர்.

ஓடை, ஆறு, நீர் ஊற்றுகளில் தண்ணீரை அள்ளிப் பருகினர்.

அவை வற்றிய காலத்தில் பாறைக் குழிகளில் நிறைந்த நீரைக் கைகளால் அள்ளிப் பருகியதோடு விலங்குகளைப் போலக் கவிந்தும் குடித்துள்ளனர்.

 நீர்க் கலங்கள் 

மரத்தைத் துளைத்தும், கல்லைக் குடைந்தும், சுரைக் குடுக்கை, 

மூங்கில் நாழி ஆகியவற்றை நீர்க் கலங்களாகப் பயன்படுத்தினர்.

 

இருப்பிடம் 

பழைய கற்கால மனிதர்கள் உணவைத் தேடி அலைந்தனர்.

அதனால் குறிப்பிட்ட இடத்தில் நிலையாகத் தங்கவில்லை.

தொடக்க காலத்தில் ஆற்றுப் படுக்கையில் உறங்கினர்.

பிறகு விலங்குகளுக்கு அஞ்சி மரக்கிளைகளில் இலை, தழைகள், விலங்கின்

தோல்கள் ஆகியவற்றைத் தொட்டிலாகக் கட்டி அதில் தொங்கிக்

கொண்டே தூங்கும் வழக்கம் இருந்தது.

அதன் பின் குளிர், வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள மலைக்குகை, 

கல்லால் அமைத்த காற்று மறைப்பில் உறங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்