பண்டைத் தமிழரின் வாணிகம்,தமிழ்நாட்டுக் கைவினையரும் அயல்நாட்டுத் தொழிலாளரும்,"குறி எதிர்ப்பு",வாணிகச் சாத்துகள்

 

                   பண்டைத் தமிழரின் வாணிகம்

பழந்தமிழர் வாணிகத் தொழிலில் சிறந்து விளங்கினர் .

இதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் கிடைக்கின்றன.  

அயல்நாட்டு வரலாற்று குறிப்புகளில் இருந்தும்  கிடைக்கின்றன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அயல் நாட்டிற்கு 

ஏற்றுமதி ஆயின.

அடிப்படையான உற்பத்திதொழில்கள் உழவும் வாணிகமும் ஆகும்.

மக்களின் பெரும்பாலானோர் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சிலர்  தலைமுறையாக செய்துவந்த தொழிலை மாற்றிக் கொண்டனர்.

புலவர்கள்  - வாணிகம்

சில புலவர்கள் வாணிபம் செய்தனர். அவர்களின் பெயர்களே 

அதற்குச் சான்றாகின்றன.

கூளவாணிகள் சீதலைச் சாத்தனார், மதுரைப் பண்டவாணிகள், 

இளந்தேவனார், மதுரை அறுவை வாணிகள் இளவேட்டனார். உறையூர் 

இளம்பொன் வாணிகனார், உறையூர்

மருத்துவன் தாமோதரனார், ஓதலாந்தையார். கச்சிப்பேட்டு இளந்தச்சனார். 

கணக்காயன் தத்தனார். கணியன் பூங்குன்றனார். செய்தி வள்ளுவன் 

பெருஞ்சாத்தன், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், 

புதுக்கயத்து வண்ணக்கன், கம்பூர்கிழான், மதுரை கொல்லன் புல்லன், 

மதுரைத் தமிழ்க் கூத்தனார் எனப் பலரைச் சங்கப் பாடல்கள்

சுட்டுகின்றன.

தமிழ்நாட்டுக் கைவினையரும்  அயல்நாட்டுத் தொழிலாளரும்

வளமான பொருட்கள்  பலவற்றை உற்பத்தி செய்வதில் 

தமிழ்நாட்டுக் கைவினையருடன் அயல்நாட்டுத் தொழிலாளரும் சேர்ந்து 

கொண்டனர்.

மகதநாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டிய கம்மியர், அவந்தி 

நாட்டுக் கொல்லர்கள், யவனத் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் 

கம்மியருடன் சேர்ந்து முத்துப் பந்தர்

படைத்தார்கள் என்று மணிமேகலை கூறுகின்றது.

கோசல ஓவியர்களும்  பொருள்களைப் வத்தவ  நாட்டு வண்ணக்

 கம்மர்கள் போன்றோர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தினர்.

கம்மியர் செப்புப் பானையைக் கடையும்போது அது பளபளவென்று 

மின்னியது.

 

வாணிகத்தில் சிறப்பானவை :

பழந்தமிழகத்தில் நடைபெற்று வந்த வாணிகத்தில் சிறப்பானவை உடை 

வாணிகம்,ஓலை மாணிக்கம், கூல வாணிகம், பொன் வாணிகம்.  

பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே வாணிகம் நடைபெற்று வந்தது.

தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீனுக்கும் நறவுக்கும் 

மாற்றப்பட்டன.

கரும்பும் அவலும் மானுக்கும் கல்லுக்கும் மாறின நெய்விற்று எருமை 

வாங்கினர்.

உப்புக்கு நெல் மாற்றப்பட்டது.

பச்சைபயிருக்கு  ஈடாகக் கெடிறு என்னும் மீன் மாற்றிக்கொள்ளப்பட்டது.

"குறி எதிர்ப்பு"

பண்டமாற்று முறையில் "குறி எதிர்ப்பு" என்று ஒரு முறையும் வழங்கி 

வந்தது. 

குறிப்பிட்ட ஓரளவு பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்துக்குப் 

பிறகு அதைத் திருப்பிக் கொடுப்பதுதான் இம் முறையாகும்.

வாணிகச் சாத்துகள் (தொடர் வண்டிகள்)

வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி பல ஊர்களுக்கும் விற்பனைக்கு 

எடுத்துச் செல்லுவார்கள்.

இக் குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் (தொடர் வண்டிகள்) என்று பெயர்.

ஆறலைக் கள்வருக்கு அஞ்சி, அவர்கள் சாத்துக்களாகக் கூடிச் செல்லுவது 

வழக்கம்.

சுங்கம் ( வரி)

வணிகச் சாத்து, கழுதையின் மேல் மிளகுப் பொதிகளை ஏற்றிச் 

செல்லும்போது  சுங்கம் செலுத்தியுள்ளனர் .

குதிரை

கீழைக் கடற்கரைப் பகுதியின் தொண்டியிலிருந்து மதுரைக்குக் கொண்டு 

செல்ல கப்பலில் அகில் முதலியவை கொண்டு வரப்பட்டன.

குதிரைகளை யவனர்கள் மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டு வந்தனர்.

தீம்புளிப் பாகல்

அதே மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும் தீம்புளி, உப்பு, 

உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம் நாடுகளுக்கு ஏற்றிச்செல்வர்.

புளியையும் கருப்பங் கட்டியையும் (கருப்பட்டி) சேர்த்து பிசைந்து அதைப் 

பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குதான் தீம்புளிப் பாகல் என்று பெயர்.

 

தங்க நாணயங்கள் ': காணம்

அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

ஆனால் இன்று கிடைக்கவில்லை. ஆனால் 'காணம்' என்ற பொற்காசு 

சங்ககாலத்தில் புழங்கி இருந்திருக்கிறது.

சான்று

தகடூர்ப் போரில் வெற்றிபெற்ற பெருஞ்சேரல் இரும்பொறை 

தன்வெற்றியைப் பாடிய அரிசியில் கிழார் என்ற புலவருக்கு 900 ஆயிரம் 

காணம் பரிசில் தந்திருக்கிறார்.

 ஆடுகோட்பாட்டு சேரலாதன் காக்கைபாடினியார் என்ற புலவருக்கு 

நூறாயிரம் காணம் பொன் வழங்கினான்.

பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனாருக்கு 16 நூறாயிரம் 

பொற்காசு பரிசில் வழங்கப்பட்டிருக்கிறது.

வேப்பம்பழம்

பொற்காசு ஒவ்வொன்றும் வேப்பம்பழம் அளவு இருந்தது.

அவற்றைப் பெண்கள் மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்து 

கொண்டனர்.

இரும்பொன்

வெள்ளியினால் ஆன அணிகலன்களையும் மக்கள் பூண்டனர்.

வெள்ளியினால் பெரும்பாலும் பாத்திரங்களே செய்யப்பட்டன.

இரும்புக்குப் பொன் என்று பெயர் வழங்கினர்.

இரும்பொன் என்பதே இரும்பு ஆனது என்பர்.

அளவைகள்

வாணிகத்திற்குப் பல  அளவைகள் பலவகைகள் இருந்தன.

எடுத்தல் அளவைகள் சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர்.

'எண்'

 'எண்' என்னும் சொல் எண்ணுகின்ற எண்ணையும் கணிதத்தையும் 

குறிக்கும்.

இலட்சம் என்ற பேரெண்ணையும் நூறாயிரம் என்று  குறிப்பிட்டனர்.

திருவள்ளுவர் காலத்தில் கோடி என்ற பேரெண்ணும் பயன்பட்டுள்ளது.

கோடிக்கும் மேற்பட்ட எண்களைக் குறிக்கவும் தமிழில் சொற்கள் உண்டு.

வெள்ளம், ஆம்பல், தாமரை என்பன பெயர்களுள்சிலவாகும்.

நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவையும் சங்ககால 

இலக்கியங்களில் உள்ளன.

உழவுத் தொழில்

வாணிகத் தொழிலுக்கும் மேலானது  உழவுத் தொழில்.

ஒருபெண் யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் ஏழு ஆண்யானைகளுக்கு 

அளிக்கப்படும் தீனி அளவு நெல் விளையும் செழுமையுடைய

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று ஆவூர் 

மூலங்கிழார் பாராட்டுகின்றார்.

நெல்லும் கரும்பும் தென்னையும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் 

பருத்தியும் தமிழகமெங்கும் விளைந்தன.

நிலத்தை உழுவதும் எருவிடுதலும் நாற்று நடுவதும் தண்ணீர் கட்டுவதும் 

களை எடுப்பதும் பயிரைக் காவல் காப்பதும் அறுவடை

செய்வதும் உழவுப் பணிகளின் செயலாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்