பாடம் ஒன்று - தொல் தமிழர் - ஹீராஸ் பாதிரியார்-சர் ஜான் மார்ஷல்-பங்கேயா-இலாராசியா & கோண்டுவானா -குமரிக் கண்டம் & 'லெமூரியா' கண்டம்

 

                   பாடம் ஒன்று  -  தொல் தமிழர்

ஹீராஸ் பாதிரியார்

தமிழர் யார் என்ற கேள்விக்கு விடை காணப் பலரும் முயற்சி செய்தனர்.

குறிப்பாகத் தமிழரல்லாத வரலாற்று ஆய்வாளரான ஹீராஸ் பாதிரியார் 

சிந்துவெளியில் வரலாற்றுப் புகழ் பெற்ற அகழ்வு ஆராய்ச்சிகள் நடத்தினார்.

பண்டைய நாகரிகச் சின்னங்கள்  

ஹீராஸ் பாதிரியார்  நடத்திய அகழ்வு ஆராய்ச்சியில்  புதைபொருள்கள் பல கண்டெடுக்கப் பட்டுள்ளன.

சிந்துவெளியில் மிகப்பழங்காலத்தில் பெரியதொரு நாகரிகம் செழித்து வளர்ந்திருந்தது.  அது அறவே அழிந்துவிட்டது.

சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்கள் பாகிஸ்தானில் உள்ளன.

இவையன்றி சானு டாரோ, கோப்பீஜி, லோதல், காளிபங்கன் ஆகிய இடங்களிலும் பண்டைய நாகரிகச் சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

சர் ஜான் மார்ஷல்

இதனை வரலாற்றுத் துறைக்குத் தந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். 

தமிழகத்தில் மட்டும் 17 ஆற்றங்கரை நாகரிகங்கள் தொல் தமிழர் 

வரலாற்றை வடிவமைக்க உதவி உள்ளன

பூவுலகின் தோற்றம்

கதிரவனிலிருந்து பிரிந்த இப் பூவுலகின் மேற்பகுதி, பலகோடி ஆண்டுகள் 

கடந்து பெரும்பகுதி நீரால் சூழப்பட்டது.

புவியின் உட்பகுதியில் தங்கி வாயுக்களின் அழுத்தம் தாளாமல் அவை  வெடித்து எரிமலையாக  வெளிவந்தன.

இந்த  நிகழ்வுகள் பல கோடி ஆண்டுகள்தொடர்ந்து

 நடைபெற்றதன்  விளைவாக வெளியேறிய பாறைக் குழம்புகள் நீர்  இறுகிப்போய் மலைகளும் அவை சார்ந்த நிலமும் உருவாயின.

'பங்கேயா'

இந்த  நிலப்பகுதி பல கண்டங்களாக பிரிந்து இருக்காமல் இருந்தது.

அனைத்து நிலப்பரப்புகளும் இணைந்த ஒரே  நிலப்பரப்பாக இருந்தது.

இதனையே 'பங்கேயா' என்பர்.

தமிழக நிலப்பரப்பு

இப்போதைய தமிழக நிலப்பரப்பு புவியில் நிலப்பகுதி தோன்றிய 

காலத்திலிருந்தே இருந்துள்ள நிலப்பரப்பு எனக் கூறப்படுகிறது.

ஒரே நிலமாக இணைந்திருந்த பங்கேயாவில் காணப்பட்ட புதை வடிவ மண், பல கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

அத்தகைய புதை வடிவ மண் நம் தமிழகத்தில் காணப்படுவதே இதன் 

பழமைக்குச் சான்றாகும்.

இலாராசியா & கோண்டுவானா

சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நிலப்பரப்பாக விளங்கிய  நிலத்தட்டு, வடக்கு நிலப்பரப்பு தெற்கு நிலப்பரப்பு இரண்டாக உடைந்து   இரு கண்டங்களாகப் பிரிந்தது.

இவற்றை முறையே 'இலாராசியா' என்றும் 'கோண்டுவானா' என்றும் 

அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலாராசியாக் கண்டம்

நில நடுக்கோட்டுக்கு மேல் திசையில் இலாராசியாக் கண்டம் இருந்தது. 

அது இப்போதைய வட அமெரிக்கா, ஐரோப்பிய நிலப்பரப்பை 

உள்ளடக்கியதாக இருந்தது.

பால்டிகா

பல இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இலாராசியாவிலிருந்து ஐரோப்பிய 

நிலப்பரப்பு கிழக்கே பிரிந்து பால்டிகா என்ற மற்றொரு கண்டம் 

உருவாயிற்று.

பெருங்கண்டமாக இருந்த கோண்டுவானா  , இலாராசியா என்ற வட நிலப் பகுதியாகவும்  அதிலிருந்து பிரிந்த பால்டிகாவும் மோதிக் கொண்டதில்  கோண்டுவானா தென் அட்லாண்டிக் நோக்கி நகர்ந்து தென் துருவப் 

பகுதிக்குச் சென்றது.

கோண்டுவானாக் கண்டமும்  இன்றைய பழந்தமிழ்நாடும்

இந்தக் கோண்டுவானாக் கண்டம் இன்றைய பழந்தமிழ்நாடு (இன்றைய இந்தியா). ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ், இத்தாலி, பால்கன்தீபகற்பம், மத்திய 

கிழக்கு நாடுகள், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின்நிலப்பரப்புகளை  

உள்ளடக்கியதாக இருந்தது.

'குளோசப்டரிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட செடி இந்தியப்பகுதி எங்கும் காணப்பட்டது.

இந்தவகைச் செடி தென் அமெரிக்காவிலும் காணப்பட்டது.

இந்தியாவில் 'கோண்டு' இனப் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் இச்செடி காணப்பட்டமையால் இந்த மாபெரும் கண்டத்துக்கும்  அப்பெயரிட்டார் எட்வர்டு சூயஸ்.

குமரிக் கண்டம் & 'லெமூரியா' கண்டம்

கோண்டுவானாக் கண்டம் காலப்போக்கில் மேலும் பிளவுபட்டது.

அவ்வாறு பிரிந்ததில் ஒன்று பழந்தமிழ்நாடு (இன்றைய இந்தியா), இன்றையதென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,மலேசியா, இந்தோனேசியா, 

பிலிப்பைன்ஸ், இலங்கை, கிழக்கு இந்திய தீவுகளான ஜாவா, சாலித் தீவு ஆகியவையும் தென் துருவம் வரையும் ஒரே நிலப் பரப்பாக 

இருந்திருக்கிறது.

இந்த நிலப்பரப்பைத்தான் உலகக் கடலாய்வு வல்லுநர்கள் 'லெமூரியா' 

கண்டம் (குமரிக்கண்டம்) என்று அழைத்தனர்.

'இலெமூர்' என்ற பாலூட்டி விலங்கு வாழ்ந்த நிலப்பகுதியாக இருந்ததால் அதன் பெயரிலேயே இக்கண்டம் வழங்குவதாயிற்று. பழந்தமிழர் இந்த நிலப்பகுதியைக் 'குமரி' என்றும் 'குமரி நிலம்' என்றும் அழைத்தனர்.

குமரி நிலத்தின் தென்பகுதியில் பரவியிருந்த மாபெரும் மலைத்தொடரின்  பெயர் 'குமரி மலை' என்றும் அந்நிலத்தின் வடபகுதியில் ஓடிய பேராறு 'குமரி ஆறு' என்றும் வழங்கலாயிற்று.

இக்கண்டத்தின் தென்பகுதிதான் உலகத்தின் நடுப்பகுதியாக இருந்தது.

இந்த நிலப்பகுதி உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான தட்பவெப்ப நிலையைக் கொண்டிருந்ததால், இங்குதான் உலகின் முதல் உயிர் தோற்றம்

 நடைபெற்றது என அறிஞர்களில் பெரும்பாலானோர் ஒப்புகின்றனர்.

முதல் உயிரினத் தோற்றம்

உலகின் நடுப்பகுதியான குமரிக்கண்டம் உயிர்கள் வாழ ஏற்ற நிலையை அடைந்தது.

அக்கண்டத்தில் கார்பன் (கரியக்) கூட்டுப் பொருட்கள் மிகுதியாக 

இருந்ததால் அக்கடல் பகுதியில் உலகின் முதல் உயிரினமான நீலப் 

பச்சைப் பாசி தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.

இவை 2 கோடி ஆண்டுகளில் மாற்றம் அடைந்து நீர்வாழ் செடிகளாக மாறின. 

இவை கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை 

வெளியிட, கார்பன் டை ஆக்சைடின் குறையத் தொடங்கியது.

இந்த ஆக்சிஜன் (யுவி கதிர்கள்) எனப்படும் புற ஊதாக்கதிர்களால் 

தாக்கப்பட்டு ஓசோன் மண்டிலம் உருவானது.

இந்த ஓசோன் மண்டிலம்தான் இவ்வுலகைப் புற ஊதாக் கதிர்களிடமிருந்து காப்பாற்றி மேலும் பல வகைகயான உயிரினங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது.

உயிரினங்கள்

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்களும் தொடர்ந்து பாம்பு பல்லி போன்ற ஊர்வனவும் தோன்றின.

பெரும்பல்லி எனப்படும் டைனோசர் தோன்றி அதிலிருந்து பிரிந்து  பறவையினங்கள் தோன்றின.

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு விலங்குகளும் பாலூட்டி உயிரினங்களும் உருவாகின.

அதற்கு முன்னர் இருந்தவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் 

உயிரினங்கள்.

விலங்குகள் அனைத்தும் குட்டி போட்டுப் பால் கொடுப்பவை.

இத்தகைய விலங்குகள் 7 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகின.

இவ்வாறு 300-400 கோடி ஆண்டுகளில் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் 

பயனாக உலகில் ஏராளமான உயிர்கள் உருவாயின.

சான்றுகள்

படிமப்பாறை மரங்கள்  (Fosiles) 

புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருவக்கரை என்ற பழமையான ஊரில் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மரம் படிமப்பாறை மரங்களாக (Fosiles) உள்ளன.

பூக்காத தாவரங்கள் கூம்பிணி வகையைச் சேர்ந்த மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறைப் பகுதியில் அமைந்துள்ளது.

வெண் சுதைப்பாறை ஊழியில் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு கடலில் அமிழ்ந்து மணல், களிமண் ஆகியவற்றால் மூடப்பட்டு, காலப்போக்கில் கல் மரமாகிவிட்டது.

வரலாற்றின் நீண்ட பெருங்காலம்

வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதன் உடல் அளவிலும் மனதளவிலும் வேறு பல வகைகளிலும் படிப்படியாக மேம்பட்டுக் கொண்டிருந்த காலம் ஆகும்.

இந்தக் காலத்தை மனித வரலாற்றின் நீண்ட பெருங்காலமாகக் கொள்ளலாம்.

இக்காலத்தில்தான் உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.

உணவு திரட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், விளைவித்தல், விலங்குகளைப் பழக்குதல், என வரலாற்றுக்கு விளக்கமாக இருப்பது வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலமாகும்.

தொல்பழங்கால வரலாற்றை அறிவதற்கு எழுத்து வடிவச் சான்றுகள் இல்லை.

இருந்தாலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகக் கருவிகள், ஓவியங்கள்,எலும்புகள் முதலியவை சான்றாகக் கிடைத்துள்ளன.

இவற்றின் உதவியுடனும் பின்வந்த இலக்கியச் சான்றுகள், மொழி ஆய்வு, சமூகவியல் - மானிடவியல் ஆய்வு ஆகியவற்றின் துணையுடனும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம்.

தொல்பழந் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தைப் பின் வருமாறு பகுக்கலாம்.

1.பழைய கற்காலம் (கி.மு.5 இலட்சம் - 1 இலட்சம் ஆண்டுகள்)

2. புதிய கற்காலம் (கி.மு.1 லட்சம் - 30,000 ஆண்டுகள்)

3. பெருங்கற்காலம் (கி.மு . 30,000 -300) ஆண்டுகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்