எட்டாவது சீர் - வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமிழன்பன்
எட்டாவது சீர்
சுரங்கள் ஏழு , வானவில் நிறங்கள் ஏழு , நாட்கள் ஏழு ,திருக்குறளில் சீர்கள் ஏழு என
வரையறை இருப்பதால் எட்டவதாக ஏன் ஒன்று இல்லை
என்னும் கேள்வியே எட்டாவது சீர் என்னும் இக்கவிதை .
எட்டாவது சீர்
ஏழாவது சுரம்
ஏழாவது
சுரம்
கதவை
இழுத்து மூடியதால்
எட்டாவது
சுரம்
ஏமாந்து
திரும்பியிருக்கலாம்
ஆனால்
இசை தேவதை
ஆலாபனை
நிறுத்திவிட்டுக்
கதவைத்
திறக்க ஓடியிருக்க மாட்டாளா?
பொருள்
சுரங்கள் மொத்தம் ஏழு . ஏழாவது சுரத்தோடு கதவை இழுத்து மூடியது ஏன். அவ்வாறு மூடும் போது தானும் இணைய வேண்டும் என்று
விரும்பிய எட்டாவது சுரம் ஏமாந்து திரும்பியிருக்கும். அதைக் கண்ட இசை தேவதை தன்னுடைய
பாடலை நிறுத்தி விட்டு கதவைத் திறக்க ஓடியிருப்பாள்.
ஏழு வண்ண
வில் எழுதி
வைத்திருக்கலாம் வாசலில்
'எட்டாவது
வண்ணத்திற்கு
இங்கு
இடம் இல்லை!'
அதற்காக
உறங்க
முடியாத வானம்
நிறங்கள்
நீங்கிய இரவுப் படுக்கையில்
வருந்தி
அழுதிருக்காதா?
பொருள்
வானவில்லின் நிறங்கள் ஏழு . வானவில்லில் ஏழு நிறங்கள் தான் எட்டாவது நிறத்திற்கு
இங்கு இடமில்லை என்று எழுதியிருப்பதைப் பார்த்து எட்டாவது நிறம் மனம் வருந்திச் சென்றிருக்கலாம்.
இப்படி மனம் வருந்தி சென்ற எட்டாவது நிறத்தைப் பார்த்து வானம் தன்னுடைய இரவு என்னும் படுக்கையில் படுத்து
அழுதிருக்கும் .
வாரத்திற்குள்
வந்துவிடத் துடித்த
எட்டாவது கிழமை
ஞாயிறு
அந்தியில் தீக்குளித்திருக்கலாம்
அதனால்
மாதத்தின்
மார்பு துடித்து
வெடித்திருக்காதா?
பொருள்
வாரத்தில் நாட்கள் ஏழு. எட்டாவதாக ஏன்
இல்லை ஒருநாள் . அப்படி மனம் வருந்திப் போன எட்டாவது நாள் சூரியனின் ஒளியில் தீக் குளித்து
இறந்து போய் இருக்கும். அதனைக் கண்ட மாதத்தின் நெஞ்சு துடித்து வெடித்து இருக்கும்.
வள்ளுவ!
எட்டாவது
சீர்
உன்னைத்
தேடி வந்தபோது
என்ன
செய்தாய்?
‘போடுவதற்கு ஒன்றுமில்லை
போ’ என்று
வாசல்
யாசகனை
வீடுகளில்
விரட்டுவதுபோல்
விரட்டி
விட்டாயா?
பொருள்
இப்போது அவர் வள்ளுவரைப் பார்த்து உனக்கு
ஏன்
எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? என்று கேட்கிறார் . எட்டாவது சீர்
உன்னைத் தேடி வந்தபோது வீட்டிற்கு வந்து இல்லை
என்று பொருள் கேட்பவர்களை விரட்டி அடிப்பது போல விரட்டி விட்டாயா என்கிறார் .
எட்டாவது
சீர்
ஏன்
உனக்குத் தேவைப்படவில்லை?
யாப்பு
கூப்பிட்டு மிரட்டியதால்
ஏற்பட்ட
அச்சமா?
ஏழு
சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா?- ஈற்று
முச்சீரடியில்
உனக்கும் மூச்சு முட்டியதா?
‘காசும்’ ‘பிறப்பும்’
உன்முன்
வந்து கண்களைக்
கசக்கினவா?
‘நாளும்’ ‘மலரும்’ நச்சரித்தனவா?
இல்லை,
எட்டாவது
சீர்தான்
அடுத்த
குறளின் முதற் சீரா?
பொருள்
எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை?
யாப்பு கூப்பிட்டு மிரட்டியதா. அதனால் ஏற்பட்ட அச்சமா?
ஏழு சீர்களிலேயே உன்னுடைய அறிவு ஒளி தீர்ந்து போனதா?.
கடைசி அடியில் உனக்கும் மூச்சு முட்டியதா என்று கேட்கிறார்.
‘காசும்’ ‘பிறப்பும்’ ‘நாளும்’ ‘மலரும்’ நச்சரித்தா . கண்ணைக்
கசக்கிக்
கொண்டு வந்து உன் முன் நின்றதா என்கிறார் . இல்லை,
எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீரா என்கிறார் .
அப்படியே
ஆனாலும்
கடைசிக்
குறளின் காலடியே
எட்டாவது
சீர் ஒன்று
தோளில்
என்னைத் தூக்கிக்கொள்
என்று
கெஞ்சியிருக்குமே!
கடலின்
கடைசி
அலையின்
தாகத்தைத்
தணிப்பது என்வேலை
இல்லை
என்கிறாயா?
சிந்தனைகளை
எண்ணியவனே நீ
சீர்களை
எண்ணவில்லையோ?
பொருள்
கடைசிக் குறளின் எட்டாவது சீர் காலைக் கட்டிக்கொண்டு
அழுதிருக்குமே . என்னைத் தூக்கிக் கொள் என்று கெஞ்சி இருக்குமே . ஆனாலும் அது உன்
வேலை இல்லை என்று சொல்கிறாயா, விலகிக் கொண்டாயா என்று கேட்கிறார். நீ எண்ணங்களை எண்ணிய
அளவிற்கு சீர்களில் கவனம் செலுத்த வில்லையா என்கிறார் .
உனக்கு
எண்ணங்களே
முக்கியம்
எங்களுக்கோ
எண்ணிக்கையே
முக்கியம்.
ஏழு
சீர்களில்
சொன்னதே
எதற்கு என்று
எண்ணிக்
கொண்டிருக்கிறேன்...
ஏன்
எட்டாவது
சீர்க் கவலை உங்களுக்கு
என்கிறாயா?
போதைப் ‘பொருளுக்கு’
அறத்தையும்
இன்பத்தையும்
அவசரமாய்
அடகு வைப்பவர்கள்
நாங்கள்
அப்படித்தான் இருப்போம்
பொருள்
வள்ளுவனே உனக்கு எண்ணம் முக்கியம் . ஆனால் எங்களுக்கு எண்ணிக்கை தான் முக்கியம்
. ஏழு சீர்களே எங்களுக்கு அதிகம் என்று நீ நினைக்கலாம் . எட்டாவது சீர் பற்றி நீங்கள்
ஏ ன் கவலைப் படுகிறீர்கள் என்று வள்ளுவனே நீ எங்களைப் பார்த்து கேட்பது புரிகிறது.
ஆனால் நாங்கள் போதைக்கு அரத்தையும் இன்பத்தையும் விற்பவர்கள் அடகு வைப்பவர்கள். அப்படித்தான்
இருப்போம் என்கிறார் .
வீடு
தேடுகிற
வெறியில்
அறம்
பொருள் இன்பத்தை
மிதித்துக்
கொண்டு
ஒடுகிறவர்கள்
நாங்கள்
அப்படித்தான்
இருப்போம்
பொருள்
வீடு தேடுகிற வேகத்தில் நாங்கள் அறம் பொருள்
இன்பத்தி மிதித்து விட்டு ஒடுபவர்கள் நாங்கள் அப்படித்தான் இருப்போம் .
இலக்கணக்காரன்
இப்போது
எப்படி ஏங்குகிறான்
தெரியுமா?
‘எட்டாவது சீருக்கு இடம்
தந்திருந்தால் இன்னும் ஏதேனும் சொல்லியிருப்பாயே!’
பொருள்
எட்டாவது சீர் என்று ஒன்று இருந்திருந்தால்
நீ இன்னும் ஏதாவது சொல்லி இருக்க வாய்ப்பு இருந்திருக்குமே என்று இலக்கணக் காரர்கள்
ஏங்குகிறார்கள் .
‘வாய்ப்புள்ளவன்
அந்த ஒரு
சீரில் சிந்தித்து
வரிகளைச்
சமப்படுத்தட்டும்
என
நான்தான்
விட்டு
வைத்திருக்கிறேன்’ என்கிறாயா?
என்னோடு
நிறைவடைந்து விடவில்லை...
சிந்திக்க
இடம் இன்னும் உண்டு என்பதைக்
கோடிட்டு
காட்டுகிறாயா?
பொருள்
நாங்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்றும் வாய்ப்புள்ள யார்
வேண்டுமானாலும் எட்டாவது சீரை உருவாக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கிறாயா என்று
கேட்கிறார் .
உண்மையின்
உள்ளத்திலிருந்து
பேசுபவர்
எவரோ
அவரே – நீ
எழுதாது
விட்ட எட்டாவது சீரா?
ஆனால்
வள்ளுவ!
எட்டாவது சீர்கள் எல்லாம்
இப்போது உன் சிலை
முன்
உண்ணாவிரதம் இருக்கின்றன
என்ன
கோரிக்கை தெரியுமா?
திரும்பவும்
நீ வந்து இன்னொரு திருக்குறள்
எழுதும்போது
ஏழு
சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!
பொருள்
மனதில் உண்மை உள்ளவர்கள் , அதையே பேசுபவர்கள் எழுதட்டும்
என்று விட்டு விட்டாயா என்று கூறுகிறார் . வள்ளுவனே எட்டாவது சீர்கள் எல்லாம் இப்போது உன் சிலை
முன் உண்ணா விரதம் இருக்கின்றன நீ மறுபடியும் வந்து எழுதும் போது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார் .
கருத்துகள்
கருத்துரையிடுக