தமிழ் இணையக் கல்விக்கழகம்- tvu library

 

                                      தமிழ் இணையக் கல்விக்கழகம்

17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்று தொடக்கக் காலத்தில் அழைக்கப்பட்டது.

இந்தியாவில் இணையவழியில்  கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய அளவில் வழங்க  நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார்.

கல்வித்திட்டம்

கல்வித்திட்டத்தின் கீழ் 1. அடிப்படை 2. இடைநிலை 3. உயர்நிலை சான்றிதழ்க் 

கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது.

தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ் முதுகலைப் 

பட்டமும் வழங்கப்படுகிறது.

நூலகம்

நூலகம் எனும் பகுதி நூல்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக்

காட்சியகம், தமிழிணையம்-மின்னூலகம் என 4 பிரிவாக உள்ளது.

 

நூலகம் எனும் பிரிவில் எண்சுவடி முதல் சிறுவர் இலக்கியம் 

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்,  அகராதிகள் 

நிகண்டுகள் , கலைச்சொல் தொகுப்புகள், உரோமன் எழுத்து வடிவிலான 

சங்க இலக்கியம் போன்றவை உள்ளன.

சுவடிக் காட்சியகம்

மின்னுருவாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைக் காணலாம்.

பண்பாட்டுக் காட்சியகம்

தமிழ் நாடு , தமிழ் நாட்டின் திருத்தலங்கள், திருவிழாக்கள் , வரலாற்றுச் 

சின்னங்கள்,  கலைகள், விளையாட்டுகள், திருக்கோவில் சாலை 

வரைப்படங்கள் உள்ளன.

தமிழிணையம்-மின்னூலகம்

இணையத்தளத்துடன் செயல்படுகிறது.

மின் நூலகம்

இந்த மின் நூலகம் அரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள் 

ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், சுவடிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.  

இம்மின்னூலகம் 2015–16 ஆண்டிற்கான தமிழ்நாடு புதுமை முயற்சி 

திட்டத்தின் (Tamil Nadu Innovation Initiatives – TANII) கீழ் ₹100 கோடியில் 

தொடங்கப்பட்டது.

கணினித்தமிழ் வளர்ச்சி

கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும்

இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு

மேற்பார்வையிட்டு வருகிறது. 

கணித்தமிழ்ப் பேரவை

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் 

பேரவை ஆகும் .

தகவலாற்றுப்படை

தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்களின் புகைப்படத்துடன் கூடிய 

மேலதிக ஆவணங்கள் இத்தளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் 

செய்யப்படுகின்றன. இத்தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் 

உள்ளது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்