மின் நூலகங்கள் - (Digital Library)
மின் நூலகங்கள் - (Digital Library)
மின் நூலகங்கள் பல வகைப்படுகின்றன .
நூலகங்களுக்கு நிகராக
விளங்கக் கூடிய இவை கல்வியாளர்கள், மாணவர்கள்
மத்தியில்
பெரும் வரவேறப்பைப் பெற்றுள்ளது.
மின்-நூலகங்கள் (electronic library)
மின்நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் சேமித்துப்
பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின் நூல்கள், படங்கள். ஆவணங்கள்
முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழி
அணுகக்கூடிய நூலகம் ஆகும். இந்நூலகத்தில் சேமித்து, மேலாண்மை
செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணிம உள்ளடக்கங்களை (Digital
content) கணினி இணையம் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும்
எந்தவொரு இணையவழி சாதனத்தின் மூலமும் அணுகிப் பெறமுடியும்.
மின் -
நூலகம் வேறு பெயர்கள்
மின்நூலகம் ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் (information retrieval
system) ஆகும். மின் நூலகம், மெய்நிகர் நூலகம் (virtual library)
எண்ணிம நூலகம் (digital library) போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகின்றது.
மின்நூலகம் என்றால் என்ன
மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து,
மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு
அத்தகவல்களைத் தேவைப்படும் போது தேவையான அளவில்
எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் அமைப்புக்கு மின்- நூலகம் என்று பெயர்.
மின்நூலகங்கள் சில
தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் மின் நூலகம் (Tamil Virtual University E -
Library)
சென்னை மின்
நூலகம் (Chinnai Library)
நூலகம் . நெட் . (Noolaham.net)
ஓபன் ரீடிங் ரூம்
மின்னூலகத்தின்
நன்மைகள்
கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் வருகையால் மின் நூலகங்கள் இயங்குகின்றன.
நூல்களைத் தேடி இனி எந்த நூலகங்களுக்கும் பெரும் பொருட்செலவு, காலச்செலவு செய்யத்
தேவையில்லை.
நாம் இருந்த இடத்திலிருடந்தே கையில் உள்ள திறன்பேசி, பலகை
கணினி அல்லது பிறவகைக் கணினிகளின் வாயிலாக
இணையத்தின் துணைகொண்டு மின்-நூலகங்களை அணுகி
நூல்களை வாசிக்கலாம்.
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
அச்சிட்டுக் கொள்ளலாம்.
தமிழ்
இணையக் கல்விக் குழுமம்: (http://tamilvu.org)
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இணையப்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும்
உலகத் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும்
அமைந்துள்ளது.
இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள்
என்னும் 3 பிரிவுகள் உள்ளன. சங்க கால நூல்களிலிருந்து சமகால
இலக்கியம் வரை பற்பல பிரிவுகளில் காணப்படுகிறது.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai)என்பது தமிழ்
இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் உலகளாவிய
முயற்சியாகும்.
1997 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து
இயங்கி வருகின்றது.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க , தனியார் நிறுவன உதவியின்றி,
வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ
முயற்சியாகும்.
உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட
தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி
வருகின்றனர், மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின்
மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை,
திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப்
பதிவுகள், பாரதியார், வைரமுத்து கவிதைகள், படைப்புகள், உரைநூல்கள்
சுமார்
350லிருந்து 450 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை மின் நூலகம் (http://www.chennailibrary.com)
திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான
நூலகம் சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும்
நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் (Gowtham Web
Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும்.
இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்குத் தரவேற்றம்
செய்யப்பட்டுள்ள நூல்களை PDF கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து
கொள்ளும் வசதியும், கௌதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும்
நூல்களை 20% சலுகை விலையில்
பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றன.
நூலகம் (http://www.noolaham.org)
நூலகம் திட்டம் என்பது ஈழத்துத் தமிழ் நூல்களையும் எழுத்து
ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பாதுகாத்து
வைப்பதற்கான தன்னார்வ முயற்சியாகும். இத்திட்டத்தில் பங்களிக்க
விரும்பும் எவரும், எந்த நூலையும் மின்னூலாக்கம் செய்யலாம்.
மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப்
பட்டதாக இருக்க வேண்டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம்
ஈழத்து நூல்கள் உள்ளன
இணையத் தமிழ்
ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான
பத்திரிகைகள் கிடைக்கின்றன. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள்
தி.கோபிநாத், மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-இல் தொடங்கி இடையே
சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை புதுப்பொலிவுடன்
பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது..
தமிழ் ஹெரிடேஜ் (http://www.tamilheritage.org/)
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்
2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது.
இதன் நோக்கம் உலகில் இருக்கும் ஒலைச்சுவடிகள், பழைய நூல்களை
நகல் எடுத்து இணைத்தில் மின் பதிப்பாக வெளியிடுவது ஆகும்.
ஓபன் ரீடிங் ரூம்
மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும் ஓர் இணையதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும்.
இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை,
வகைவகையான மின்னூல் கோப்புகள் பட்டியலிடப் பட்டுள்ளன.
சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம்
தமிழிலக்கியங்கள் அங்கே வாசிக்கக் கிடைக்கின்றன.
பிரபல தமிழ்க் கவிஞர்களின் பட்டியலும் நீள்கிறது.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், காப்புரிமையுள்ள நூல்கள் எனத்
தொடரும்.
புத்தகத்தின் பக்கங்களை அடுத்தடுத்துத் திருப்பி வாசிப்பதைப்போல,
ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வாசிக்க முடியும். இத் தளத்தில் 2,300 படைப்புகள்
வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழரும் மூத்த
பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி இத் தளத்தை நடத்தி வருகிறார்.
'இலவச இணைய நூலகம்' என்றே இதனை அவர் குறிப்பிடுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக