உரை நூல்களில் அறிவியல்
உரை நூல்களில் அறிவியல்
வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா எனப் பல பாக்கள் வடிவில் எழுதப்பட்ட இலக்கண இலக்கியப் பாடல்களுக்கு
விளக்கம் எழுதிய சான்றோர்களை உரையாசிரியர்கள் என்று கூறுவோம் .
உரை ஆசிரியர்கள்
நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், மயிலைநாதர், அடியார்க்கு நல்லார். பரிமேலழகர் உள்ளிட்ட பல சான்றோர்கள் இவ்வரிசையில் இடம்பெறுவார். இவர்கள் பழந்தமிழரின் இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளனர்.
நச்சினார்க்கினியர் உரையில் அறிவியல்
இலக்கியங்களில் காணப்படுகின்ற நாள்மீன்கள், கோள்மீன்கள் பற்றி இவர் தந்துள்ள விளக்கங்கள் சிறப்பானவை. கலித்தொகையில் மதி மகளிருக்கும், நாள்மீன் எனப்படும் விண்மீன்கள் மகளிர் கூட்டத்திற்கும் உவமையாகக் கூறியுள்ளார்.
இதனால் இவர் வானியல் அறிவு கொண்டவர் எனப் அறியப்படுகின்றது.
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்
ஒரு பெண்ணின் வயிற்றில் கரு எப்போது தோன்றி உருவாகி வளர்ந்து உலகிற்கு வரும் என்பது பற்றி இவ்விருவரும் கூறியுள்ளனர்.
பூப்பின்
புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உரையார் என்மனார் புலவர் (தொல்.பொருள்.185)
என்ற பாடல் வழி தலைவன் பரத்தையின் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்திருந்தாலும் கூட தலைவிக்குப் பூப்பு நேரும் போது தலைவன் தன் வீட்டிற்கு வந்து விட வேண்டும். பன்னிரண்டு நாட்கள் தலைவியை விட்டுப் பிரியாமல் அவளுடன் வாழ வேண்டும். இதனால் என்ன பயன் என்ற வினாவிற்கு இளம்பூரணர், “பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்று நாள் கழிந்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று . இதனாற் பயன் என்னையின் அது கருத்தோன்றும் காலம் என்க” என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இந்த விளக்கத்தை உடற்கூற்று அடிப்படையில் உரை விளக்கம் செய்கின்றார் நச்சினார்க்கினியர்.
தொல்காப்பியர் பிறப்பியலில் "உந்தி முதலா முந்து வளி" என்று கூறியுள்ளதற்கு, உடற்கூற்றியலார் போல உரை கூறியுள்ளார் நச்சினார்க்கினியர்.
அதாவது உடல் அவரவர் கையால் எண்சாண்.
அதனில் இடையில் உள்ள பகுதி கொப்பூழ்ப் பகுதி. அங்கிருந்து உந்தப்படும் காற்று என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு காற்று எழுவதால் 'எழுத்து' என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் உரையாசிரியர்களுக்கு இருந்த அறிவியல் அறிவு புலப்படுகின்றது
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப்
பாம்புகொண் டற்று (குறள்.1146)
என்னும் குறளில், தலைவன் தலைவியின் களவு ஒழுக்கத்தை ஊரார் அலர் பேசும் நிகழ்வைக் கூறும் இடத்தில் வானத்து நிலவைப் பாம்பு விழுங்குவதோடு ஒப்பிடுகின்றார். இதற்குப் பரிமேலழகர், "கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு ஞான்றே. அதாவது சந்திர கிரகணத்தைக் கூறுகிறார்.
பேராசிரியர் உரையில் அறிவியல்
தொல்காப்பியர் மரபியலில் உயிரினங்களின் பகுப்புப் பற்றி விவரித்துள்ளார்.
ஒன்றறிவதுவே
உற்றறிவதுவே
இரண்டறி வதுவே
அதனொடு நாவே
மூன்றறி வதுவே
அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே
அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே
அவற்றொடு செவியே
ஆறறி வதுவே
அவற்றொடு மன்னே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினவே (தொல்.பொருள். 582)
என்ற நூற்பாவில் ஒன்று முதல் ஆறு அறிவுடைய உயிரிகளின் வகைகளை தொல்காப்பியர் விளக்குகின்றார். இதனைப் பேராசிரியர்?மிகத் தெளிவாக விளக்கிறார். ஆற்றிவுடையது அவற்றொடு மன உணர்வு உடையது எனவும், அம்முறையானே நுண்ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் என்றவாறு" என்று உரை தருகின்றார். இதனால் பேராசிரியரின் உயிரியல் அறிவு வெளிப்படுகின்றது.
சேனாவரையர் உரையில் அறிவியல்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சேனாவரையர், பயிர் செழித்து
வளர்வதற்கான வழிமுறைகளைத் தம் உரையில் விவரித்துள்ளார்.
எருப்பெய்து
இளங்களை கட்டு
நீர்க்கால் யாத்தமையின் பைங்கூழ் நல்லவாயின(தொல்.சொல்)
என்ற நூற்பாவில், பயிர் செழித்து வளர உரம் இட வேண்டும். களை எடுக்க வேண்டும். நீர்க்கால் யாத்தல் என்னும் படிநிலைச் செயல்பாடுகள் வேண்டும் என்னும் வேளாண் அறிவியல் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றார்.
உ.வே.சாமிநாய்யர் உரையில் அறிவியல்
குறுந்தொகைக்கு உரை எழுதியவர் தமிழ் தாத்தா உ.வே.சா
முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர்
போல (குறுந்தொகை 287)
என்ற பாடலில், “மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு.. வயா
நோயுடையோர் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்பு” என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதனால் உடல்
அறிவியல் பற்றிய அறிவு உரையாசிரியர்களுக்கு உண்டு என்பது புலனாகின்றது.
மாதவச் சிவஞான முனிவர்.
நூலான நன்னூலுக்கு மாதவச் சிவஞான முனிவர் விருத்தியுரை எழுதியுள்ளார்.
அதில் நிலமும் பொழுதும் எல்லாச் செயல்களுக்கும் முதன்மையானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்று இயற்பியல் அறிவுடன் ஆழ்ந்து சிந்தித்து, அதன் அடிப்படைகளைக் குறிப்பிடுவதாக உள்ளது.
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
வானத்தில் எத்தனையோ அண்டங்கள் சுற்றிக் கொண்டுள்ளன.
சூரியன்களும் அவற்றின் குடும்பங்களைச் சேர்ந்த கோள்களும் அண்டங்களின் வெட்டவெளியில் சுற்றிக் கொண்டுள்ளன.
இதைப் போலவே எத்தனையோ சூரியன்கள் விண்மீன்களாக வானவெளியில் சுற்றிக் கொண்டுள்ளன.இதனை ஞாலத்திகிரி என்கிறார்.
ஞாலத்திகிரி, முதுநீர்த் திகிரி முதலியவற்றைச் சுற்றச் செய்யும் மூலத் திகிரி எது வென்றால் காலம் என்ற கண்ணுக்குத் தெரியாத திகிரி என பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக