தொல்காப்பியப் பூங்கா – எழுத்து முதல் நூற்பா
தொல்காப்பியப் பூங்கா – எழுத்து முதல் நூற்பா
முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)
தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர்(1969, 1971, 1989, 1996, 2006).
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம்
அளித்தார்.
இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
வரலாற்றுப் புனைவுகள்
- ரோமாபுரி பாண்டியன் 1974
- தென்பாண்டிச்
சிங்கம் 1983
- பாயும்புலி பண்டாரக வன்னியன் 1991
- பொன்னர் சங்கர் 1988
புதினங்கள்
- இரத்தக்கண்ணீர்,
- ஒரே ரத்தம்,
- சுருளிமலை
- புதையல்,
- வான்கோழி,
- வெள்ளிக்கிழமை,
முதல் நூற்பாவை எழுதத் தொடங்கும் போது தொல்காப்பியரின் மனநிலை பற்றியும் எழுத்துக்களின்
நிலை பற்றியும் கலைஞர் தன் கற்பனையை வெளிபடுத்தியுள்ளார்.
தொல்காப்பியரின் யோசனை
இமைகள் மூடி நெடுநேரம் யோசனை செய்தார் தொல்காப்பியர். பின் முதல் நூற்பாவை எழுதத்
தொடங்கினார். எல்லா
மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதாலும் இஃது எழுத்ததிகாரம் என்பதாலும் முதல்
நூற்பா எழுத்து எனத் தொடங்குகிறது. தொல்காப்பியரைப் பின்பற்றித்தான் வள்ளுவரும் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருக்குறளை
எழுத்திலேயே தொடங்கியிருக்கிறார்.
முப்பது
எழுத்து
தமிழ் மொழியில் உள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களை ஆராய்ந்து பார்த்தால், அவையனைத்தும் முப்பது எழுத்தொலியில் அடங்கிவிடும்.
இது தொல்காப்பியக்
காலத்திற்கு முன்பே வழி வழியாக வந்த ஒன்றாகும்.
வீறுநடை
தொல்காப்பியரின் அந்தக் சிந்தனையில் ஒலியெழுப்பியவாறு எழுத்துகள் அணிவகுத்து வீறுநடை போட்டு வந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு முதலெழுத்தும் அவர் முன் நடந்து வந்தது . பின் வணக்கம் தெரிவித்து விட்டு வரிசையில் நின்றன.
முன்வரிசை
உயிர் எழுத்துக்களான
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
என ஒரு முன் வரிசை
அமைந்தது.
பின் வரிசை
பின் வரிசையில் க்,
ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ்,
ள், ற், ன் ஆகிய மெய்
எழுத்துகள் அணி வகுத்தன.
சுவர் ஓரம்
அப்போது சுவர் ஓரமாக ஒரு நிழல் தென்பட்டது. அதைத் தொடர்ந்து இன்னொரு நிழலும்
தென்பட்டது. அந்த இரு நிழல்கள் எழுப்பிய ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால், அந்த
வேறுபாட்டை உணர்ந்த தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.
ஒரு நிழல்; என்
பெயர் ‘இ’கரம் என்றது!
இன்னொரு நிழல்; என்
பெயர் ‘உ’கரம் என்றது!
தொல்காப்பியர் பதில்
அந்த நிழல்களைப் பார்த்து: “நீங்கள் குற்றியலிகரம் -குற்றியலுகரம் என்ற வரிசையில்தான் இடம் பெறுவீர்கள்.
உங்களை முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் வைக்க முடியாது” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
கையில்
கம்பு
அப்போது கையில் ஒரு
கம்புடன் ஒரு புதுமையான எழுத்துருவம்
அங்கே தோன்றி “இந்த
முப்பதோடு என்னை இணைக்க
ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது.
ஆயதம் ஏந்திய ஆய்த எழுத்து
தொல்காப்பியர் “என்ன; என்னை
மிரட்டுகிறாயா? நீ ஆயுத ஏந்தி
என்றார்.
அடக்கம்
அவரது கோபத்தைக் கண்ட ஆய்த எழுத்து; “அய்யனே! என்னைத்
தங்கள் விருப்பம்போல் அமர வைக்கலாம். முதல் எழுத்து வரிசையில் எனக்கு
இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்!” என்று அடக்கமாகக் கூறியது.
வேடிக்கை
தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே, எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை
எழுதி முடித்துவிட்டு; “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்கிறாய்; நல்ல
வேடிக்கை!” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார்.
ஆய்த எழுத்தின் மகிழ்ச்சி
“ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே
எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே; என் திறமையைப் பார்த்தீர்களா?” என்று ஆய்த
எழுத்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர்; அவர் எழுதியதைத்
திரும்பப் படித்துப் பார்த்தார்.
“எழுத்தெனப் படுப அகர முதல் னகர
விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே”.
"முப்பஃ
தென்ப" என்னும் தொடரில் ஆய்த எழுத்து வந்து அமர்ந்து
கொண்டதை அவரும்
வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி
கொண்டார்.
தமிழ் எழுத்துகள் ‘அ’ முதல் ‘ன’ இறுதியாக முப்பது எழுத்துகள்
எனக் கூறுவர்;
சார்பு எழுத்துக்களான குறுகிய ஒலியுடைய ‘இ’கரம்,
குறுகிய ஒலியுடைய ‘உ’கரம், ஆய்த எழுத்து ஆகிய மூன்றும்
இல்லாமல் முப்பது
எழுத்துகள்.
“அவை தாம் குற்று இயல் இகரம், குற்று
இயல் உகரம், ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன”
கருத்துகள்
கருத்துரையிடுக