பழந்தமிழர் நிலவியல் - நிலவியல்

                                                          பழந்தமிழர் நிலவியல் 

நிலம்

‘‘நிலம் என்பதற்கு இடம், தலம், நானிலத்தின் பொது தேசம் பூமி’’ எனும் பல 

பொருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி’’  குறிப்பிடுகிறது.

நிலப் பாகுபாடு

பழந்தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களாகப் பாகுபடுத்தினர். 

நில அமைப்புகளைக் கொண்டே அவற்றிற்குக் குறிஞ்சி முல்லை மருதம் 

நெய்தல் பாலை எனப்  பெயரிட்டனர். தமிழர்களின் நிலவியல் பாகுபாடு 

குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

நானிலம்

‘‘நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நால்வகைப்பட்ட 

நிலமுடையது’’ என்று நானிலம் என்பது குறித்து அறிஞர்கள் 

விளக்குகின்றனர்.  எனவே தமிழகம் நான்கு நிலப் பாகுபாட்டினைக் 

கொண்டு இருந்தமையால் ‘நானிலம்’ என்றே வழங்கப்பட்டது.

‘‘நாவ நழீஇயவிந் நானிலந் துஞ்சும்’’

(திருக்கோவையார் பாடல் எண் 191.)

என்னும் திருக்கோவையார் அடியும் இதற்குச் சான்று பகர்கிறது.

தொல்காப்பியர் இந்நிலப்பாகுபாட்டினை ‘‘மாயோன் மேய’’ (அகத். நூற்பா,5) 

என்ற நூற்பாவில் வரையறுத்துக் கூறியுள்ளார்;. அவரைப் பின்பற்றியே 

தமிழகத்தை நானிலமாகப் பகுத்து நானிலம் என்று அழைத்தனர்.

கல் தோற்றம்

பூமியில் முதன் முதலில் மலைகள் தோன்றின. அதன் பின்னரே ஏனைய 

பகுதிகள் தோன்றின எனலாம். ஐயனாரிதனார் என்னும் புலவர்.  

(புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைப் படலம் நூற்பா 14)

‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்த குடி’’

என்று கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது .

இக்கருத்து குறிஞ்சி நிலமே பூமியில் தோன்றிய முதல் நிலம் என்பதைத் 

தெளிவாகப் புலப்படுத்துகிறது.

எல்லைகள்

உயர்ந்த இமயமலையினை வட எல்லையாகவும், குமரியாற்றினை தென் 

எல்லையாகவும், கிழக்கிலும்  மேற்கிலும்  கடல்களாகவும் நாட்டின் 

எல்லைகளை வரையறை செய்திருந்தனர் எனபதை இலக்கியங்கள் 

குறிப்பிடுகின்றன.தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை 

குன்று மலை காடுநாடு ஒன்றுப்பட்டு வழிமொழிய (புறம்.17:1-4) என்ற 

குறுங்கோழியூர் கிழாரின் அடிகள் காட்டுகின்றன.

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறம். 168:18), தண்டமிழ் வேலித் 

தமிழ்நாட்டகம் (பரி. 8:1 ) வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் 

கூறும் நல்  உலகம் என்கிறது தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது .  

தமிழ் மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைகளாகக் கிழக்கு, மேற்குக் 

கடல்களைச் சுட்டுவர். 

பரிபாடலில் பேரண்டத் தோற்றம் 

பரிபாடலின் இரண்டாவது பாடலின் முதலில் பதினைந்து அடிகள் 

பேரண்டம் மற்றும் உலகத் தோற்றத்தை மிக விரிவாக விவரிக்கின்றன. 

பாடலின் முதலிரு அடிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை இருப்பினும்  

பரிமேலழகர் உரையால் பொருளைப் புரிந்து கொள்ளமுடியும்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்