பாரதியார் -கண்ணன் என சேவகன்-பொருள்
பாரதியார் -கண்ணன் என சேவகன்
இயற்பெயர் சுப்பிரமணியம். ஊர் எட்டயபுரம் . பெற்றோர் சின்னசாமி
ஐயர், இலட்சுமி அம்மாள்
காலம் 11.12.1882-11.09.1921
(39 ஆண்டுகள்)
பாரதியார் – புனைப் பெயர்கள்
சாவித்திரி,ஓர் உத்தம தேசாபிமானி,
ஷெல்லிதாசன், புதுக் கவிதையின்
முன்னோடி , பைந்தமிழ்த்
தேர்பாகன்(பாவேந்தர்) ,சிந்துக்குத்
தந்தை,
செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த
அறிஞர், மறம்
பாட வந்த
மறவன் (பாவேந்தர்) , நீடு துயில் நீக்கப்
பாடிவந்த நிலா(பாவேந்தர்)
நூல்கள் :
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு,
பாஞ்சாலி சபதம் .இமூன்றும் முப்பெரும்
படைப்புகள் என்று அழைக்கப்படும்.
கண்ணன் என சேவகன்
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர
வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...
5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க
வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ...
10
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான்
காத்திடுவேன் ... 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் ங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்;
ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ...
30
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
... 50
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல
சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர்,
சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை,
சிவ யோகம், ... 60
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே
வேலைக்காரர்களால் ஏற்படும் சிரமங்கள்
கூலிமிகக் கேட்பார்கள்.
கொடுத்ததெலாம் மறந்துவிடுவார்கள்.
வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலே தங்கிடுவார்கள்.
ஏனடா, நீ நேற்று வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் பானையில் இருந்த தேள் பல்லால் கடித்து விட்டது என்பார்கள். பெண்டாட்டிக்கு பூதம் பிடித்து விட்டது என்று கூறுவார்கள். பாட்டி செத்து இன்றைக்கு பன்னிரண்டாம் நாள்
என்பார்கள். ஓயாமல் எப்போதும் பொய் சொல்லுவார்கள்
. நாம் ஒரு வேலையைச் சொன்னால் அவர்கள் வேறு வேலை செய்வார்கள்
. மற்ற வேலைக்காரர்களோடு தனியே நின்று பேசுவார்கள்.
நாம் வீட்டுச் செய்தியை எல்லாம் வெளியில் சென்று சொல்லிவிடுவார்கள்
. எள் வீட்டில் இல்லை என்றால் கூட அதை முரசு அடித்து எங்கும் சொல்லுவார்கள். இவ்வாறு
சேவகரால் பட்ட சிரமங்களைக் கூறுகிறார் . ஆனால் இவர்கள் இல்லை என்றாலும் மிகுந்த துன்பம்
உண்டாகிறது, வேலை ஏதும் நடக்கவில்லை என்கிறார்.
புதிதாக வந்த சேவகனின் பண்புகள் :
எங்கிருந்தோ புதிதாக வந்த சேவகன் இடைச்சாதி
நான் என்று கூறினான் . மாடுகன்று மேய்த்திடுவேன்,
வீட்டில் உள்ளவர்களை நன்றாக பாதுகாவல் செய்வேன் என்றான் . வீட்டைப் பெருக்கி விளக்கேற்றி வைப்பேன் என்றான். வீட்டின்
உரிமையாளர் சொன்னபடி கேட்பேன் என்றேன் . துணிமணிகளை காத்திடுவேன் என்றான் .
சின்னக் குழந்தைக்களுக்கு அழகாகப்
பாடல் பாடி பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாமால் பார்த்துக்
கொள்வேன் என்றான்
.
காட்டுவழியாக இருந்தாலும் அங்கே
திருடர்களால் ஏதேனும் துன்பம்
வந்தாலும் இரவு பகல் எந்த நேரம்
ஆனாலும் நான் உங்களுடன் வருவேன்.
எந்தச் சிரமத்தையும் நான் எண்ண
மாட்டேன் என்றான் . உங்களுக்கு எந்த வித் துன்பமும் இலாமல் உங்களை நான் காப்பற்றுவேன்
என்றான் .
கற்ற வித்தை
நான் எந்த வித்தைகளும் கற்றுக் கொள்ள வில்லை . கல்வி அறிவில்லாத காட்டு மனிதன் . ஆனாலும் கோலடி, குத்துப்போர், மற்போர் போன்றவைகளை அறிந்தவன் என்று கூறினான் . உங்களுக்கு வஞ்சனை செய்யும் விதமாக நடந்து கொள்ளமாட்டேன் என்று பலவற்றைச் சொல்லி நின்றான்.
பெயர் என்ன என்று வினவுதல்
பெயர் என்ன என்று கேட்டவரிடம் பெயர் என்று தனக்கு
ஒன்றும் இல்லை . ஆனால் ஊரிலுள்ளோர் கண்ணன் என்று அழைப்பார்கள் என்றான்.
சேவகனின் தோற்றம்
நல்ல உறுதி உள்ளவுடல். கண்களிலே நல்லகுணம்
நல்ல சொற்களையே பேசும் திறம்
கொண்டவன் .
கூலி
மேற்கூறிய பண்புகளால் நமக்குத் தகுந்தவன் என்று உள்ளத்தில்
உண்டான மகிழ்ச்சியுடன் கூலி என்ன
கேட்கின்றாய் என்றார் . தாலி கட்டிய பெண்டாட்டி, பிள்ளைகள் என்று யாரும் இல்லை.
நான் தனியாள், நரை முடிகள் தோன்றா வில்லை. கண்களில் திரை தோன்றவில்லை
. ஆனாலும் எனக்கு ஆன வயதிற்கு அளவில்லை.
என்னை ஆதரித்தால் போதும் . நெஞ்சில் உள்ள காதல் பெரிது எனக்குக் காசு பெரிதில்லை என்றான்.
பயித்தியம்
இதையெல்லாம் கேட்டு பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்று என
மிகவும் மகிழ்ச்சியுடன் நானவனை எனக்கு வேலை ஆளாகக் கொண்டு விட்டேன் என்று கூறுகிறார். அன்று
முதல் கொண்டு
நாளாக நாளாக என்மேல் கண்ணனுக்குப் பற்று
மிகுந்துவருகிறது .
கண்ணனால் பெற்று வரும் நன்மைகள்
கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி
முடியாது.
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பத்தைக் காக்கின்றான் . அவன் வாய்முணுத்தல் செய்து செய்து கண்டதில்லை . வீதியைப் பெருக்குகிறான். வீட்டைச் சுத்த மாக்குகிறான்.
மற்ற வேலைக் காரர்கள் செய்யும் குற்றமெல்லாம் தட்டி அடக்குகிறான்.
மக்களுக்கு வாத்தியாராகவும் , வளர்ப்புத்தாயாகவும் , வைத்தியனாகவும் விளங்குகிறான் . எந்தக் குறையும் இல்லாமல் பண்டங்கள் எல்லாம் சேர்த்துவைத்துப் பால் வாங்கி, மோர் வாங்கி வைக்கின்றான். பெண்களைத் தாய்போல் அன்புடன் ஆதரித்து நண்பனாக , மந்திரியாக , நல்ல சிரியனுமாக விளங்குகிறான் கண்ணன். பண்பிலே தெய்வமாகவும் பார்க்கும் போது பார்வைக்கு சேவகனாகவும் தோற்றமளிக்கிறான். எங்கிருந்தோ வந்து இடையர் சாதி என்று கூறிய இக்கண்ணனைச் சேவகனாகப் பெற நான் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார்.
கண்ணன் ஆட்கொள்ளுதல்
அவன் எனது அகத்தில் கால் வைத்த நாள் முதலாய் எண்ணம் விசாரம்
எல்லாமே அவனது பொறுப்பாய் மாறிவிட்டது. செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,கல்வி,
அறிவு, கவிதை, சிவ யோகம் தெளிவே
வடிவாம் சிவஞானம், என அனைத்தும் பெருகி வருகின்றது. கண்ணனை நான் ஆட்கொண்டேன். கண்ணன் எனை ஆட்கொள்ளக்
காரணமும் இருக்கின்றது என்கிறார் .
கருத்துகள்
கருத்துரையிடுக