பழந்தமிழ் இலக்கியங்களில் உயிரினங்கள்-பறவைகள்
பழந்தமிழ்
இலக்கியங்களில் உயிரினங்கள்
பறவைகள்
மயில்
எட்டுத்தொகை நூல்களில் மயில் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. பெண்களின்
அழகு
பெண்களின் அழகுக்கு மயிலைப் பயன்படுத்தியிருப்பதைக் தெளிவாகக்
காணலாம்.
வீஉகும் ஓங்குமலைக்கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ (நற்.13-8)என்ற பாடல் அடிகள் உயர்ந்த மலையில் உள்ள கூட்டில்
இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்ந்து
செல்லும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றன. விசும்பு ஆடுமயில்
கடுப்ப (நற். 222-4) என்ற அடியில் ஆகாயத்தில் பறக்கும் மயிலைத் தலைவிக்கு
ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளனர்.
மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும் (நற் 305-2) என்பதற்கு மயிலின் அடியை ஒத்தது
நொச்சி மரம் என்று பொருள் தரப்படுகின்றது.
மயில் காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்” (குறுந். 2-3) என்ற வரிகளில் தலைவன் தலைவியின் அழகை
மயிலோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவதைக் காணலாம்.
ஆந்தை:
ஆந்தையைப் பேரறிவுள்ளப் பறவையாக அக்காலத் தமிழர்கள் கருதியுள்ளனர்.
அறிவுடையவன்’ என்ற
பொருளில் ‘ஆதன்’ என்ற சொல் சங்ககால வழக்கத்தில்
இருந்ததால், ஆதன்+அந்தை என்பதில் இருந்து ஆந்தை என்ற பெயர் உருவாகி இருக்கலாம்
எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய உயர்வான கருத்தால், ‘சிறைக்குடி
ஆந்தையார்’, ‘பிசிராந்தையார் , ‘ஒதல் ஆந்தையார்’ என அறிவில் சிறந்தப் புலவர்களின்
பெயர்களில் ஆந்தையின் பெயரை இணைத்துள்ளனர்.
ஆந்தையை, ‘குரால்’, ‘குடிஞை’, ‘ஊமன்’, ‘ஆண்டலை ‘பகண்டை ‘சிறுகூகை’, ‘சாக் குருவி’ என
பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளதுடன், ஆறு வகையான ஆந்தைகளைப் பற்றியும்
பாடியுள்ளனர்.
பேராந்தையான கொம்பன் ஆந்தையை ‘பெரும் புள்’ என
அதன் உருவத்தைக் கொண்டுப் பதிவு செய்துள்ளனர். ஆந்தைகள் மரப்பொந்துகளில்
முட்டையிடுவதைப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அன்னம்:
உயரமாகப்
பறக்கக் கூடியது, வெண்ணிறமானது. நீரிலும் நிலத்திலும்
வாழும் அமைப்பை உடையது. தலைவனது தேர் பறக்கும் அன்னப்பறவை மேலும் உயர்ந்து பறப்பது
போல் காணப்படுகிறது என்பார் உலோச்சனார்,
“மின்னுச்
செய் கருவிய பெயல் மழைதூங்க
மவிசும்பு
ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
பொலம்படைர்ப்
பொலிந்த வெண்தேர் ஏறிக்
அன்றில்
கடற்கரைகளில்
மீன் போன்றவற்றை உண்டு வாழும் பறவையாகும். பனைமரத்தில் வாழும். சிவந்து வளைந்த
வாயினையும் கரிய கால்களை உடையது .
ஒன்றைவிட்டு ஒன்றுபிரியாது வாழும் இயல்பினை உடையது .
“கடல்படு
அவிந்து கானல் மயங்கித்
துறைநீர்
இருங்கழி புல்லென் றன்றே
மன்றலம்
பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும்
பையென நரலும்”.
சிறுவெண்
காக்கை
கடற்கரையில் வாழும்
ஒரு வகைக் காக்கை. இதன் கழுத்தின் கீழ் வெளுத்தும் ஏனைய உடல் முழுவதும் கருமையாகக்
காணப்படும். வாயின் உட்பகுதி செந்நிறமாக இருக்கும். வெண்காக்கைக் கூட்டம் நீரில்
வேட்டையாடுங்கால் உடல் நனைந்து விடுகின்றன. அதனால் அக்காக்கை சோலையில் தங்கி
இன்பம் பெறும் என்கிறார் இளம்பூதனார். அதனை,
“சிறுவெண் காக்கை செவ்வாய் பொருந்தோடு
எறி
தனத் திவலை ஈரம் புறம் நனைப்ப
பனிபுலர்ந்து
உறையும் பல்பூங்கானல்”
என்ற அடிகள்
உணர்த்தும்.
ஐவகை நிலங்களும் பறவைகளும்
ஐந்து வகை நிலங்களாகப் பிரித்தரிந்த தமிழர்கள், ஒவ்வொரு நிலத்திலும் காணப்பட்ட பறவைகளையும்
தனித்தனியே பதிவு செய்துள்ளனர்.
கிளி, மயில்,
மனையுறை குருவி, ஆகியவை சங்க இலக்கியம் காட்டும்
குறிஞ்சி நிலப்பறவைகளாகும்.
கானக்கோழி. குயில், தூக்கணாங்குருவி,
புறா, மடாப்புறா, மணிப்புறா, சிறிய தவிட்டுப்புறா, சாம்பல்புறா, போகில் (பச்சைப்புறாவினம்) போன்றவை முல்லை
நிலப்பறவைகள் ஆகும்.
காக்கை-சிறுகருங்காக்கை, அண்டங்காக்கை, கோழி-கம்புள்
கோழி, நீர்க்கோழி,
நீலக்கோழி, மனைக்கோழி, மனையுறை, குருவி ஆகியவை மருதநிலப் பறவைகள் ஆகும்.
அன்றில், அன்னம்,
குருகு, வெள்ளாங்குருகு, சிறுவெள்ளாங்குருகு, யானையங்குருகு,கொக்கு, சிரல் எனப்படும் மீன்கொத்திப் பறவை , சிறுவெண்காக்கை, நாரை, போன்றவை நெய்தல் நிலப்பறவைகளாகும்.
ஆந்தை, ஊமன்,
வானம்பாடி, குடிஞை, குரால், கூகை,
எழால், குடுமி எழால், கழுகு, எருவை, பாறு,
பொகுவல், கிணந்துள், பருந்து , பூழ் (கௌதாரி) , குறும்பூழ் (காடை) போன்றவை பாலைநிலப்பறவைகளாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக