தனிப்பாடல்- அந்தகக் கவி - அவ்வை - காள மேகப் புலவர்
தனிப்பாடல்
தனித்தனிப்
புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில்
எழுதப்பட்ட
பாடல்களைத் தனிப்பாடல் என்கிறோம்.
புலவர்கள்
தம் உள்ளக்கருத்தை எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும்
உட்படாமல்
விருப்பம் போல எழுதிய பாடல்கள் இவை.
இவற்றைத்
தமிழறிஞர்களும் சுவைஞர்களும் பெரிதும் முயன்று,
தேடித்
‘தனிப்பாடல்கள்’ என்ற தலைப்பில்
தொகுத்திருக்கிறார்கள்.
இரட்டைப் புலவர்கள்
14
ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.
இவர்களில்
ஒருவர் பார்வையற்றவர் மற்றொருவர் கால்கள்
ஊனமுற்றவர்.
இளஞ்சூரியர், முதுசூரியர்
என்று அழைக்கப்படவர்கள்.
ஒருவர்
பாடலின் முன்பகுதியினைப் பாட மற்றவர் பாடலின்
பின்னடியைப்
பாடி முடிப்பர்.
இவர்களின்
பாடல்களில் ஏராளமான நகைச்சுவைக் கதைகள்
காணப்பெறுகின்றன.
தில்லைக் கலம்பகம், திருவாமத்தூர்
கலம்பகம், கச்சிக்கலம்பகம்,
ஏகாம்பர
நாதர் உலா, தியாகேசர் பஞ்சரத்தினம் போன்றன
இவர்கள்
எழுதிய நூல்கள் ஆகும்.
காளமேகம்
15-ஆம் நுற்றாண்டு.
இயற்பெயர்
வரதன் .
விழுப்புரம்
அருகில் எண்ணாயிரம் ஊர் .
மேகம் மழை பொழிவது போல் கவிதை
பாடியதால்
‘காளமேகப்புலவர்’
என அழைக்கப்பெற்றார்.
திருவரங்கம்
பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல்
தொழில்
செய்தவர் .
பின்னர்
சைவத்திற்கு மாறினார் என்று கூறுவர்.
திருவானைக்காவில்
காலமானார்.
ஆசு
கவி, சைவப் பாடல்கள் , நகைச் சுவைப்
பாடல்கள், வசைபாடுவதில்
வல்லவர்.
திருமலைராயன்
அவைக்களத் தலைமைப் புலவர்.
அதிமதுரகவியோடு
வாதிட்டு ‘எமகண்டம்’ பாடி அவரை
வென்றவர்.
ஒரே
இன எழுத்துகளை மட்டுமே கொண்டு வர்க்க பாடல்கள்
பல
புனைந்தவர்.
திருவானைக்கா
உலா, சரஸ்வதி மாலை,
சித்திரமடல், பரப்பிரம்ம
விளக்கம், வினோதரச
மஞ்சரி, தமிழ் நாவலர் சரிதை, புலவர்
புராணம்.
ஒளவையார்
‘ஔவை’ எனும் சொல்லுக்குத் ‘தாய்’
’தவப்பெண்’ என்ற
பொருள்கள்
உண்டு.
தமிழ்
இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயர்
கொண்டபுலவோர்
பல்வேறு காலகட்டங்களில் பலர்
வாழ்ந்ததற்கான
குறிப்புகள் உள்ளன.
அந்தகக்கவி வீரராகவர்
ஊர்
தொண்டை நாடு பூதூர் .
அந்தக்கவி
வீரராகவர் பிறவியிலேயே பார்வை இல்லாதவர்.
கேள்வியறிவின்
வாயிலாகக் கல்வி கற்றார்.
இலங்கை
சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை,
ஓர்
ஊர் ஆகியவற்றைப் பரிசாகப் பெற்றார்.
சேயூர்
முருகன் பிள்ளைத்தமிழ், திருவேங்கடக் கலம்பகம்,
சந்திரவாணன்
கோவை, கீழ்வேளூர் உலா ஆகியவை
பாடியுள்ளார்.
சத்திமுத்தப் புலவர்
ஊர் கும்பகோணம்
சத்திமுத்தம்.
மதுரையில்
வாழ்ந்தவர்.
இவரது இயற்பெயர்
என்னவென்று அறியப்படவில்லை.
இவரைக்
குறித்துப் பாரதிதாசன் சத்திமுத்தப் புலவர் என்னும்
சிறு நாடக நூலை 1950 இல் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக