பாளைக்காரர்கள் -பாளையங்கள்-வீரபாண்டிய,பூலித்தேவரின் புரட்சி

                           பாளைக்காரர்கள்  

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, 1529-க்கும், 1564-க்கும் இடையில் மதுரை மண்டலத்தை  விசுவநாத நாயக்கர் நிர்வகித்தவர்.

இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதனால் அவரது அமைச்சர் அரியநாத முதலியாருடன் கலந்தாலோசித்தார்.

ஆந்திராவை ஆண்ட காக்கத்தியர் இராச்ச்சியத்தில் நடைமுறையில் இருந்த பாளையக்கார முறையை 1529-இல் ஏற்படுத்தினார்.

இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.

இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலையைக் குறிக்கும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.

 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தெலுங்கு பகுதி மற்றும் தமிழ்ப் பகுதியின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திய ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார்.

இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது படை மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர். பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், மற்றும் ஒரு பங்கினை படை  செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த பாளையக்காரச் செலவிற்கு வைத்துக்கொண்டனர். 1801 ஜூலை 31ல்‌ செய்துகொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி தமிழ்நாட்டின்‌ மீது ஆங்கிலேயர்‌ நேரடி கட்டுப்பாட்டைப்‌ பெற்றனர்‌ இதனால்‌ பாளைக்காரர்‌ முறை நீக்கப்பட்டது.

"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது.

பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.

கடமையும்  அதிகாரமும்

அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடடு விடும்.

இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.

நிர்வாகம்

தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுய அதிகாரத்துடன் ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்து வந்தது.

 பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. தளவாய்

இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவர் இருப்பார் . தானாபதி

பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பானவற்றை நிர்வகிக்க தானாபதி ஒருவரும் இருந்தனர்.

உரிமைகள்

பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்றவற்றில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன.

அதிகாரம்

படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர்.

தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அளவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அளவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுகக்கவும் , பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகவும்  சமமாகப் பங்கிடப்பட்டது.

முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக இருப்பார்.  

 போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு முக்கியமானதாக இருகக்கும் . பிற்காலங்களில் மன்னர்கள் ஐரோப்பியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்றனர் பாளையங்கள்

அம்மையநாயக்கனூர் பாளையம்

அம்பாத்துறை பாளையம்

உடையார் பாளையம்

உத்தம பாளையம்

ஊத்துமலை பாளையம்

எட்டயபுரம் பாளையம்

நடுவன்குறிச்சி பாளையம்

நாகலாபுரம் எட்டயபுரம்

கந்தர்வக்கோட்டை பாளையம்

பாளையக்காரர்கள்

பூலித்தேவன்

அழகு முத்துக்கோன்

கட்டபொம்மன்

மருது பாண்டியர்

முத்து வடுகநாதர்

ராமச்சந்திர நாயக்கர்

வேலு நாச்சியார்

தீரன் சின்னமலை

பூலித்தேவரின் புரட்சி (1755-1767)

கர்னல் ஹெரான் தலைமையிலான கம்பெனியின் படை ஒன்றை அழைத்துக் கொண்டு மார்ச் 1755இல் மாபூஸ்கான் ஆற்காட்டு நவாபின் சகோதரர் திருநெல்வேலிக்குச் சென்றார்.

மதுரையை  எளிதில் அவர்களிடம் வீழ்ந்தது.

அதன்பின் தொடர்ந்து கம்பெனிக்குக் கீழ்ப்படிய மறுத்துவந்த பூலித்தேவரை அடக்க கர்னல் ஹெரான் பணிக்கப்பட்டார்.

மேற்குப் பகுதியில் இருந்த பாளையக்காரர்களிடம் பூலித்தேவர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்.

பீரங்கிகளின் தேவையும் துணைக்கலப்பொருட்கள் மற்றும் படைவீரர்களின் ஊதியம் உள்ளிட்ட காரணங்களினால் ஹெரான் தனது திட்டத்தைக் கைவிட்டு மதுரைக்கு பின்வாங்கினார். கம்பெனி நிர்வாகம் அவரைத் திரும்ப அழைத்ததோடு நிரந்தரப் பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் 1790-1799

தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றான்

பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது. அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.

ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.

 இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட காரணமானது .

கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் 3310 பகோடாக்களாக இருந்தது.

இவற்றை வசூலிப்பதற்காக ஜாக்சன் என்ற  ஆட்சியர் இராணுவத்தை அனுப்ப முனைந்தபோது மதராஸ் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்க மறுத்தது. 1798 ஆகஸ்ட் 18இல் இராமநாதபுரத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார். ஆனால் சந்திக்க கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு குற்றாலம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களிலும் ஜாக்சன் கட்டபொம்மனை சந்திக்க மறுத்தார்.

இறுதியாக 1798 செப்டம்பர் 19 அன்று அனுமதியளித்ததன் பேரில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனைச் சந்தித்தார். அப்போது இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர்.

பானெர்மென் தாக்குதல் உத்திகளை வடிவமைத்தார். கள்ளர் பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்ரமணியனார் கைது செய்யப்பட்டார்.

கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷார் அவரது தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர். எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.

சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் செப்டம்பர் 13 அன்று தூக்கிலிடப்பட்டார்.

பானெர்மென் விசாரணையை பாளையக்காரர்களின் முன்பாக அக்டோபர் 16 அன்று அரங்கேற்றினார்.

விசாரணையின் போது கட்டபொம்மன் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார். திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறின் பழைய கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

தீரன் சின்னமலை (1756 -1805)

தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்ட தீரன் 1756இல் பிறந்தார்.

கொங்குப்பகுதியில் குடும்ப மற்றும் நிலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அப்பகுதி மைசூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது, திப்புவின் திவான் முகம்மது அலி என்பவரால் வரி வசூலிக்கப்பட்டது.

ஒரு முறை திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, தீர்த்தகிரி அவரை வழிமறித்து வரிப்பணம் முழுவதையும் பறித்துக்கொண்டார்.

 இவர் முகம்மது அலியிடம் சிவமலைக்கும், சென்னிமலைக்கு இடையே இருந்த ‘சின்னமலையே’ வரிப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாக சொல் என்று அறிவுறுத்தினார்.

அதன் பிறகே ‘தீரன் சின்னமலை’ என்று அவர் அழைக்கப்படலானார். அவமதிப்புக்குள்ளான திவான் சின்னமலையைத் தாக்க படை அனுப்பினார். இருபடைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதிக்கொண்டதில் சின்னமலையே வெற்றிபெற்றார்.

திப்புவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்.

எனவே அவ்விடம் ‘ஓடாநிலை' என்றழைக்கப்படுகிறது.

அவர் பிடிபடாமலிருப்பதற்காக கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார்.

இறுதியாக அவரையும் அவர் சகோதரர்களையும் கைது செய்த ஆங்கிலேயர்கள் அவர்களை சங்ககிரியில் சிறைவைத்தனர். ஆங்கிலேய ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்ட போது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர்.

அதனால் 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

பாளையங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்