மொழிப்போராட்டம்
மொழிப்போராட்டம்
தமிழ்நாட்டில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் ஆக்கப் பட்டபோது அதற்கு பல்வேறு இடங்களிலில் இருந்தும் மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது .
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராக மட்டும்
இன்றி மொழிப்போராகவும் உருப்பெற்றது.
பலவேறு காலக் கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போரை நான்கு பகுதிகளாகப்
பிரிக்கலாம்
|
1. |
1938-1940 |
முதல் மொழிப்போர் |
|
2. |
1948-1952 |
இரண்டாம் மொழிப்போர் |
|
3. |
1965 (50 நாட்கள்) |
மூன்றாம் மொழிப்போர் |
|
4. |
1986 (140 நாட்கள்) |
நான்காம் மொழிப்போர் |
முதல் மொழிப்போர்:
1937-ஆம் ஆண்டில் சென்னை
மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு முதலமைச்சராக சி.ராஜகோபாலாச்சாரி அவர்கள் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற சில நாட்களில் கட்டாய
இந்தி பாடம் குறித்து சில மாற்றங்களை முன்வைத்தார்.
1938”ல்
பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கு இராஜாஜி ஆணையிட்டார்.
இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கததைச் சேர்ந்தவர்களும் , தந்தை பெரியாரும் மேற்கொண்டனர்.
இதனால் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்திக்கு எதிராக மறியல் போராட்டங்கள் நடந்த நிலையில், 1940-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக்
கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது.
இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும்
சிறையிலேயே உயிரிழந்தனர்.
நடராசன்
இந்திக்கு எதிராக மறியல் செய்தற்க்காக அரசு, இவரை கைது செய்து
சிறையில் அடைத்தது.
சிறைவாசத்தால் கடுமையாக உடல்நலம் குன்றி, உயிருக்கு போராடிய நேரத்தில் மன்னிப்பு எழுதிக்கொடுத்தால்
விடுதலை செய்கிறோம் என அப்போதைய அரசு கேட்டது. நடராசன் அவர்கள் மன்னிப்பு
கேட்காத நிலையில் சிறையில் உயிர் இழந்தார்
தாளமுத்து
நடராசன் மறைந்த இரண்டு மாத இடைவெளியில் சென்னை சிறையில் தாளமுத்து அவர்களும் 13/9/1938 அன்று உயிரிழந்தார்.
இரண்டாம் மொழிப்போர்:
1948 ஆம் ஆண்டு சூன்
மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது.
முதலில் சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்த ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் தற்போது தமிழ்நாடாக
இருக்கும் பகுதிகளில் விருப்பப்
பாடமென்றும் அறிவிக்கப்பட்டு பிறகு தமிழ்நாட்டிலும் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.
கடும் எதிப்பு கிளம்பிய நிலையில் முடிவில் 1950ல் இந்த ஆணை
விலக்கிக் கொள்ளப்பட்டது.
மூன்றாம் மொழிப்போர்:
இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிகளுக்கான சட்டத்தில், 1965க்குப் பிறகும்
இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம்
கொண்டுவரப்பட்டது.
‘தொடரலாம்’ என்று இருப்பதை ‘தொடரும்’ என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது.
1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மொழிப் போர் தியாகிகள் சிலர்
மொழிக்காக தீக்குளித்த உலகின் முதல் வீரர் கீழப்பழுவூர் சின்னச்சாமி
விருகம்பாக்கம் அரங்கநாதன்
கீரனூர் முத்து
சிவகங்கை இராசேந்திரன்.
சத்தியமங்களம் முத்து
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்
விராலிமலை சண்முகம்
கோவை பீளமேடு தண்டபாணி
மயிலாடுதுறை சாரங்கபாணி
நான்காம் மொழிப்போர்
1986 ஆம் ஆண்டு ‘நவோதயா
பள்ளிகள்’ தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது அதை ‘இந்தி திணிப்பு’ என கலைஞர் எதிர்த்து
போராட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று வரை பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மொழிப் போர் தியாகிகள் தினம்
தமிழ்நாட்டில் 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியைப்
பிடிப்பதற்கு இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கீழப்பழுவூர் சின்னச்சாமி
தீக்குளித்து உயிரிழந்த ஜனவரி 25ஆம் நாளை தமிழ்நாட்டில் மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிப்பது துவங்கியது.
மொழிப்போரில் பெண்கள்
தமிழ்நாட்டில் முதல் முறையாக தியாகராய நகர் மாதர்
முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி ‘முன்னேற்ற கழகம்’ என்ற பதத்தைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய டாக்டர்
தருமாம்பாள் அம்மையார் முன்னெடுப்பில் முதல் பெண்கள் மாநாட்டிற்கான அறைகூவல்
விடுக்கப்பட்டது.
இதே மாநாட்டில் தான் பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற
பட்டத்தை வழங்கினார் தருமாம்பாள் அம்மையார்.
மாநாட்டின் தலைவராக மறைமலையடிகளின் மகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் செயற்பாட்டளாரான நீலாம்பிகை அம்மையார் இருந்தார்.
இவர்களோடு வ.பா.
தாமரைக்கண்ணி அம்மையார் மூவலூர்
இராமாமிர்தம் அம்மையார்,
பண்டிதை அ. நாராயணி, மீனாம்பாள் சிவராஜ் மற்றும்
கலைமகள் அம்மையார் ஆகியோரும் அந்த மாநாட்டை வழிநடத்தி கொண்டு சென்றவர்கள் ஆவார்கள்
.
கருத்துகள்
கருத்துரையிடுக