பல்லவர்கள்
பல்லவர்கள்
கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
வரை பல்லவர்கள் ஆட்சி பெற்றிருந்தனர். .
பல்லவர்களைப் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. பல்லவர்கள் - பகலவர்களே
2. பல்லவர்கள் - வாகாடகர்
3. பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
பாரசீகத்தைச் சேர்ந்த பகலவர்களே பல்லவர்கள் என
வின்செண்ட் ஸ்மித் கூறுகிறார். ஜோவேயு துபிரில் (Joureau Duberial) என்பவரும்
இக்கருத்தினை ஆதரிக்கின்றார்.
K.P.ஜெயஸ்வால் என்பவர் பல்லவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த
பிராமணர்கள் என்கின்றார். போரில் வலிமை பெற்றிருந்த
பிராமணர்கள்
தெற்கு நோக்கி வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் வாகாடகர் என்னும்
வகுப்பைச் சேர்ந்தவர்கள்..
பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
சோழ மண்டலத்தில் வாழ்ந்து வந்த குறும்பர், கள்ளர்,
மறவர்
ஆகியோரிடையில் இனக்கலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கிடையில்
புதிதாகத்
தோன்றிய ஒரு இனமே பல்லவர்கள்.
இவர்களின் மன்னரே
பல்லவர் என்று கருதுகின்றனர். இப்பல்லவர்கள்
காலப்போக்கில் காஞ்சியை உரிமையாக்கிக் கொண்டு ஆட்சியைத்
தொடங்கினர்.
புலிநாடு, புலியூர்க் கோட்டம் என்னும் இரு கோட்டங்கள்
தொண்டை
மண்டலத்தில் இருந்தன. இப்பகுதியில் புலிந்தர்கள்
வாழ்ந்து வந்தனர்.
புலிந்தரும் குறும்பரும் ஒருவரே. புலிந்தர்களுக்குப் பலடர் என்னும்
மற்றொரு பெயரும் உண்டு.
பலடர் என்னும் சொல் பல்லவர் என்று மருவியிருக்கலாம்
என்ற
கருத்தும் உண்டு.
இலக்கியச் சான்றுகள்
அப்பர் பாடிய சைவத்திருமுறையில் பல்லவரையும்
சமணரையும் பற்றிய
குறிப்புகள் உள்ளன.
சுந்தரர் பாடிய தேவாரத்தின்
வாயிலாகப் பல்லவர்கள் பேரரசர்கள் என்னும்
உண்மையை அறியலாம்.
நந்திக்கலம்பகம், பாரத வெண்பா நூல்கள்
மூன்றாம் நந்திவர்மன் பற்றி
குறிப்பிடுகின்றன.
சிறுத்தொண்ட நாயனார்
முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரைப் போரில்
வென்று அவர்களின்
தலைநகராகிய வாதாபியை வென்றான். இவனுக்குப் படைத்
தளபதியான பரஞ்சோதியார் என்பவர் சிறுத்தொண்ட நாயனார் என்று
நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார் என்று பெரிய
புராணம் எடுத்துரைக்கின்றது.
முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து
பின்பு சைவனாக
மாறியவன் எனப் பெரியபுராணம் கூறுகிறது.
சேக்கிழார்
பெரியபுராணம் என்னும் நூல் இயற்றிய சேக்கிழார்,
பல்லவர்கள்
ஆட்சி
செய்த தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். முதலாம்
நரசிம்மவர்மன்
சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியையும்,
சோழநாடு
பல்லவர்களுக்கு உட்பட்டிருந்த நிலையையும் பெரிய புராணத்தில்
அவர்
உணர்த்துகிறார்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் பல்லவர் பற்றிய சான்றுகள்
கிடைக்கின்றன.
அவந்தி சுந்தரி கதையில் சிம்மவிஷ்ணு காஞ்சியைக்
களப்பிரர்களிடமிருந்து கைப்பற்றினான் என்று
கூறப்பட்டிருக்கின்றது.
கற்கோயில்களும்- குகைக் கோயில்களும்
பல்லவ மன்னர்கள் எழுப்பிய கற்கோயில்களும் குகைக்
கோயில்களும்
பல்லவர் வரலாற்றுச் சான்றுகளாகும்.
எ. கா . மாமல்லபுரம், காஞ்சிபுரம்
முதலாம் பரமேசுவரவர்மன் - கூரம்
முதலாம் நரசிம்மவர்மன் - மாமல்லபுரம்.
இராசசிம்மன் எனப்படும் இரண்டாம்
நரசிம்மவர்மன் - கைலாசநாதர்
கோயில்
முதலாம் மகேந்திரவர்மன் - சித்தன்னவாசல்
பட்டயங்களும்
கல்வெட்டுகளும்
பல்லவர்களுடைய கல்வெட்டுகள்: மகேந்திரவாடி, தளவானூர்,
பல்லாவரம்,
திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம்,
வல்லம்,
மாமண்டூர்,
மண்டகப்பட்டு,
சித்தன்னவாசல், மாமல்லபுரம்
வயலூர் - இராசசிம்மன் தூண் கல்வெட்டு ஒன்று
கிடைத்துள்ளது.
மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்தான். பின்பு
திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ சமயத்தைத்
தழுவினான்.
இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று
திருச்சிராப்பள்ளிக்
கல்வெட்டுக் கூறுகின்றது
பட்டயங்கள்
மயிதவொளு,
ஹீரஹதஹள்ளி
என்னும் ஊர்களில் கிடைத்துள்ள
சிவஸ்கந்தவர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில்
காணப்படுகின்றன.
.
வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு - இரண்டாம்
நந்திவர்மன்
தனது பன்னிரண்டு வயதில் அரசு கட்டில் ஏறினான் ஒன்று
தெரிவிக்கின்றது.
பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள் - இரண்டாம்
நந்திவர்மனின் தந்தை
இரணியவர்மன்.
சோரப் பட்டயம் - சாளுக்கிய மரபின் அழிவிற்கு பல்லவரே
காரணம் என்று கூறுகிறது.
கி.பி. 640இல் சீனப் பயணியான யுவான்-சுவாங் பல்லவர்
தலைநகராகிய
காஞ்சிக்கு வந்தார். அவர் காஞ்சியைப் பற்றியும், அங்கு
நிலவிய
சமயங்களைப் பற்றியும் தமது குறிப்பில் விளக்கியுள்ளார்.
காஞ்சியின் உயர்ந்த நிலையைப் பலவாறு போற்றிக் கூறுவதோடு,
காஞ்சி
ஆறு கல் சுற்றளவுடையது என்கிறார்.
மகாவம்சம்
இலங்கையைச் சார்ந்த மகாவம்சம் என்ற வரலாற்று நூல்,
பல்லவர்
இலங்கை மீது படையெடுத்துச் சென்ற நிகழ்ச்சியைக்
கூறுகின்றது.
பல்லவ மன்னர்கள் (கி.பி. 250-890)
பல்லவ மன்னர்களின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு
அவர்கள் வெளியிட்ட பட்டயங்கள் துணை புரிகின்றன.
பல்லவ மன்னர்கள் தொடக்க காலத்தில் வெளியிட்ட பட்டயங்கள் -
பிராகிருத மொழியிலும்,
இடைக்காலத்தில் வெளியிட்ட பட்டயங்கள் - சமஸ்கிருத
மொழியிலும்,
பிற்காலத்தில் வெளியிட்ட பட்டயங்கள் - கிரந்தத்
தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.
பட்டயங்களைப் பிராகிருத மொழியில்
வெளியிட்டவர்களை முற்காலப் பல்லவர்கள் ,
சமஸ்கிருத மொழியில் வெளியிட்டவர்களை இடைக்காலப்
பல்லவர்கள் ,
கிரந்தத் தமிழில் வெளியிட்டவர்களைப் பிற்காலப்
பல்லவர்கள் மூன்று
பிரிவினராக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர்.
இடைக்காலப் பல்லவர்களை மகா பல்லவர்கள் என்றும்
கூறுவர்.
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630)
சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம்
மகேந்திரவர்மன் பதவி ஏற்றான்.
இவனுக்கு மகேந்திர விக்ரமன் , விசித்திரசித்தன் எனப்
புகழப்பட்டான்.
தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும்,
கல்வியும்
சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை
மகேந்திரவர்மனுக்கு உண்டு.
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668)
முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது
மகன் முதலாம் நரசிம்மவர்மன் அரியணை
ஏறினான்.
வாதாபி கொண்டான்
இவன் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். இதனால்
இவனை வாதாபி கொண்டான் என்றனர்.
இவ்வெற்றிக்குக் காரணமான தளபதி பரஞ்சோதியே
பிற்காலத்தில் சிறுத்தொண்ட
நாயனார் எனப் போற்றப் பெற்றார்.
யுவான்-சுவாங் என்ற சீனப் பயணி இவனது
ஆட்சிக் காலத்தில்
காஞ்சிபுரத்திற்குக் கி.பி. 640இல் பயணம் செய்தார்.
அவர் தமது குறிப்பில் காஞ்சி மாநகரைப் பற்றிச்
சிறப்புறக் கூறியுள்ளார்.
முதலாம் நரசிம்மவர்மன் நாமக்கல் மலையடியில் –
நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில்,
மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம்,
வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்கள் இவன் அமைத்தன ஆகும்.
முதன்முதலாக
ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை
இவனையே சாரும். மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர்
தேர்கள்
எனப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால்
அமைக்கப்பட்டனவே ஆகும்.
முதலாம் நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப்
பெயரும் உண்டு.
இப்பட்டப் பெயர் கொண்டு மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும்
அழைக்கப்பட்டது.
மகாபலிபுரம் இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறந்த
துறைமுகப் பட்டினமாக விளங்கியது.
முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவன் மகன் இரண்டாம்
மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக
முடிசூட்டிக் கொண்டான்.
இவன் இரண்டு ஆண்டுகளே (கி.பி. 668-670) அரசாண்டான்.
முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695)
இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம்
பரமேசுவரவர்மன் பட்டத்திற்கு வந்தான்.
இவன் சாளுக்கிய அரசன் மு
தலாம் விக்கிரமாதித்தனோடும் அவனுக்குத் துணையாக வந்த
மேற்குக்
கங்க அரசன் பூவிக்கிரமனோடும் செய்த போரில்
தோல்வியுற்றான்.
கூரம் என்னும் இடத்தில் இவன் கட்டிய சிவன் கோயில் புகழ்
வாய்ந்தது.
இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 695-722)
முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் அவனுடைய மகன் இரண்டாம்
நரசிம்மவர்மன் பதவி ஏற்றான்.
இராசசிம்மன் என்னும் மற்றொரு பெயரும்
உண்டு.
இவனுக்குப் பெரும்புகழையும், சைவ சமய வரலாற்றில்
அழியாத
இடத்தையும் பெற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் இவன்
எழுப்பிய கைலாசநாதர் கோயில் ஆகும்.
மகாபலிபுரத்தில் சிறந்து
விளங்கும் கடற்கரைக் கோயிலும் இவன்
எழுப்பியதே ஆகும்.
இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 722-730)
இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம்
பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான்.
அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம்
விக்கிரமாதித்தன்
காஞ்சியின் மீது போர் தொடுத்தான்.
இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான்.
இவனுடன் மகாபல்லவர்களின் ஆட்சி முடிந்தது.
பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 731 – 890)
பல்லவருக்குள்ளே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. சிம்மவிஷ்ணுவின்
பரம்பரையில் பல்லவ நாட்டை இறுதியாக ஆண்ட இரண்டாம்
பரமேசுவரவர்மனுக்குச் சித்திர மாயன் என்னும்
மைந்தன் இருந்தான்.
வயதில் சிறுவனாக இருந்ததால் இவன் அரசபதவிக்கு வருவதைப்
பெரியோர்களும், குடிமக்களும் விரும்பவில்லை.
சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் பரம்பரையில்
வந்த இரணியவர்மன் அரசபதவிக்கு வருவதையே
விரும்பினர்.
இரணியவர்மன் இக்கோரிக்கையை மறுத்துவிட்டுத் தனது
மைந்தன் இரண்டாம் நந்திவர்மனை ஆட்சியில்
அமர்த்துவதற்கு வாரிசு
உரிமைப் போரில் இறங்கினான். இப்போரில் இரணியவர்மன்
வெற்றி
பெற்றான்.
இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-795)
பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ
நாட்டிற்கு
மன்னன் ஆனான். இவன் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியருடன்
போர் செய்ய வேண்டியதாயிற்று.
தந்திவர்மன் (கி.பி. 796-846)
இராஷ்டிரகூடர்களின் ஆதரவுடன் இரண்டாம் நந்திவர்மன்
ஆட்சியைப்
பெற்றதால் இராஷ்டிரகூட இளவரசி ரேவாவை இரண்டாம்
நந்திவர்மன்
மணம் புரிந்து கொண்டான்.
இவர்களுக்குப் பிறந்தவன் தந்திவர்மன் என்பவன்
ஆவான்.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)
தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம்
நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக
விளங்கினான்.
இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.
நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன்,
விஜய நந்தி,
விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள்
உண்டு.
நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த
நந்திவர்மன் எனப்
பாராட்டப்படுகிறான்.
நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.
தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர்,
வெறியலூர்,
தொண்டி,
பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான்.
மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி
நாராயணன்’,
‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை
வெண்திரை
நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான்.
மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான்.
பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான்.
பாண்டியரின்
கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை
மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப்
பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள்
இவனது காலத்தில் ஒழிந்தன.
நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் (கி.பி. 869-890)
மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல்
மனைவியின் மூத்த
மகன் நிருபதுங்கவர்மன் முடி
சூட்டிக் கொண்டான்.
மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின்
மகன் அபாரசிதவர்மன் அரச
பதவியைக் கைப்பற்ற எண்ணினான்.
இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர்
தொடங்கியது.
நிருபதுங்கவர்மன்
நிருபதுங்கவர்மன்
இரண்டாம் வரகுண பாண்டியனின் உதவியைக் கோரிப்
பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத்
துணைநின்றனர்.
அபராசிதவர்மன் வெற்றி பெற்றுப் பல்லவ நாட்டு அரியணையைக்
கைப்பற்றிக் கொண்டான்.
அபராசிதவர்மன்
அபராசிதவர்மன்பதினெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான்.
நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றான்.
சோழ மன்னன் முதலாம் இப்போரில்
அபராசிதவர்மனுக்குத் துணை நின்றான்.
விரைவில் அவன் பல்லவ நாட்டைத் தாக்கி அபராசிதவர்மனை வென்று
பல்லவ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன்
இருவருக்குப் பின் பல்லவர் ஆட்சி
சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறித் திறன் குன்றியது
கருத்துகள்
கருத்துரையிடுக