மராத்தியர்கள் - சிவாஜி - கொரில்லா - சத்ரபதி

 

 

 மராத்தியர்கள் - சிவாஜி - கொரில்லா - சத்ரபதி

 

தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப்பகுதிகளில் வாழ்ந்த 

மக்கள்"மராத்தியர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.  

.தக்காணத்தை ஆட்சி புரிந்த ஷியா பிரிவைச் சேர்ந்த அரசர்களிடம் 

மராத்தியர்கள் பணியாற்றி வந்தனர்.

அப்பகுதியில் காணப்பட்ட கோட்டைகள் மற்றும் மலைப்பகுதிகள், 

பகைவர்களிடம் இருந்து தகுந்த பாதுகாப்பை மராத்தியர்களுக்குக் 

கொடுத்தது.

மரத்தியர்களின் தோற்றம்:

முகாலயர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பும் பக்தி இயக்கத்தின் 

மீது ஏற்பட்ட   ஈர்ப்பு மராத்தியர்களிடையே ஒற்றுமை உணர்வை 

உருவாக்கியது.  பக்தி இயக்கத் தலைவர்களான துக்காராம், ராம்தாஸ், 

ஏக்நாத் மற்றும் வாமன்பண்டிட்  போன்றவர்கள் கடவுள் பக்தியையும் , ஒரு

வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வையும்

தோற்றுவித்தனர்.

 

சிவாஜியின் தொடக்கம்

இத்தகைய சூழ்நிலையில் சிவாஜி ஒரு மாபெரும் தலைவராகத் 

தோன்றினார்.  இவரது தலைமையில் மராத்தியர்கள் வலிமை 

மிக்கவர்களாக வளர்ந்து  முகலாயர்களை எதிர்த்தனர் .

சிவாஜி (கி.பி. 1627 - கி.பி. 1680)

 

பூனாவிற்கு அருகில் உள்ள சிவனேரி கோட்டையில் கி.பி. 1627ம் ஆண்டு 

சிவாஜி பிறந்தார்

 பீஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றி வந்த ஷாஜி பான்ஸ்லே இவரது

தந்தையாவார். 

இவரது தாய் ஜிஜாபாய் ஷாஜி பான்ஸ்லே துக்காபாய் என்பவரை இரண்டாவது மணம் புரிந்து கொண்டார்.

எனவே  முதல் மனைவி ஜிஜாபாய் மற்றும் மகன் சிவாஜியைப் 

புறக்கணித்தார்.

தாதாஜி கொண்டதேவ் சிவாஜியின் காப்பாளர் ஆனார்.

இவரால் சிவாஜி வளர்க்கப்பட்டார்.

சிவாஜியின் குரு குதிரைப் பயிற்சி மற்றும் நிர்வாகப் பயிற்சிகளை

பயிற்றுவித்தார்.

சிவாஜி ஜாகிர்தார் பதவியில் இருந்தார்

தோர்ணா, ரெய்ச்சூர், இந்திரபுரா, புரந்தர், கல்யாண்  கோட்டைகளைக்  

கைப்பற்றினார்.

அப்சல்கானின் படையெடுப்பை முறியடித்து  அவனை கொன்றார்.

செய்ஷ்டகானின் படையினை தோற்கடித்தார்.

 ஜாகிர்தார் பதவியில் இருந்து சத்ரபதி என்னும் நிலையை அடைந்தார்.

தமிழகத்தின் செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைக்  

கைப்பற்றினார்.

அப்பகுதிகளை நிர்வாகிக்க சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து ஆளச் 

செய்தார்.

சிவாஜி இறந்த பின் வெங்காஜி தஞ்சாவூரைக் கைப்பற்றி மீண்டும்

சுதந்திர மன்னரானார்.

படையெடுப்புகள்

சிவாஜி, முஸ்லீம்களின் கீழ் பணியாற்ற வெறுப்பு கொண்டு

சுதந்திரமான பேரரசு ஒன்றினை தோற்றுவிப்பதை நோக்கமாகக்

கொண்டார்

பீஜப்பூர் சுல்தானிடமிருந்து புரந்தர், ரெய்கார் தோர்னா மற்றும்

கல்யாண் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார்.

'கொரில்லா" என்ற 'முறைசாரா போர் முறையை மராத்தியர்கள் நன்கு 

அறிந்திருந்தனர்.

இது  மலைகளுக்கிடையே ஒளிந்து கொண்டு திடீரென்று எதிரிகளைத் 

தாக்கும் முறையாகும்.

அப்சல்கான்-சிவாஜி

சிவாஜியை அடக்க பீஜப்பூர் சுல்தான், அப்சல்கான் என்பவரை அனுப்பி 

சிவாஜியை உயிருடனோ அல்லது சாகடித்தோ கொண்டு  

வரும்படி  அனுப்பினார்

அப்சல்கானின் சூழ்ச்சியை சிவாஜி தெரிந்து கொண்டு, அவரை சந்திக்க 

தகுந்த பாதுகாப்புடன் சென்ற சிவாஜியும் அப்சல்கானும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

அச்சமயத்தில் அப்சல்கான் சிவாஜியின் கழுத்தை நெறித்துக் கொலை 

செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.  

ஆனால் சிவாஜி தனது உடையில் மறைந்திருந்த புலி நகத்தால் 

அப்சல்கானைக் கிழித்துக் கொலை செய்தார்.

இதனால் சிவாஜியின் பெருமையும் புகழும் மேலும் அதிகரித்தது

செயிஷ்டகானும் சிவாஜியும்

முகலாய மன்னரான  ஔரங்கசீப், தக்காண ஆளுநர் செயிஷ்டகானை 

சிவாஜியை அடக்க அனுப்பினார்.

பூனா என்ற இடத்தில் முகாமிட்டிருந்த செயிஷ்டகானைப் பற்றி  அறிந்த 

சிவாஜி அவரை சந்திக்க திருமண கோஷ்டியினர் போன்று மாறுவேடம் 

பூண்டு செயிஸ்டகான் தாக்க முற்பட்டார் .

அப்போது செயிஸ்டகான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சிவாஜி அவரைத் 

தாக்கினார் .

ஆனால் செயிஸ்டகான் அங்கிருந்து உயிர் தப்பினார். அவரது கட்டைவிரல் துண்டிக்கப்பட்டடது

ராஜா செய்சிங் – சிவாஜி

ஔரங்கசீப், சிவாஜியை அடக்க இரண்டாவது முறையாக ராஜா

செய்சிங் என்பவரை அனுப்பினார், முகலாயப்படை சிவாஜியை

சூழ்ந்து கொண்டார். அங்கு சிவாஜி.

சிவாஜி வேறு வழியின்றி அமைதி உடன்படிக்கையில் கை எழுத்திட்டார்.  

இதனால்  புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி சிவாஜி ஔரங்கசீப்பை சந்திக்க கிபி 1656 ம் ஆண்டு ஆக்ரா 

சென்றார்.

அங்கு அவமானப்படுத்தப்பட்ட சிவாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின் பழக்கூடை ஒன்றின் மூலம், சிறையிலிருந்து சிவாஜி உயிர் தப்பினார்.

அதன் பின் ஔரங்கசீப்பால் சிவாஜியை மீண்டும் கைது செய்ய  

இயலவில்லை.

சிவாஜியை "மலை எலி, தக்காண புற்றுநோய்” என்றும் அழைத்தார்.

சிவாஜி 'சத்ரபதி'

இதன் பின் கி.பி 1674 ம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் 

முடிசூட்டும் விழா நடைபெற்றது.

சிவாஜி 'சத்ரபதி' என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.

பிறகு ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் கர்நாடக படையெடுப்பை 

மேற்கொண்டார்.

செஞ்சி, வேலூர்  மற்றும் பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றினார்.

இவரது பேரரசு மைசூர், கொங்கன் மற்றும் மாஹாராஷ்டிரா வரை 

பரவியிருந்தது.

கி.பி 1680 ம் ஆண்டு சிவாஜி ரெய்காரில் உயிர் துறந்தார்

நிர்வாகம்-'அஸ்டபிரதான்'

நிர்வாகத்தில் தனக்கு உதவி செய்ய 8 பேர்களைக் கொண்ட அமைச்சரவை 

ஒன்றை அமைத்தார்.

இது 'அஸ்டபிரதான்' என்று அழைக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சரும் ஒரு துறைக்கு பொறுப்பாவார்.

பேரரசு மாநிலங்களாக அல்லது பிராந்தியங்களாக

பிரிக்கப்பட்டிருந்தது.

இவை பர்கானாக்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன

சிவாஜியின் பேராசு சுயராஜ்யம்" என்று கூறப்பட்டது.  


பிஷ்வா(பிரதம அமைச்சர்)

 

மந்திரி கால்முறை அமைச்சர்)

சச்சிவா (உள்துறை அமைச்சர்)

சுமந்த் வெளியுறவு அமைச்சர்

சேனாதிபதி (இராணுவ அமைச்சர்)

அமத்தியாநிதி அமைச்சர்)

பண்டிட்ராவ்(சமயத் தலைவர்)

நியாயதீஷ்நீதி துறை)

வருவாய்த்துறை நிர்வாகம்

சிவாஜி ஜமீந்தாரி முறையை ஒழித்தார்.

விவசாயிகளிடம் நேரிடையான தொடர்பை ஏற்படுத்தினார்.

நிலங்கள்  அளக்கப்பட்டு நிலத்தீர்வை விதிக்கப்பட்டது .

விளைச்சலில் ஐந்தில் இரண்டு பகுதி அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதைப் பணமாகவோ, தானியமாகவோஅளித்தனர்.

நிலவரித் திட்டம் அக்பர் காலத்தில் ராஜாதோடர்மால் பின்பற்றிய 

முறையை ஒட்டி அமைந்திருந்தது.

சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன.

நீதித்துறை

இந்துமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி மேற்கொள்ளப்பட்டது.

கிராமங்களில் வழக்குகளைத் தீர்த்து வைக்க  பட்டேல் என்ற

அதிகாரி குற்றவியல் அதிகாரி இருந்தார்.

அமைச்சரவையில் ஓர் உறுப்பினரான நியாயதீஷ் என்ற அதிகாரி

அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மேல்

விசாரணை செய்தார்.

இராணுவம்

 

சிவாஜி சிறந்த வீரராகவும், இராணுவத் தளபதியாகவும்

கட்டுப்பாடான நிரந்தர இராணுவத்தைப் பராமரித்தார் .

இராணுவத்தில் காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப் படை, யானைப்படை 

ஒட்டகப் படை மற்றும் கப்பற்படை இடம் பெற்றிருந்தன. 

இராணுவ நிர்வாகத்தில் கோட்டைகள் முக்கிய அங்கம் வகித்தன. 

இராணுவ முகாமில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

ராணுவம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது

விளைச்சலுக்கு சேதம் ஏற்படுத்தத் தடை இருந்தது.  

இவரது ஆட்சி முகலாயர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது

தனது தந்திரமான நடவடிக்கைகளின் மூலம் மராட்டியப் பேரரசை புகழின் 

உச்சநிலைக்கு கொண்டு சென்றார்.

வழித் தோன்றல்கள்

சிவாஜியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சாம்பாஜி

பேரரசராகப் பொறுப்பேற்றார்.

ஔரங்கசீப் பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவை கைப்பற்றிய பிறகு

சாம்பாஜி மற்றும் அவருடைய மகன் ஷாகுவை கைது செய்தார்.

சாம்பாஜி சிறையிலேயே கொல்லப்பட்டார்

பின்னர் சிவாஜியின் மற்றொரு மகனான ராஜாராம்  மராத்திய

பேரரசராகப் பொறுப்பேற்றார்

ராஜாராமின் மரணத்தைத் தொடர்ந்து அவரது  மனைவி தாராபாய்

தனது சிறுவயது மகனான இரண்டாம்  சிவாஜியை மன்னராக்கி

நிர்வாகத்தை தானே மேற்கொண்டார்.

முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முதலாம்

பகதுர்ஷா பொறுப்பேற்றார். இவர் சிறையில் இருந்த ஷாகுவை

விடுதலை செய்தார்.

இதனால் ஷாகு மற்றும் தாராபாய் இடையே  உள்நாட்டுப் போர்

தோன்றியது.

இதில் தாராபாய் தோற்கடிக்கப்பட்டு ஷாகு மராத்திய பேரரசராக

பொறுப்பேற்றார்.  

 இதற்கு பாலாஜி விஷ்வநாத் என்பவர் காரணமாக விளங்கினார். எனவே 

அவரை 'பிஷ்வா" அல்லது "பிரதம அமைச்சராக* ஷாகு நியமனம் செய்தார்.  

சிவாஜியின் வழித்தோன்றல்கள் திறமை குறைந்தவர்களாக

காணப்பட்டதால் பீஷ்வா மராத்திய பேரரசின் ஆட்சியாளரானார்.

இவர்கள் உண்மையான ஆட்சியாளர்களாகவும் திறமையான

நிர்வாகிகளாகவும் திகழ்ந்தனர்.

பீஷ்வாக்கள்

மராத்திய பேரரசில் பிரதம அமைச்சர்கள் பீஷ்வாக்கள்

என்றழைக்கப்பட்டனர் கிபி 1713 ம் ஆண்டு பீஷ்வாக்களின் ஆட்சி

தொடங்கியது.

பீஷ்வா பாலாஜி விஸ்வநாத் (கி.பி. 1713- கி.பி 1720)

 

மராத்திய மன்னர் ஷாகுவின் ஆட்சிக்குப்பின் முதல் பீஷ்வாவாக

பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார்.

இவர் பீஷ்வா பதவியை பரம்பரையாக்கினார்.

சௌத் சர்தேஷ்முகி போன்ற வரிகளை வசூல்  செய்தார்.

மராத்திய பேரரசின் பெருமையை மீண்டும் புதுப்பித்தார்.

கி.பி 1720 ல் மரணமடைந்தார்.

பீஷ்வா பாஜிராவ் (கி.பி 1720- கி.பி 1740)

பாலாஜி விஸ்வநாத்தின் மரணத்திற்கு பிறகு அவரது மகன்

பாஜிராவ் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்.

பீஷ்வாக்களில் இவர் தலைசிறந்தவர் .

போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து பஸ்சின், தானா மற்றும் சால்செட்

போன்ற இடங்களை கைப்பற்றினார்.

இவரது காலத்தில் மராத்திய

பேரரசு வலிமை மிக்கதாக விளங்கியது.

பீஷ்வா பாலாஜி பாஜிராவ்(கி.பி1740 - கி.பி 1761)

இவர் மூன்றாவது பீஷ்வா ஆவார்.

தனது உறவினரான சதாசிவராவ் என்பவரின் வழிகாட்டுதலின்

பேரில் மராத்திய பேரரசின் பெருமையையும், புகழையும்

நிலைநாட்டியவர்.

பஞ்சாபைக் கைப்பற்றி மராத்தியக் கொடியை பறக்கவிட்டார்.

மராத்திய பேரரசு புகழின் உச்ச நிலையை அடைந்தது. அப்பேரரசு

அகமது ஷா அப்தாலியின் படையெடுப்பினால்  சீர்குலைந்தது.

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்