பண்டைய தமிழரின் கல்வி
பண்டைய
தமிழரின் கல்வி
கல்வி தற்காலத்தில் மட்டுமல்லாமல் பண்டைய காலத்திலும்
மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தமிழ் நூல்கள் பல
சங்க காலத்தில் தான் எழுந்தன.
சங்க நாளில் ஏறத்தாழ 500 புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களில் பலர் அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
பெண்டிரும் பாடல் புனைந்து கல்வி கற்றவர்களாக இருந்துள்ளனர்.
குறவர் குடி பிறந்த
குறியெயினியும் இளவெயினியும் குயவர்
குடிப்பிறந்த வெண்ணிக் குயத்தியும் சிறந்த புலவர்களாக
விளங்கியுள்ளமையும் அறிய முடிகின்றது.
சங்க இலக்கியம் பாடிய பெண்பாற்புலவர்கள் மட்டும் மொத்தம் 30
பேர் .
பள்ளிக்கூடங்கள்
அரசுகள் வந்து பள்ளிகளை நடத்தியதாக அறிய முடியவில்லை
அனைத்தும் திண்ணை பள்ளிகளாக இருந்திருக்கலாம்
ஆசிரியர்களாக மதுரை கணக்காயனார் என்ற புகழுடன் அறியப்பட்ட
நக்கீரரின் தந்தையும், மதுரை ஆசிரியர் நல்லந்தவனார் என
ஆசிரியர் பெயர் சேர்த்து அழைக்கப்பட்டனர்.
குலபதி
நக்கண்ணனார் என்பவர் குலபதி என்றே அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் பெரும் எண்ணிக்கையிலான அதாவது பத்தாயிரம்
மாணவர்களுக்குக் கற்பித்தார். 10000 மாணவர்களுக்குக் கல்வி
போதித்ததால் அவர் குலபதி என அழைக்கப்படுகிறார்.
எண்ணும் எழுத்தும்
ஆசிரியர்கள் எண்ணையும் எழுத்தையும் கற்பித்தனர். எண் என்பது
கணக்கையும் எழுத்து என்பது கணக்கு அல்லாத பிறவற்றையும்
குறிக்கும்.
வாயினால் வகுத்த
பக்கம் கையினால் வகுத்த பக்கம் என்று
தொல்காப்பியர் ஏட்டு கல்வியையும் தொழிற்கல்வியையும்
தனித்தனியே பிரித்துக் காட்டுகின்றார்.
பனை ஓலை
பனை ஓலையே அன்றைய காலத்தில் நூலாகப் பயன்பட்டது.
எழுத்தாணியைக் கொண்டு ஓலையில் எழுதுவர்.
எனவே இன்றைய தாள்போன்று அன்று ஓலை இருந்தது. எனவே
ஓலை விற்கும் கடையும் இருந்திருக்கலாம் என்பர்.
ஓலை கடையை வைத்திருந்த புலவரை ஓலை கடையத்தனார்
என்று அன்று குறிப்பிட்டனர்.
சுவடியையும் உணவும் எழுத்தாணியும் உடையும் அளித்தலை
சிறந்த அறம் என்று ஏலாதி செய்யுள் ஒன்று குறிப்பிடுகிறது.
கல்வி ஒரு கால எல்லையில் அடங்குவதன்று என்றும் அது
எல்லையற்ற பரப்புடையது என்றும் வாழ்நாள் முழுவதும் கற்க
வேண்டும் என்றும் புலவர்கள் அந்நாளில் வலியுறுத்தினர் .
கல்வி கரையில கற்பவர் நாள் சில , மக்களைக் கல்லா வளர
விடல் தீது போன்ற அடிகள் கல்வியின் சிறப்பை உணர்த்தும்.
சாதியும் கல்வியும்
கல்வி மட்டுமே சாதி வேறுபாட்டைக் களையக்கூடிய கருவி என்று
கருதினர்.
பாண்டிய மன்னன் கல்வியை வற்புறுத்தி பாடிய செய்யுள் ஒன்று
புறநானூற்றில் உள்ளது.
ஆசிரியருக்கு உற்றவிடத்தில் உதவியும் மிகுதியாக பொருள்
கொடுத்தும் பிற்றை நிலை முனியாமலும் கற்க வேண்டும்.
அவ்வாறு கல்வி கற்பவனை தாய் தன் பெற்ற பிள்ளைகளுள்
மிகுதியாக விரும்புவாள்.
அறிவுடையோன் வழியில் அரசும் செல்லும் என்றும் வேற்றுமை
தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பார்
ஒருவனும் அவன் கண்படுவான் என்றும் அப்பாடலில்
பாண்டியன் குறிப்பிட்டுள்ளான்.
திருவள்ளுவர்
திருவள்ளுவர் கல்வி கல்லாமை கேள்வி முதலான
அதிகாரங்களில் கல்வியின் பெருமையை நமக்கு
வலியுறுத்துகின்றார்.
கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதும் அவ்வாறு
இருக்க ஏன் ஒருவன் இறக்கும் வரை கல்லாமல் இருக்கிறான்
என்றும் கூறுகிறார்.
எண்ணும் எழுத்தும் இரு கண்கள் என்றும் கற்பவருக்கு இருப்பதே
கண்கள் கல்லாதவருக்கு இருப்பது புண் என்றும் கல்லாதவர்கள்
விலங்குக்குச் சமமானவர்கள் என்றும் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்கள் தவிர மீத நூல்கள்
அனைத்தும் கல்வி பற்றிய செய்திகளை கூறுகின்றன நாலடியார்
நெஞ்சத்து நல்லம் யாம் எனும் கல்வி அழகே அழகு என்று
கல்வியை அழகில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.
இனியவை நாற்பது பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே என்று
கூறுகிறது .
கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை என்றும் நல்ல
மாணாக்கன் என்பவன் எப்போதும் கேட்டதை மறக்காதவன் என்றும்
கருத்துகள் காணப்படுகின்றன.
பழமொழி நானூறு என்னும் நூல் ஆற்றவும் கற்றவர் அறிவுடையார்
அவர் செல்லாத நாடில்லை அந்நாடு அவருக்கு வேற்று நாடாகாது
அவருடையது என்று கூறுகிறது.
கல்வி கற்றவனுக்கு ஆற்றுணா வேண்டுவது இல் எனும்
பழமொழியைக் கூறுகிறது.
கற்றலின் கேட்டலின் நன்றே நன்றே, குலவிச்சை
கல்லாமல் பாகப்படும், பாம்பறியும் பாம்பின் கால் என்பது போல
புலவை மிக்க வரை சரியாக உணர்தல் அத்தகையோருக்கே சாலும்
என்கிறார்.
கல்வி என்பது இன்று உத்தியோகம் பெறுவதற்கான ஒன்றாக
இருப்பினும் இதை அறியாத பண்டைய தமிழர் கல்வியை வீடு
பேரளிக்கும் மருந்தாகவேக் கருதினர்.
எண்கள்
ஒன்று முதல் கோடி
ஈராக எண்களை அறிந்திருந்தனர்.
தாமரை, ஆம்பல், வெள்ளம் எனும் சொற்களை ஆண்டுள்ளனர்.
சிற்றளவும் குறிக்கப்பட்டுள்ளது .
அவர்கள் அளவுகளில் நாழி தூணி பதுக்கு எனும் அளவுகள்
அறிந்திருந்தனர் .
சிலம்பில் காதம் காவதம் என்பவும் மணிமேகலையில்
யோசனையும் குறிக்கப்பட்டுள்ளமையை காணலாம்.
எண்ணும் எழுத்தும் தவிர வானியல், மருத்துவம், இசை,ஓவியம்,
சிற்பம், நாட்டியம் முதலியவை பற்றிய கல்வியும் பண்டைய
காலத்தில் சிறந்தது.
நூல்கள்
ஓவியச் செந்நூல் என்று
ஒன்று இருந்ததாக மணிமேகலை
கூறுகிறது.
இதேபோன்று நெடுநல்வாடை கட்டிட நூல் பற்றி குறிப்பிடுகிறது .
இசை நூல் பற்றி தொல்காப்பியம் யாழின் மறை என்று
குறிப்பிட்டுள்ளது.
மருந்து வானியல் ஆகிய பற்றிய செய்திகள் தனித்தனியே
நூல்களில் ஆராயப்பட்டுள்ளன.
சமண பௌத்த மதத்தினர் தம் பள்ளிகளில் இருந்து கொண்டு கல்வி
அளித்தனர் இதனாலேயே பள்ளி எனும் சொல் கல்வி
நிலையத்தைக் குறிப்பதாக மாறியது.
இடைக்காலத்து வடமொழி கல்வி தமிழில் காப்பியங்களும் அணி
நூல்களும் வளர வாய்ப்பளித்தனர் நாயக்க மன்னர் காலத்தில்
கிறிஸ்தவ பாதிரியார்கள் பள்ளிகளை வைத்து நடத்தினர்.
எளிய மக்கள் இதனால் பயன் பெற்றனர் ஆங்கிலேயர் காலத்தில்
தான் முறையான பள்ளிகள் தோன்றி புத்துலகை உலகிற்கு
அளித்தது.எண
.
கருத்துகள்
கருத்துரையிடுக