சங்க காலத்தில் உடை - ஆடை
சங்க காலத்தில் உடை - ஆடை
குறிஞ்சி முல்லை நிலத்தில் வாழ்ந்த பெண்கள்
பூவையும் தழைகளையும் அணிந்தனர்.
நகர மக்கள் பஞ்சாலும் பட்டாலும் ,ஒருவகை மலை எலியின் முடியாலும் வேறு சில விலங்குகளின்
முடியாலும் ஆன ஆடைகளை நெய்து
அணிந்தனர்.
ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டும் வழக்கமும் இருந்தது.
ஆண்கள் ஆடைகள் :
உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் குறைவான
ஆடையே அணிந்தனர் .
ஆண்கள் மேலாடை ஒன்றும் இடையில் ஒரு ஆடையும்
அணிந்திருந்தனர்.
கஞ்சுகம்:
மேல் சட்டை கஞ்சுகம் எனப்பட்டது.
இன்றுபோல் அக்கலாத்தில்
எல்லோரும் மேல் சட்டை அணியவில்லை . சிலர்
மட்டும் அணிந்தனர்.
அரண்மனை பொற்கொல்லன் சட்டை அணிந்திருந்தான்.
மன்னரின் அரண்மனையில் பணிபுரிந்த யவனர்கள் எனபப்படும்
அயல் நாட்டினரும் சட்டை அணிந்திருந்தனர்.
வீரர்கள் நீல நிறத்தில் , பூ வேலைப்பாடு அமைந்த கச்சையினை அணிந்திருந்தனர்.
பெண்களின் ஆடைகள்:
பெண்கள் மேலாடை அணியும் பழக்கம் அக்காலத்தில்
இல்லை.
சந்தனத்தால்
தொய்யில் எழுதி மறைத்தனர்.
மலர்களைக் கொண்டும் மூடினர்.
இடுப்பில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து அதன் மேல்
பூவால் ஆன துகிலை(ஆடையை) சுற்றி
இருந்தனர்.
புதிதாக மணமான பெண்கள் தம்மை புதிய ஆடையால்
மூடிக்கொண்டனர் .
வெண்மை நிற புடவையை அணிந்து கொண்டு பெண்கள் பந்து
விளையாடியுள்ளனர் .
ஆடைகளின் நேர்த்தி:
சிவந்த நிறத்தால் ஆன
புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன.
பாம்பின் சட்டை போன்றும் மூங்கிலின் உள்ளே உள்ள வெண்மையான தோல் போலவும்
பூங்கலிங்கம் என்னும் ஆடை இருந்தது.
பால் ஆவியைப் போல மென்மையான ஆடைகள் காணப்பட்டன.
இந்திரக் கோபப் பூச்சியைப் போல ( வெல்வெட் பூச்சி )
சிவந்த பூவாடைகள் இருந்தன.
நூலாக் கலிங்கம்:
பட்டாலான ஆடையை நூலாக் கலிங்கம் என்றனர்.
பருத்திப் பெண்டிர் :
கணவனை இழந்த பெண்கள் நூற்கும் தொழில் செய்தனர். எனவே
அவர்களைப் பருத்திப் பெண்டிர் என அழைத்தனர்.உறையூரிலே மிகவும் மென்மையான மஸ்லின் துணிகள் நெய்யப்பட்டதாக
பெரிபுளுஸ் கூறுகிறது.
பட்டுப் புடவைகளுக்குக்
குஞ்சங்களை அமைத்தனர். அவ்வாறு செய்பவர்கள்
வம்புநிரை முடிநர் எனப்பட்டனர்.
துணிகளை மண்ணால் வெளுப்பவர் மண்ணார் எனப்பட்டனர் . மணணார்களே பின்னாளில் வண்ணார்கள் என்றானர் .
கருத்துகள்
கருத்துரையிடுக