சங்க காலத்தில் உள்நாட்டு வாணிபம்
சங்க
காலத்தில் உள்நாட்டு வாணிபம்
சங்க காலத்தில் வெளிநாட்டு வாணிபம் எவ்வாறு சிறப்புடன்
திகழ்ந்ததோ அது
போன்று உள்நாட்டு வாணிபமும் மிகவும்
சிறப்புடன் வளர்ச்சியுற்றிருந்தது.
பொருள்களைக் கொடுத்து அவர்களுக்குத் தேவையான
பொருள்களை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொண்டனர்.
படகில் மீன்பிடிக்கச் சென்ற பரதவர்களுக்கு அவன் மகள் உப்புக்கு
ஈடாக மாற்றிக் கொண்டு வந்த வெண்ணல் சோற்றினை அயிலை
மீன் குழம்புடன் கொடுத்த செய்தியும் அகநானூற்றில்
காணப்படுகிறது.
பட்டின பாலையில் உப்பு வணிகம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
படகில் உப்பினை ஏற்றிச்
சென்று விற்றமையும் அறிய முடிகிறது .
திரும்பி வருகையில் படகு நிறைய வெண்ணல் இருந்ததாக
கூறுகின்றனர்.
தேனையும் நெய்யையும் கிழங்கையும் கொடுத்து மீனின்
கொழுப்பையும் நரவத்தையும் பெற்றுக் கொண்டனர்.
கரும்பையும் அவலையும் கொடுத்துக் கள்ளையும் மான்
இறைச்சியையும் பெற்றுக் கொண்டனர்.
முள் போன்ற
பற்களை உடைய பாணர் குலத்துப் பெண்கள்
கொடிரு எனும் மீனை அகன்ற பெரிய வட்டிலில் எடுத்துச் சென்று
அவற்றை விற்று அவ்வட்டி நிறைய பெரிய பயிறுகளை நிறைத்துக்
கொண்டு வந்த செய்தியும் காணப்படுகிறது.
உமணர்கள்
பெரிய வண்டியில் உப்பை ஏற்றிக் கொண்டு உள்நாட்டுக்குள்
சென்று
விற்பவர்கள். உமணர்களை உமணச் சாத்துகள் என்று அழைத்தனர்.
இவர்கள் கள்வர்களுக்குப் பயந்து கூட்டம் கூட்டமாகச் சென்று
வாணிபம் செய்த செய்தியும் அந்த காலத்தில் காணப்படுகிறது. வம்பலர்
வம்பலர் வெளிநாட்டுக்காரர்களாக இருக்க வேண்டும்.
இவர்கள் மலையில் கிடைக்கக்கூடிய பொருள்களையும் கடல்
படுப்பொருள்களையும் வாங்கி விற்றவர்கள்.
கால்களில் அடி மூழ்குமாறு செருப்பு அணிந்திருந்தனர்.
உடலை கவசத்தால் மூடி இருந்தனர் .
அங்காடிகள்
பெரிய நகரங்களில் அங்காடிகள் இருந்தன.
பகலில் நடக்கும் அங்காடிக்கு நாளங்காடி என்றும் இரவில்
நடக்கும்
அங்காடிக்கு அல்லங்காடியும் என்றும் பெயர்கள் தரப்பட்டன.
எந்தக் கடைகளில்
என்ன பொருள் விறப்பார்களோ அதற்கு ஏற்றார்
போல் அந்தக் கடையில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இரவு நேரத்தில் கொடிகளுக்குப் பதிலாக வண்ண விளக்குகள்
மின்னின.
அங்காடிகளில் சங்கறுத்து வளையல் செய்பவர்கள், மணிகளில்
துளையிடுபவர்கள், பொன்னை உரைத்துத் தரம் காண்பவர்கள்,
பட்டு-பருத்தித் துணிகளை விற்பவர்கள்,கண்ணுள் வினைஞர்கள்,
துணிகளின் ஓரங்களுக்குக் குஞ்சலம் கட்டுபவர்கள் என்று பல்வேறு
தொழில்கள் செய்பவர்கள் தமிழகத்தில் இருந்தமைக்கான சான்றுகள்
சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன .
அளவைகள்
வணிகர்கள் தராசுகளை பயன்படுத்தியுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்தியது ஞெமன் கோல் எனப்பட்டது.
அது பொன்னை அளவிடும் தராசாகும்.
வள்ளுவர் துலாக் கோலை பற்றிக் குறிப்பிடுகின்றார்.
முகத்தல் அளவைகள் இருந்தன.
தொடி, காசு எனும் அளவுகளும் பேசப்பட்டுள்ளன.
வணிகர்கள் நேர்மையான வாணிபம் செய்ததாக பட்டினப் பாலை
கூறுகின்றது.
தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே கிமு
மூன்றாம்
நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அளவுக்கு வாணிகம் நடைபெற்று
வந்தது.
தமிழகத்தின் ஊர்கள் சில பண்டங்களின் உற்பத்தியில் சிறந்து
விளங்கின.
பாண்டிய நாட்டில் முத்துக்கள் பற்றியும் தாமிரபரணி பாண்டிய
கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துக்களும் மதுரையில்
நெய்யப்பட்ட பருத்தி ஆடை வகைகளும் கௌடிலியரின்
அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
உறையூர் பருத்தி நெசவில் பெயர் பெற்று விளங்கியது.
தமிழகத்து பண்டங்கள் வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே
சென்றன.
தரை வழியாக நடைபெற்ற வாணிபயம் மிகவும் குறைவு எனலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக