அணிகலன்கள்-ஆபரணங்கள் -பெண்கள் -ஆண்கள்- குழந்தைகள்- கொண்டை -தலைக்கோல்
அணிகலன்கள்-ஆபரணங்கள்
பண்டைய காலத்தில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும்
குழந்தைகளும் பல்வேறு அணிகலன்களை அணிந்திருந்தமையை
சங்க இலக்கியங்களின் வழி அறிய முடியும்.
பெண்கள்
தமிழகத்துப் பெண்கள் ஆடைகளால் முழுவதும் மறைக்கப் பெறாத
தம் உடலை அணிகலன்கள் பூண்டு மறைத்தனர்.
மகளிர் பல்வேறு அணிகலன்களை அணிந்திருந்தனர்.
பல்வேறு ஒப்பனைகளை செய்து கொண்டனர். யவனர்கள்
ஏற்றி
வந்து இறக்கிய பொன்னும் மன்னவர்கள் பகைவர்களிடமிருந்து
கவர்ந்து கொண்டு வந்த பொன்னும் நாட்டிலேயே மண்ணைத்
தோன்றியும் அரித்தும் எடுத்த பொன்னும் தமிழகத்தில் எங்கும்
மிகுந்து கிடந்தன.
பொன்னாலான ஆபரணங்களும் முத்தும் பவளமும் இதர மணி
வகைகளும் இழைத்து பலவகையான அணிகலன்கள்
செய்யப்பட்டன.
கைதேர்ந்த கம்மியர்கள் இவ்வணிகளைச் செய்தனர்
சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் பற்றிய செய்தியும்
காணப்படுகிறது.
மகளிர் அணிந்த அணிகலன்கள் சிலவற்றை சிலப்பதிகாரம்
கூறுகின்றது. கால்
விரல் மோதிரம், பரிகாரம், நூபுரம், அரியகம்,
பாடகம், சதங்கை, குரங்குசெறி, இடையில் அணியும் முத்துவடம்,
32 வடத்தால் ஆன முத்துமேகலை , மாணிக்கமும் முத்தும்
இழைத்த தோல் வளையல்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய
சூடகம், செம்பொன் வளை , நவமணி வளை, சங்கு வலையல்கள்
பவள வளையல்கள், வாலை மீன் போன்ற மாணிக்க மோதிரம்
ஆகியவை பெண்களுக்கான அணிகலன்களாக சிலம்பு கூறுகிறது.
இவை மட்டுமின்றி மோசை எனும் மரகதத்தால் ஆன அணிகலனும்
கழுத்தில் அணியும் வீரச் சங்கிலி, நேர்ச் சங்கிலி, பொன்ஞாண்,
அரை நெல்லிக்காய் மணிமாலை, வைரம் இழைத்த குதம்பை எனும்
காதணி, சீதேவியார்
வலம்புரிச் சங்கு, பூரப்பாளை தென்பல்லி
வடபல்லி ஆகிய
அணிகலன்களையும் பெண்கள் அணிந்ததாக
இலக்கியங்கள் கூறுகின்றன.
இடையாபரணம்:
பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை மேகலை, காஞ்சி, கலாபம்,
பருமம், விரிசிகை என ஐவகையாக பிரிக்கப்பட்டு இருந்தது.
காதணி:
பெண்கள் தம் காதுகளைத் தொங்க தொங்க வளர்க்கும் போது
அணிந்து கொள்ளும் காதணிக்கு குதம்பை என்று கூறுவர்.
வளர்ந்த காதில் அணியும் அணிக்கு கடிப்பிணை என்றும்
பெயரிடப்பட்டிருந்தது.
நெல்லைத் தின்ன
வந்த கோழிகளின் மேல் பெண்கள் தம்
குழைகள், காதில் அணிந்திருந்த காதணிகளை கழற்றி எறிந்து
அவற்றை விரட்டிய செய்தியும் காணப்படுகிறது.
வளையல்களில் பலவகையான பூத்தொழில்கள் செய்யப்பட்ட
வளையல்கள் காணப்பட்டன .
அவற்றுள் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டவை.
பெண்கள் கால் விரல்களில் மோதிரம் அணியும் வழக்கம் பண்டைய
காலத்தில் இருந்தது அதுவே இன்றைய காலத்தில் மெட்டி என்ற
ஒன்றாக மாறியிருக்கலாம்.
குழந்தை அணிகலன்கள்
குழந்தை அணிகலன்களின் வகைகளுக்கு அளவே இல்லை என்று
கூறுவர்.
குழந்தைகள் நெற்றியில் சசுட்டியும் பிறையும் மூவடம் கோத்த
பொன் சங்கிலியும்
பூட்டினர்.
கழுத்தில் ஐம்படை தாலியும் புலிப்பல் தாலியும்
அணிவிக்கப்பட்டனர்.
குழந்தைகளின் விரல்களில் சுறா மீனைப் போன்று இடப்பத்தை
போன்று இலட்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்களை
அணிவித்திருந்தனர்.
முத்து மாணிக்கம் உள்ளிட்ட சதங்ககைகள், பொன் இரட்டைச்
சரிகள் கால்களில் அணிவித்தனர்.
மணியும் பவளமும் கோத்த அரைஞாண்களும் இடையில்
அணிவிக்கப்பட்டன.
சதைங்கைகளின் பூட்டுவாய்கள் தேரையின் வாய்போல்
அமைக்கப்பட்டிருந்தன.
பெண்கள் அணிந்த சிலம்புகளில் முத்தையும் மாணிக்கத்தையும்
பரல்களாக இடுவது வழக்கம்.
இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
தமிழகத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள் அயல்நாடுகளுக்கும்
ஏற்றுமதி ஆகின.
கொடுமணம் என்ற ஊரில் செய்யப்பட்ட பொன்னணிகள் மக்களால்
பெரிதும் பாராட்டப் பெற்றன .
தலைக்கோலம்
தலைக்கோலம் செய்து கொள்வதில் பழந்தமிழ் பெண்கள்
விருப்பத்தோடு இருந்தனர்.
கறுத்து நீண்டு நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பிப் பெண்கள்
வளர்த்தனர் .
கொண்டை, குழல், பனிச்சை ,சுருள், முடி என ஐந்து வகையாகத்
தலைக்கோலம் செய்து கொண்டனர்.
கூந்தலில் பலவகையான மலர்களை சூட்டிக் கொள்ளுவர்.
பெண்கள் ஒப்பனைக்கு 100 வகை பூக்கள் பயன்பட்டன .
மாணிக்க மாலை வெண் நூலில் கோத்த மலர்களையும் பெண்கள்
அணிந்திருந்தனர் .
வெறும் கூந்தல் முடிப்பதை பெண்கள் இழிவாக கருதினர்
அதனை குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது.
மகரவாய், வகிர் போன்ற தலையணிகளையும் அவர்கள் அணிவது உண்டு.
தம் கூந்தலுக்கு அகிர் புகையை ஊட்டுவர். அதை இரு
தொகுதியாக பகிர்ந்து பின்னிவார்கள்.
கண்மை
கண்ணாடியில் பெண்கள்
தம் ஒப்பனையை கண்ணுற்று மகிழ்வார்கள்.
இக்காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் பெண்கள் தம்
கூந்தலுக்கு களிமண் தேய்த்து மூழ்கும் வழக்கம் இருந்து
வந்துள்ளது.
பெண்கள் கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வர்.
மை தீட்டும் குச்சியை கோல் என்று பெயர்.
எப்போதும் மைத்திட்ட பெற்றிருந்ததனாலேயே பெண்களின்
கண்ணை சங்க இலக்கியங்கள் உண்கண் என்றே அழைத்தனர்.
மகளிர் நறுமண பாக்கும் வெற்றிலையும் போட்டுக் கொண்டனர்.
ஆடவர் அணிக்கலன்கள்
தலையில் முடி வளர்த்த
செய்தியை நம்மால் அறிய முடிகிறது.
அதைச் சுருட்டி
பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்கு
மேல்
குடுமி சிறிது களையப்பட்டு இருக்கும்
ஆண்மக்கள் மதாணி , முத்துமாலை வெள்ளிக் கம்பியில் கோத்த
பொற்றாமரை மலர்கள் , கை வளையல்கள் ஆகியவற்றை
அணிந்திருந்தனர்.
பார்ப்பன சிறுவரும் குடுமி வைத்திருந்தனர்.
ஆண்மக்கள் தலையில் பூச்சூடிக்கொள்ளும் வழக்கம் உண்டு.
தலையில் சூடும் பூமாலைக்கு கண்ணி என்று பெயர்.
ஆண்கள் தலையில் முக்காடிட்டு கொள்ளுவதும் உண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக